முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்கும் விண்வெளித் தொழில்நுட்பம்.அமைச்சர் தகவல்

விண்வெளித் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்குகிறது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு


தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். விண்வெளி தொழில்நுட்பத்தில் 'விவசாய மாற்றத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு' என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாகும். ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சவுகான்,  "விண்வெளி அறிவியல் மூலம், இந்தியாவிலும் உலகிலும் மாற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். விவசாயத்தில் தொழில்நுட்பமும் அறிவியலும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம் -  அதை நாம் மேலும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்றார்.


விஞ்ஞானிகளை "நவீன முனிவர்கள்" என்று அழைத்த திரு சவுகான், "நாங்கள் விவசாயத்தையும், அதன் திசையையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் மாற்றியமைத்துள்ளோம். மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம், விண்வெளி அறிவியல் ஒப்பிடமுடியாத பங்களிப்பைச் செய்துள்ளது. பயிர் மகசூல் மதிப்பீடு, பயிர் முறைகள், கோதுமை, அரிசி, கடுகு, பருத்தி, கரும்பு உற்பத்தி, நிலப்பரப்பு மதிப்பீடுகள், வானிலை தகவல் என விண்வெளி பயன்பாடுகள் இப்போது விவசாயத்தின் மையமாக உள்ளன. விண்வெளி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.

முன்னர் வானிலை முன்னறிவிப்புகள் அனுமானங்களை நம்பியிருந்தன, ஆனால் இன்று இஸ்ரோவின் புவி தகவல்  தளம் மழைப்பொழிவு, வறட்சி மற்றும் வானிலை பற்றி ஏறத்தாழ துல்லியமான தகவல்களை வழங்குகிறது என்று அவர் கூறினார். விவசாயிகள் இப்போது இதன் அடிப்படையில் தங்கள் விவசாயத்தைத் திட்டமிடுகிறார்கள். இந்தத் தளம் மண்ணின் ஈரப்பதம் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது, பயிர் சுகாதாரத் தரவை ஒருங்கிணைக்கிறது, துல்லியமான தகவல்களை வழங்குகிறது என்று அவர் கூறினார்.


விவசாயிகளால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களிலிருந்து பூச்சிகளைக் கண்டறியவும், நிகழ்நேர கோதுமை கண்காணிப்பு, விதைப்பு மற்றும் அறுவடை பரப்பளவு மதிப்பீட்டிற்காகவும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று திரு சவுகான் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலையுணர்வு மூலம் பயிர் இழப்பை இப்போது துல்லியமாக மதிப்பிட முடியும். இதனால்,  பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, சரியான இழப்பீட்டை விவசாயி பெறமுடிகிறது  என்று அவர் கூறினார்.


விண்வெளி அறிவியல் உயரும் வெப்பநிலை, புயல்கள் அல்லது வறட்சிகளின் போது சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்க உதவுகிறது, பேரிடர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பில் உதவுகிறது என்று அவர் தெரிவித்தார்.  தகவல்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைய வேண்டும், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம் என்று அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்குவதே எங்களது தற்போதைய சவாலாக உள்ளது.  இதனால் அவர்கள் தங்கள் விவசாய முடிவுகளில் பயனடைய முடியும். நமது விஞ்ஞானிகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார். அரசு மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது விவசாயிகள் பல நடைமுறை கோரிக்கைகளை எழுப்பினர். போலி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். சோயாபீன் வயல்களில், பூச்சிக்கொல்லி பயன்பாடு பயிர்களை எரித்துவிட்டது. இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண விஞ்ஞானிகள் அவசரமாக செயல்பட வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம், நாங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளோம். ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. சிறு விவசாயிகளின் நிலங்களுக்கு பயனுள்ள நடவடிக்கைகள் தேவை, கரும்பு மற்றும் பருத்தியில் வைரஸ் தாக்குதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சோயாபீன் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும்என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்து பெருமிதம் தெரிவித்த திரு சவுகான், "இன்று விண்வெளியில் நமது சாதனைகளால் உலகம் வியப்படைகிறது. விண்வெளி வீரர் திரு சுபான்ஷு சுக்லாவை நான் மனதார வாழ்த்துகிறேன். அவரது வெற்றிகரமான பணி இந்தத் துறையில் விரைவான முன்னேற்றத்திற்குப்  புதிய கதவுகளைத் திறந்துள்ளது. இந்தப் பணி எப்போதும் மனிதகுலத்திற்கு நலம் பயப்பதாகவே இருக்கும்" என்று கூறினார்.

இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம் பழமையானது என்று கூறிய அவர், "நாம் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை, மாறாக உலகிற்குக் கற்றுக் கொடுத்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆர்யபட்டா கணிதம் மற்றும் வானியலின் அடித்தளத்தை அமைத்தார். அந்த மரபை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். சந்திரயான் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்குவது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இன்று நாம் ககன்யானுக்குத் தயாராகி வருகிறோம், மேலும் நமது நாடு வேகமாக முன்னேறி வருகிறது" என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...