முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குப்பைக் குத்தகை 430 கோடியும் மக்கள் வரிப்பணமும் ஏழைத் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டமும்..

குப்பைக் குத்தகை நானூற்றி முப்பது கோடியும் மக்கள் வரிப்பணமும்.   ஏழைத் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டமும்.


நீங்க எந்த பிரஸ்ஸூ...?'  என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு ஆவேசக் கேள்வி. 

நேற்றிரவு முழுவதும் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பிரபு கட்டிய மாளிகை பரபரப்பாகவே இருந்தது. நள்ளிரவு 1:50 மணியளவில் தான் துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்து அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் உயர் அலுவலர்கள் வெளியே வந்தனர். அமைச்சர் 

சேகர் பாபு பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் மனநிலையிலேயே இல்லை. 'சார் பேச்சுவார்த்தை எப்படிந் போச்சு..' என ஒரு செய்தியாளர் கேள்வியை எடுக்க 'பேச்சுவார்த்தையா. என்ன பேச்சுவார்த்தை..? என ஆரம்பத்திலேயே கேட்டு கடுப்பான மனநிலையில் வினவவே.


திரைப்பட இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் அமைப்பினர் முதல் நாளிலிருந்தே களத்தில் இருக்கின்றனர். அவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில் விதிமுறைகள் மீறியோ அல்லது மீறாமலோ மைக்கை வைத்திருந்தனர். 'திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்றோம்னு தேர்தல் வாக்குறுதி கொடுத்தாரே ' என பத்திரிகையாளர் என மக்கள் அங்கீகாரம் அல்லாத RNI பதிவு பெற்ற நீலம் அமைப்பு சார்பில் வந்திருந்த நபர் கேள்வி கேட்க, 'வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. நீங்க எந்த பிரஸ்ஸூ? என அமைச்சர் திருப்பிக் கேட்க, அவர் 'நீலம்' என்றார். அமைச்சர் சேகர் பாபு கூடுதலாகவே கோபமானார். அது நியாயம் காரணம் பத்திரிகையாளர் கள் கேட்க வேண்டிய கேள்வி அதை அறிமுகம் இல்ங நீலம் பச்சை சிகப்பு மஞ்சள் என கண்டவர்கள் கேட்கும் போது அமைச்சர் கோபம் வருவது இயற்கை தான்.'உங்களையெல்லாம் சந்திக்க நாங்கள் வரவில்லை. பத்திரிகையாளர்களைத் தான் சந்திக்கிறேன்...' என பதில் கூறினார். 

அமைச்சர் சேகர் பாபு இவ்வளவு கோபமாகப் பேசியதன் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம். சமரசப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்கிற தகவல் கிடைத்தது. 'முதலமைச்சரையே திட்டுறீங்க. நாங்க நினைச்சிருந்தா முதல் நாளே கூட்டத்தைக் கலைச்சிருப்போம். அதிமுக கவர்மெண்டா இருந்தா வேற மாதிரி பண்ணிருப்பாங்க"என பேச்சுவார்த்தையில் அமைச்சர் சேகர் பாபு நிறைய விபரங்களைப் பேசியிருக்கிறார். உண்மை தான் எஸ்மா மற்றும் டெஸ்மா என முன் ஆட்சியில் பல உண்டு 

அமைச்சர் சேகர் பாபுவின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தையில் என்னவெல்லாம் பேசப்பட்டது என இரண்டையும் செய்தியாகப் பார்த்தால் பத்திரிகையாளர்கள் ஒரு ஜனநாயக சமூகத்தின் முதுகெலும்பு. அவர்கள் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி, உண்மைகளை வெளிக்கொணர்ந்து, அதிகாரத்தை கேள்வி கேட்கும் பொறுப்பை மேற்கொள்கிறார்கள்.  அனால் அதில் நீலம் போன்ற வர்ணங்கள் வந்த நிகழ்வு தவறோ சரியோ அது ஆராய்ச்சி அல்ல ஆனால், தமிழ்நாட்டில் அமைச்சர் சேகர் பாபு, பத்திரிகையாளரல்லாத  ஒருவரை நோக்கி, "பத்திரிகையாளர்களைத் தான் சந்திக்கிறேன், உங்களை இல்லை" என்று பேசியது, ஜனநாயக மதிப்புகளுக்கு உட்பட்ட செயல் தான் எதிரான செயல் அல்ல என்பதோடு சிலர், பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என  பலரால் பார்க்கப்படுவது தவறு அல்ல சரி. இந்திய பத்திரிகை சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பின் 19(1)(அ) பிரிவில் உறுதி செய்யப்பட்ட உரிமை. இந்த உரிமையை  நீலம் அமைப்பு உட்புகுந்து கேள்வி கேட்பதை பத்திரிகையாளர்கள் என்பதை விட  மக்களின் கருத்து அதை சுதந்திரத்திற்கு எதிரான செயலாக செய்தியாளர் சந்திப்பில் பார்க்க முடியாது. 


அமைச்சர் சேகர் பாபுக்கு பத்திரிகையாளர் யார் உட்புகுந்து வேறு நபர்கள் யார் எனத் தெரிந்ததால் தான் இந்த வினா எழுகிறது.,  

ஜனநாயகம் தழைக்க, பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அமைச்சர் சேகர் பாபுவின் இந்தப் பேச்சு, நீலம் என்று அமைப்பு சார்ந்த தனிநபருக்கு எதிரானது பத்திரிகையாளர்களுக்கு எதிரானதில்லை ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கு எதிரான தாக்குதல்.என சிலர் விமானங்கள் தேவையில்லை.

ஆனால் இப்போது அணைத்து பத்திரிகைகளின் சார்பில் எழும் கேள்வி உள்ளாட்சித் துறை சார்ந்த விவகாரத்தில் அறநிலையத் துறை அமைச்சருக்கு என்ன வேலை ? அமைச்சர் K.N. நேருவை எங்கே காணோம் ? குத்தகை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பேச்சு வார்த்தை நடத்த முதலமைச்சர் சிறப்பு உத்தரவு ஏதேனும் பிறப்பித்துள்ளாரா ? இல்லை அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் கீழ் வருகிறதா ? இல்லை, சென்னை மாநாகராட்சிக்கு அமைச்சர் சேகர் பாபு தான் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாரா ?

இந்தக் கேள்விகுக்கு பதில் வந்ததா அதை அங்கிருந்த செய்தியாளர்கள் வினவினார்களா என்பதே எழு வினா.ஆனால் 

3,500 ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்து, 15 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது பணியாளர்களின் சம்பளம் 23,000 ரூபாய். 

'ஆனால், இந்த மாசத்திலிருந்து 16 ஆயிரம்தான் சம்பளம். விருப்பமிருந்தா வேலை பாரு, இல்லன்னா கிளம்பு'ன்னு சொன்னா நீங்கள் என்ன செய்வீர்கள்?  அதன் காரணமாக அவர்கள் போராடுகிறார்கள். 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ரிப்பன் பில்டிங் வாசலில் இரவு பகலாக அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-ஆம் மண்டலங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள். மொத்தம் 1953 பேர். எல்லோருமே ஏறக்குறைய 15 ஆண்டுகள் பணிபுரிந்து அதிகபட்ச ஊதியமாக 23,000 ரூபாய் பெறுகின்றனர். அந்த நாற்றக் குப்பை அள்ளும் வேலைக்கு இந்த சொற்ப சம்பளம் எம்மாத்திரம்? அதுவும் இது தற்போது பெறும் ஊதியம். இதற்கு முன்பு இதைவிடக் குறைவு. தற்போது பிரச்சனை ஊதிக்ய குறைவு தொடர்பானதல்ல, அவர்கள் அதற்காக போராடவுமில்லை. 

ஜூலை மாதம் கடைசியில் திடீரென இவர்களை அழைத்த மாநகராட்சி உயஙஅலுவலர்கள், ' ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து, உங்களுடைய இரண்டு மண்டலங்களிலும் துப்புரவுப் பணி, Ramky என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இனிமேல் நீங்கள் அந்த நிறுவனத்திடம் வேலை செய்யலாம். உங்கள் சம்பளம் 16 ஆயிரம் ரூபாய்' என்று சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு அதிர்ச்சி. 

சென்னையில் ஏற்கெனவே மண்டலம் 1, 2, 3 மற்றும் 7- பகுதிகளில்  துப்புரவுப் பணி  இதே ராம்கி நிறுவனத்திடம் தான் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே பேசினார். இவர்களை மாநகராட்சியின் கீழ் தொடர்ந்து பணிசெய்ய அனுமதிக்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இப்போது தொழிலாளர்கள் கேட்பதெல்லாம் நீங்கள் சொன்னதை நீங்கள் செய்யுங்கள் என்பதுதான். 

இந்தத் துப்புரவுப் பணியை செய்வது முழுக்க முழுக்க ஆதிதிராவிடர் மக்களே. அதிலும் ஆகப் பெரும்பான்மையினர், அதில் உட்பிரிவான அருந்ததியர் மற்றும் மாதாரி ஜாதியைச் சேர்ந்தவர்கள். சென்னை மாநகராட்சியின் ரிசர்வ் ஆக வென்று தலைவியான தற்போதைய மேயர் பிரியா இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் தான். மாநகராட்சிக் கட்டிடமான ரிப்பன் பில்டிங் வாசலில் தான் இவர்கள் ஒரு வார காலமாகப் போராடுகின்றனர். ஆனால் இதில் அக்கறை செலுத்தி விசாரிப்போம்; சிக்கலைத் தீர்க்க முயல்வோம் என அவர் எதற்கும் முயன்றதாக தெரியவில்லை.  

நாள் ஒன்றுக்கு சென்னை மாநகராட்சி 6150 மெட்ரிக் டன் குப்பைக் கழிவுகளை கையாள்கிறது. பல்லாயிரம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பிரமாண்ட மாநகரத்தின் அன்றாட இயல்பு வாழ்வின் அடிப்படையாக இருப்பது இவர்களே. 

ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ரூபாய் 23,000 என்பதே போதுமானதல்ல. (அதுவும் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு என்பதை நினைவில் கொள்க).  அதையும் குறைத்து, தனியார் வசம் தள்ளிவிட்டால் அவர்கள் எப்படித்தான் வாழ முடியும்? 

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என வைத்துக்கொண்டாலும், குறைந்தபட்சம் அவர்களின் ஊதியத்தையேனும் உத்தரவாதப்படுத்த வேண்டாமா? ஒரு வார காலப் போராட்டதிற்கு எந்த வகையிலும் செவி சாய்க்க மாட்டோம் என்றால் என்ன பொருள்? எண்ணிக்கை பலமோ அமைப்பு பலமோ இல்லாத இவர்கள் தானாகவே சோர்வடைந்து கலைந்துசென்றுவிடுவார்கள் என்பதுதானே? 

யார் இதை சரி செய்ய வேண்டுமோ அவர்கள் அமைதியாக கடந்து செல்வதால் தான், சந்தடி சாக்கில் சின்மயி போன்றவர்கள் உள்ளே வந்து ஸ்கோர் செய்யப் பார்க்கிறார்கள். நமக்காக உழைப்பவர்கள் இந்தப் பணியாளர்கள். நாம் உருவாக்கும் கழிவு குப்பைகளை அள்ளுபவர்கள். நம் தெருவும், சாலைகளும் சுத்தமாக இருப்பதற்காக தங்களை அசுத்தத்திற்கு ஆளாக்கி உழைப்பவர்கள். மழையோ, வெயிலோ, புயலோ, கொரானோவோ நாமெல்லாம் வீட்டில் முடங்கினாலும், நமக்காக வீதியில் இறங்கி வேலை பார்ப்பவர்கள்.

வயிற்றைக் குமட்டி எடுக்கும் நாற்றத்தையும் பொருட்படுத்தாமல், கழிவறைகளை தூய்மை செய்பவர்கள்.

அரசு ஊழியர்களுக்கான எந்த சலுமகைகளும் இன்றி, அத்துப் பெரும் கூலிகளாக அன்றாடம் உழைப்பவர்கள் ஒரு நாள் விடுமுறை என்றாலும் சம்பளத்தை இழக்க வேண்டும்.

இப்படி உழைப்பவர்களின் கூலியை உயர்த்தாவிட்டாலும் பரவாயில்லை. இருப்பதையும் குறைக்காதே என்பது தான்!

’ஆண்டுக்கணக்கில் பணி புரியும் அவர்களை கார்ப்பரேஷன் ஊழியர்களாக நிரந்தப்படுத்தி,  அங்கீகரித்தால் போதுமானது’ என்பது ஒன்றே இவர்கள்  கோரிக்கை.

ஆற்று மணல் படுகைகளையும், மலைகளையும் சுரண்டிக் கொழுக்க வியாபாரம் செய்பவருக்கு தாரை வார்த்தது போல, ஆட்சியாளர்கள் மாநகராட்சியின் நிழலில் உழைத்த வர்கள் 

’’விலைபேசி விற்க பொருளில்லை நாங்கள்! மனித உயிர்கள்! அதுவும் உங்களுக்காக ஓடாய் தேய்பவர்கள் ஐயா! கருணை காட்டுங்கள்’’ எனக் கதறுகிறார்கள்.

மனசாட்சியுள்ள ஒவ்வொரு பத்திரிகையாளரும் இவர்களுக்காக குரல் கொடுப்போம். அவரவர் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்தெந்த வகையில் முடியுமோ, அத்தனை வழிகளிலும் இவர்களின் குரலை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் செல்வோம்.  

அதிமுக ஆட்சியில் இவை நடந்த போது, கொதித்து எழுந்து பேசி, நம்பிக்கை தந்து, ’’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மைப் பணியாளர்கள் துயரமெல்லாம் களையப்படும்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளிகள் இன்றைக்கும் இணையத்தில் உள்ளன.

சமூக நீதி அது சம நீதி என்றால் என்ன? உழைக்கின்ற ஊழியர்களுக்கு உழைப்புக்கான அங்கீகாரத்தை தருவது தான் சமூக நீதி. அதை தர மறுத்து, என்றென்றும் அத்துப் பெரும் கூலியாக அடிமையாக வைத்திருக்க சட்டங்கள் போட்டு, திட்டங்களை செயல்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

அரசு துறைகளில் நிரந்தரமாக பணியிடங்களை ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஒரு அரசாணை எண்115 பிறப்பித்தது தமிழ்நாடு அரசில் தான் என்பது கசப்பான உண்மையாகும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தரமாக பணியிடங்களை அழித்து ஒப்பந்தக் கூலி முறை தொடர்வதற்கு என்றே அரசாணை எண்-152 மற்றும் 139 ஐக் கொண்டு வந்ததும் முதல்வர் மு.க

ஸ்டாலின் ஆட்சியில் தான்! அரசுத் துறைகளில் ஒப்பந்தக் கூலி முறை, அவுட் சோர்சிங், தனியார் மயம், பணிப் பாதுகாப்பின்மையோடு உழைக்கும் ஊழியர்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருப்பது.. ஆகியவை அனைத்துமே யாருடைய அக்மார்க் மூளையில் உதித்த திட்டங்களோ.  அவர்களின் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு  அரசு எதற்கு?

அச்சில் ஏற்றப்பட்ட கொள்கை பிரகடனங்கள், அலங்கார மேடைப் பேச்சுகள், அபரிமிதமான ஊடக விளம்பரங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு அரசை மக்கள்  மதிப்பிடமாட்டார்கள்.  அரசின் செயல் திட்டங்கள் வழியாக மக்களுக்கு கிடைக்கும் அனுபவங்களால் தான் மதிப்பிடுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!எம்ஜிஆர் படப் பாடலில் கூற வேண்டுமானால்," தெருத்தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு...".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...