மாநிலத்தின் ஆளுநர் கட்டாயம் நடைமுறையை பின்பற்ற வேண்டும்!"
மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கால வரம்பின்றி மசோதா கோப்புகள் கிடப்பில் போடுவதென்பது தான் கேள்வி; ஆளுநர் நிரந்தரமாக ஒரு மசோதாவை கிடப்பில் போட்டால் அதற்கான தீர்வென்ன? ஒப்புதல் அளிப்பது என்பது நீதிக்கு உட்பட்டது தான்; ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய நடைமுறையைபீ பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம்; அதைத் தான் கேள்வி எழுப்புகிறோம்
மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பதில்
‘பலமுறை கூறியும் நீங்கள் கேட்கவில்லை' -உச்சநீதிமன்றம்
“மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் அக்கறை காட்டவில்லை என பலமுறை குறிப்பிட்டு கருத்துக்களையும் கூறியுள்ளோம். இந்த விவகாரத்தில் மோசமான சூழ்நிலை வந்த பின்னர் தான் அதை சரி செய்ய உச்ச நீதிமன்றம் தலையிட்டது”
மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில், 'அரசின் நிர்வாகத்தில் நீதித்துறை தலையிடுவதாக' வாதிட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பதில் மசோதா நிறுத்தி வைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை !
மசோதாக்களை முதல் முறையாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் போதே ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது. அதில் உள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டி திருத்தம் செய்யுமாறு கூறலாம். ஆனால் நிறுத்திவைப்பது என்பது சட்டமன்றத்திற்கான செயல்பாட்டுக்கு எதிரானது. ஒரு மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருத்து.குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்த உத்தரவை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தகவல், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரமில்லை என்றும் அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பம் ஏற்படுமென்றும் மத்திய அரசு குறிப்பிட்டது.
சட்ட மசோதாக்கள் மட்டுமின்றி கட்சித் தாவல் தடைச் சட்டத்திலும் முடிவெடுக்கத் தாமதமேற்படுகிறது.
மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதப்படுத்தினால் அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.
ஆளுநர் ஒரு மசோதாவை நிரந்தரமாக கிடப்பில் போடலாம் என எந்தத் தீர்ப்பிலுமில்லை.
அரசியல் சாசன பிரிவு 200 க்கு விளக்கம் தரும் போது நீதிமன்றம் நேரடித் தீர்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
அரசமைப்புச் சட்டங்கள் சரியாகத்தான் உள்ளன; அதை செயல்படுத்துவதில்தான் சிக்கல்.
குடியரசுத் தலைவர் எழுப்பிய வினாக்கள் மீதான விசாரணையில் 5 நீதிபதிகள் அமர்வு கருத்து.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 143 வது பிரிவின் படி குடியரசுத் தலைவர் ஆலோசனை மட்டுமே கோரியுள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க பயன்படுத்தப்படக்கூடாது என தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி அன்று அளித்த உத்தரவை மாற்றியமைக்காது.
ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்பதை ஒரு மேல்முறையீடாகக் கருத மாட்டோம். நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் பணியில் மட்டுமே ஈடுபடும்" என்று தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் ஒரு 'மிக மோசமான சூழ்நிலையை' தீர்க்க உச்ச நீதிமன்றம் தலையிட்டதாக ஜனாதிபதி குறிப்பு குறித்து அமர்வு தெரிவித்துள்ளது.இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, 2025) வ் 10 முக்கியமான தமிழ்நாடு மாநில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் நடவடிக்கை, 2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆளுநரால் உருவாக்கப்பட்ட ஒரு "மோசமான சூழ்நிலையை" தீர்க்கும் ஒரு வழியாக இருக்கலாம் என்று குறிபபிட்டது.
இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு குறிப்பில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் குறித்து "கருத்தை" வழங்குவது மட்டுமே அதன் நோக்கம் என்று கூறியது. ஜனாதிபதி முதன்மையாக தனக்கும் ஆளுநர்களுக்கும் காலக்கெடுவை விதிக்கவும், மசோதாக்கள் காலக்கெடுவிற்குள் செயல்படவில்லை என்றால் அவற்றுக்கு ஒப்புதலாகக் கருதப்படும் ஒப்புதலை வழங்கவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடுத்த வழக்கில், குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களை நிறைவேற்ற மூன்று மாத காலக்கெடுவை நிர்ணயித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தக் குறிப்பு வெளியிடப்பட்டது.இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள சட்டக் கேள்விகள் குறித்து மட்டுமே நாங்கள் எங்கள் கருத்தை வெளிப்படுத்துவோம், தமிழ்நாடு வழக்கில் தீர்ப்பை வழங்க மாட்டோம்" என்று தலைமை நீதிபதி கவாய், இந்தக் குறிப்பை ஆதரித்து வாதம் செய்த மத்திய அரசு மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் தெரிவித்தார்.
கேரளாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம்.சிங்வி மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் வழக்கறிஞர் சி.கே.சசி ஆகியோர் தமிழ்நாடு தரப்பில் ஆஜரானார்கள். குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பராமரிக்கத்தக்க தன்மைக்கு ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினர். தமிழ்நாடு ஆளுநர் வழக்கின் தீர்ப்பு அரசியலமைப்பின் 141வது பிரிவின் கீழ் அனைவருக்கும் கட்டுப்படுவதாக வாதிட்டனர்.
143வது பிரிவின் கீழ் ஜனாதிபதி பரிந்துரை குறித்து அமர்வு தனது ஆலோசனை அதிகார வரம்பில் வழங்கிய "கருத்தானது" தமிழ்நாடு வழக்கில் "பிணைக்கும்" தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று இரு மாநிலங்களும் சமர்ப்பித்தன. இந்தக் குறிப்பு தமிழ்நாடு தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு அல்லது சீராய்வு மனுவுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று அவர்கள் வாதிட்டனர்."இது போன்ற ஜனாதிபதி குறிப்புகள் நீதித்துறை சுதந்திரத்தில் கடுமையான ஊடுருவல்களை ஏற்படுத்தக்கூடும். மறுஆய்வு மற்றும் தீர்வு காணும் சீராய்வு போன்ற அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ரத்து செய்வதற்கான மறைமுக முயற்சியாக இது பயன்படுத்தப்படலாம்" என மூத்த வழக்கறிஞர் சிங்வி வாதிட்டார்.
ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், குறிப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் சமர்ப்பித்தார்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிருந்தால், குடியரசுத் தலைவர் ஒரு பரிந்துரையை வழங்க முடியாது என்ற நெகிழ்வான விதி அதில் எதுவுமில்லை என்றார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல்முறையீட்டு அமர்வல்ல, மாறாக அதன் ஆலோசனை அதிகார வரம்பில் அமர்ந்திருப்பதாக நீதிபதி சூர்யா காந்த் இரு மாநிலங்களுக்கும் உறுதியளித்தார். "ஒரு தீர்ப்பைப் பற்றி நாம் ஒரு கருத்தைத் தெரிவிக்க முடியும், ஆனால் அதை மீற முடியாது" என்று நீதிபதி காந்த் ஒரு சிறந்த கருத்தை முன்வைத்தார். வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி நேற்று இந்த வழக்கின் விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பி இந்த வழக்கை இன்ஞ ஒத்திவைத்த நிலையில், இந்த வழக்கானது இன்று 21-ஆகஸ்ட்-2025 ல் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஒவ்வொரு பிரச்சினையும் உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. சில பிரச்சினைகள், முதலமைச்சர் மற்றும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு இடையில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆளுநர் மசோதாக்களில் நிறுத்தி வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அரசியல் தீர்வுகள் உள்ளன. அத்தகைய தீர்வுகள் நடைபெறுகின்றன, ஆனால் அது எல்லா இடங்களிலும் இல்லை. எல்லா இடங்களில் மாநில அரசு உச்ச நீதிமன்றத்திற்கு விரைவது இல்லை. முதலமைச்சர் சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார், ஜனாதிபதியைச் சந்திக்கிறார். இந்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, தயவுசெய்து ஆளுநரிடம் பேசி அவர் ஒரு முடிவை எடுக்கட்டும் என்று கூறும் பிரதிநிதிகள் குழுக்கள் உள்ளன. இந்தப் பிரச்சினையை தொலைபேசி மூலம் தீர்த்துக்கொள்ளலாம். அரசியலமைப்பில் ஒரு காலக்கெடு இல்லாத நிலையில், நியாயமான காரணங்கள் இருந்தாலும் அதை நீதிமன்றத்தால் வகுக்க முடியுமா? மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய விவகாரத்தில் கால நிர்ணயம் வேண்டாம்’ என வாதிட்டார் இதனைக் கேட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள், ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு அரசியலமைப்பில் இல்லை எனக் கூறுகிறீர்கள். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஒரு செயல்முறையை வகுக்க வேண்டும். தவறு நடந்தால் தீர்வு காணப்பட வேண்டும், அரசியலமைப்பின் பாதுகாவலர் உச்ச நீதிமன்றம் தான். மசோதா எப்படி செயல்வடிவம் பெறாமல் இருக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்க முடியும்? ஆளுநர் செயல்படாததை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் ஆய்வு செய்யாமல் இருக்க முடியுமா?. அரசமைப்புப் பணியாளர்கள் செயல்படாமல் இருந்தால் நாங்கள் தலையிட அதிகாரம் இல்லையா?’ என்றார். இந்த வழக்கில் தீர்ப்பு வரும் போது நமது செய்தியில் உண்மை நிலவரம் கொண்டு வரப்படும்.ஆளுநர் செய்த காலதாமதம் குறித்து இந்தப் பார்வை இருந்தாலும் UGC நடைமுறை மற்றும் மத்திய சட்டம் குறித்து நடைபெறும் விவாதத்தில் பல்கலைக்கழகம் குறித்த தெளிவான தீர்ப்பு கிடைக்கும்இரண்டு வழக்கும் விசாரணை ஒன்றாக இணைத்துத் தான் நடக்கிறது




கருத்துகள்