முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரேஷன் கார்டுகளில் ஆய்வு செய்யாமல் நீக்கப்படும் பெயர்கள் பொறுப்பற்ற அலுவலர்கள் செயல்

ரேஷன் கார்டுகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் பொது விநியோகத் திட்டத்திலிருந்து மானிய விலையில்  உணவு தானியங்களை வாங்குவது


தகுதியுள்ள வீடுகளுக்கு இந்தியாவில் மாநில அரசுகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும் . அவை பல இந்தியர்களுக்கு பொதுவான அடையாள வடிவமாகவும் உள்ளது 

NFSA-வின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் பொது விநியோகத் திட்ட மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறத் தகுதியுடையவை வீடுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும். NFSA-வின் கீழ் இரண்டு வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது.மாநில குடும்ப (PHH) ரேஷன் கார்டுகள், அந்தந்த மாநில அரசு நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் ஒரு உறுப்பினருக்கு மாதத்திற்கு 5 கிலோகிராம் உணவு தானியத்தைப் பெற உரிமை உண்டு.


அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகள் "ஏழைகளிலும் ஏழ்மையான" குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு AAY குடும்பமும் மாதத்திற்கு 35 கிலோகிராம் உணவு தானியங்களைப் பெற உரிமை உண்டு.

"ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்பது இந்தியாவிற்குள் உள்நாட்டு குடியேறிகள் உட்பட அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆதார்அடிப்படையிலான தேசிய ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் திட்டமாகும், இதன் கீழ் பயனாளிகள் இந்தியாவில் எங்கிருந்தும் மானிய விலையில் உணவை வாங்கலாம். உதாரணமாக, ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது தற்போதைய மற்றும் புலம்பெயர்ந்த இடத்திலேயே தனது பங்கைப் பெறலாம், அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் தங்கள் பங்கை அவர்களின் மூல மற்றும் சொந்த ஊர் வீட்டில் பெறலாம். இந்த நிலையில் AAY, PHH ரேசன் கார்டுகளில்  தானாக நீக்கப்படும் பெயர்கள்!  உயிருடன் இருக்கும் நபர்களை இறந்தவர்கள் என நீக்கிய சம்பவமும் நடக்கிறது  இது மக்கள் தங்கள் குடும்ப அட்டையை சரி பார்க்க வேண்டியது அவசியம் தமிழ்நாடு அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனும் ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகிற நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் தாமாகவே ரேஷன் கார்டில் இருந்து நீங்குவதாகவும்,  ஆனால் சில உயிருடன் உள்ள நபர்கள் பெயரை நீக்கம் செய்து அதற்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு பெயர்கள் சேர்ந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர் ரேஷன் கார்டுதாரர்கள். குறிப்பாக குடும்பத் தலைவர்களின் பெயர் மாறுவது உள்ளிட்டவற்றில் கடும் சிக்கலைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர்



.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் விலையில்லா உணவு பொருட்கள், பொங்கல் பரிசுத்தொகுப்பு, கலைஞர் பெயரில் மகளிர் உரிமை தொகை திட்டம் வாங்குவதில் தான் பெயர் நீக்கம் குழப்பம் நடந்துள்ளது. மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு முக்கிய அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் இரண்டு கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. டிஜிட்டல் முறையில் தற்போது அவை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் 7 கோடியே 46 லட்சம் மக்கள் அதில் பயன்பெறுகின்றனர். அந்தியோதயா கார்டு வைத்துள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி, பருப்பு, ஜீனி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கப்படும் அளவு மாறி மாறி அமையும். குழந்தை பிறப்பு, திருமணம் ஆகியவற்றின் மூலம் புதிய உறுப்பினர்கள் ரேஷன் கார்டுகளில் சேர்க்கப்படுவதும், புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்படுவதும் தான் வழக்கம்.


ரேசன் கார்டுகளில் பெயர்களை சேர்க்கும் போது காட்டும் ஆர்வத்தை நீக்குவதற்கு மக்கள் காட்டுவதில்லை. குறிப்பாக குடும்ப உறுப்பினர் யாராவது இறந்தால் அது குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவிப்பதில்லை. இதனால் இறந்தவர்களுக்கும் உணவு பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் நிலையில் பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் ஆகியவை ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் இறந்தவர்களுக்கும் உணவு பொருட்கள் கூடுதலாக வழங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், குடும்பத்தில் யாராவது ஒருவர் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் தானாகவே ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து நீங்குகிறது. அதாவது ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவரது ஆதார் எண்ணை கொடுத்து உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பார்கள். சான்றிதழ் வழங்கப்பட்டு பதிவான உடன் அது தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பப்படும். இதை அடுத்து தானியங்கியாகவே அந்தப் பெயர் நீக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த நடைமுறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் உயிருடன் உள்ள நபர்கள் நீக்கம் செய்து அதை சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சரிசெய்த மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுத்த நிகழ்வு உண்டு. ஆனால் அடிப்படையில் இது ஒரு நல்ல திட்டம் என்றாலும் சில சிக்கல்களையும் மக்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பத் தலைவர் ஒருவேளை இறந்து விட்டால் அந்த ரேஷன் கார்டில் இருக்கும் பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தானியங்கியாகவே யாராவது ஒருவர் குடும்பத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் புகைப்படம் மாற்றப்படுவதில்லை. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.மேலும் புகைப்படத்தை மாற்றவும் அரசு சிவில் சப்ளை அலுவலர்களை நேரில் சந்தித்து முறையிட வேண்டி இருக்கிறது. இதற்கு கால தாமதமும் ஆகிறது. எனவே தானியங்கி பெயர் நீக்கும் முறையைக் கைவிட்டு இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும்  உயிருடன் உள்ள நபர்களை இறந்தவர்கள் என நீக்கம் செய்யக் கூடாது. இதில் பயனாளிகளை அறிவுறுத்தலாம் எனவும், இதன்மூலம் பொதுமக்கள் தாங்களாகவே ரேஷன் கார்டில் பெயர்களை மாற்றி குடும்ப தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என சட்ட ரீதியான செயலாகும் எனக் கூறுகின்றனர் பொதுமக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...