நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் தடை
கொச்சின், தனியார் மதுபானக் குடிப்பக விடுதியில் நடந்த இரண்டு தரப்பு மோதலில்,
ஐடி ஊழியரைக் கடத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டதில்
நடிகை லட்சுமி மேனனை கைது செய்யத் தடை
விதித்து, முன் ஜாமின் வழங்கியது கேரளா மாநிலத்தின் உயர்நீதிமன்றம். நடிகை லட்சுமி மேனன் அவரது நண்பர் மிதுன் மோகன் என்பவர் மீது பல்வேறு கடத்தல், கொள்ளை, வழக்குகளில் தொடர்புடையவர் எனத் தகவல். கூலிப்படையைச் சேர்ந்த மிதுன் மோகனுடன் மூன்று தலைமுறை வாரிசு நடிகை லட்சுமி மேனனுக்கு எப்படிப் பழக்கம் ஏற்பட்டது என கேரளா மாநிலத்தின் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர் கோலிவுட்டில் தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை லட்சுமி மேனன், இப்போது மலையாளம், தமிழ் இரண்டிலும் பெரிதாக நடிப்பதில்லை.
இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 24 ஆம் தேதி கேரளாவின் கொச்சின் பேனர்ஜி சாலையிலுள்ள இரவு நேர சொகுசு மது குடிப்பகம் ஒன்றில் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். அங்கு நடிகை லட்சுமி மேனன் தரப்பிற்கும், மற்றொரு இளைஞர்கள் தரப்பிற்குமிடையே மோதல் ஏற்பட்டு இரவு 11 மணி முதல் 12 மணி வரை நடந்த இந்தச் சண்டைக்குப் பிறகு நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஸ் இருவரும், நடிகை லட்சுமி மேனனிடம் சண்டை போட்ட ஐடி இளைஞரை காரில் தூக்கிப்போட்டு, காருக்குள் வைத்து அவரை அடித்து, போகும் வழியில் நடு ரோட்டில் சண்டை போட்டு காரிலிருந்து தள்ளிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் இளைஞரைத் தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன், மிதுன், அனீஸ் உள்ளிட்டோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் மிதுன், அனீஸ் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. காவல்துறையினர் நடிகை லட்சுமி மேனனைத் தேடி வந்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றத்தில் தற்போது முன் ஜாமீன் பெற்றுள்ள்ர் தலைமறைவாக இருப்பது குறித்து மலையாள திரையுலகில் பேசும் நிலையில் இனி விசாரணை கொச்சின் நீதிமன்றத்தில் ஆஜராகி மேற்கண்ட ஜாமீன் மூலம் வெளிவரவேண்டும்.






கருத்துகள்