கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.
கலைஞர் பல்கலைக் கழக மசோதா 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்
துணை வேந்தர்கள் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைக் காரணமாக அனுப்பியதாக தகவல்.
கலைஞர் பல்கலைக் கழகம் கும்பகோணத்தில் துவங்குவதில்
சட்டப்பேரவையில் ஏப்ரல் மாதம்.24-ஆம் தேதி 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்த நிலையில்
கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் சட்டப்பேரவையில் கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். அதில் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வர் இருப்பாரெனவும் ,பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றில் தலைமை வகிப்பவராகவும் இருப்பார். வேந்தரின் முன் அனுமதியின்றி, கௌரவப் பட்டங்கள் வழங்க இயலாது. பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுவார்.
துணைவேந்தர் தேடல் குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத உயர் அலுவலரும், சிண்டிகேட் பிரதிநிதியாக, மாநில அல்லது மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவர் எனவும்,
குழுவால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணைவேந்தரை வேந்தர் நியமிப்பார் என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் அந்த நிறைவேற்றப்பட்ட மசோதாவில் இருந்தன.
மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.









கருத்துகள்