மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியபோது ;-
"சமஸ்கிருதம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். அது மேலும் வளர வேண்டும் என்றால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்த வேண்டும். மக்களின் அன்றாட தொடர்பு மொழியாக சமஸ்கிருதம் மாற வேண்டும்
அனைவரும் சமஸ்கிருத மொழியைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன், ஆனால் என்னால் அதை சரளமாகப் பேச முடியவில்லை. சமஸ்கிருத மொழியை பாதுகாப்பதும், அதை வளர்ச்சியடையச் செய்வதும் நமது பொறுப்பாகும். சமஸ்கிருதம் நமது உணர்வுகளை செழுமையாக்கும். அந்தப் பழமை வாய்ந்த மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

கருத்துகள்