முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது சொத்துக் குவிப்பு வழக்கில் PMLA சட்டப்படி அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை

சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசினர் தோட்டப் பகுதியிலுள்ள

சட்டமன்றப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும் பழனி சட்ட மன்ற உறுப்பினருமான செந்தில் குமார் சம்பந்தப்பட்ட விடுதியில் கடமை செய்த மத்திய காவல் துறை மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் மீது அத்துமீறி நுழைந்ததாக  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ஊழல் எதிர்ப்பு அரசுக்கு அறவே இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.  மடியில் கனமில்லை எனக் கூறுபவர்களுக்கு வழியில் பயமேன் என்பது தான் கேள்வி?முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் நிலுவையில் இருக்கிறதெனவும். ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படும் நிலையில். இதுவரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் நடந்த வழக்குகள் தீர்வானதா என்பதே கேள்வி.

ED க்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்! என்ற திமுகவினர் நாங்கள் ஊழல் செய்யவில்லை அதை சட்டப்படி சந்திப்போம் எனக் கூறவில்லை மாறாக பாஜகவின் மீது தான் குற்றம் சுமத்தும் நிலையில். கடந்த ஆறு ஆண்டுகளாக அமலாக்கத்துறை செய்து முடித்த  சோதனையில். நீதி வென்றதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ’சட்டவிரோதப் பரிமாற்றத்தை நடத்திய ஜாபர் சேட் வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.


திமுகவின் தற்போது  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.


2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி  இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை வழக்கிலிருந்து திமுக ஆட்சியில் 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில் தான், இந்த வழக்கில் சட்டவிரோதப் பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை  விசாரணை மேற்கொண்டு வந்த வழக்கில் 2022- ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று சென்ற ஐ.பெரியசாமி மீதான விசாரணை. சுமார் 9 மணி நேரம் நடத்தினார்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 


பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அப்போது PMLA -ACT இல்லாமல் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, புதிய சட்டம் மூலம் அங்கீகாரம் பெற்ற நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்ட அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி சென்று வந்த நிலையில் சோதனை வழக்கு விசாரணை வரும் நிலையில் நடத்தியிருப்பது தான் திமுகவின் தற்போதய கவலை 

. இந்த நிலையில் தான் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

’சட்டவிரோதப் பண பரிமாற்றம்’ என சொல்லி அமலாகத்துறை  ’’கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது’’  ஆனால் தீர்ப்பு வந்ததா என்றால் இல்லை என்று  தான் கூற வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.

மூடா ஊழல் வழக்கில், “அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயும் கேள்வி எழுப்பினார்.

சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், "ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்" என உச்ச நீதிமன்றம் காட்டமாகவும் விமர்சனம் வைத்தது.

அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பாஜக பயன்படுத்தி வருகிறது பிரதமர் நரேந்திர மோடி அரசு. என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தும் நிலையில் ’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என  நடவடிக்கைகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் 

சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. ஆளுநர் அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய மத்திய அரசு, ஊழலில் ஏது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எல்லாம் ஊழல் தான் கொள்கை மாற்றம் கொண்டு ஆளும் கட்சி அல்லாது ஆட்சியிலுள்ள சில மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது என்று திமுகவினர் கூறி வருகின்றனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED ஏன் செல்லவில்லை. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பா ! 

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊழல் செய்த திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல்  குற்றத் தோற்றத்தை  மட்டுமே உருவாகுவது தான் புரியாத புதிர்  மத்திய அரசின் ஒரே குறிக்கோளாக மக்கள் பார்வைக்கு வருகிறது. அதனை வைத்து பாஜக தலைவர்களும் தங்களது மனம்போன போக்கில் உண்மையையோ அல்லது அவதூறுகளையோ அள்ளித் தெளிப்பது மட்டுமே ஆனால் நடவடிக்கைகள் யார் மீதும் பாய்ந்ததா  என்றால் இல்லை என்பதே வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. அமலாக்கத்துறை யின் இந்த துருப்பிடித்த ஆயுதங்களை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டே வருகிறது.

தமிழ்நாட்டில்  ஆனால் கர்நாடக மாநிலத்தின் ஊழல் குறித்து நடவடிக்கைகள் வருகிறது. செப்டம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புப் பணியகம் (ACB) ஒழிக்கப்பட்ட பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் கீழ் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மீண்டும் பெற்ற லோக்ஆயுக்தா காவல்துறை, 2023 முதல் கர்நாடகாவில் 218  வரை முறைகேடான சொத்துக்கள் (DA) குறித்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளது மற்றும் 219 மாநில அரசு அலுவலர்களை சோதனை செய்துள்ளது. ஜனவரி 1, 2023 முதல் ஜூலை 31, 2025 வரையிலான காலப்பகுதியில் DA வழக்குகளில் சோதனைகள்

219 மாநில அரசு உயர் அலுவலர்கள் மீது 218 வழக்குகள்.

150 வழக்குகள் தகுதிவாய்ந்த அலுவலர்களுக்கு அடுத்த நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

113 வழக்குகள் விசாரணையில் உள்ளது

67 வழக்குகள் உயர் நீதிமன்றம் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.

34 வழக்குகள் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர்களை ரத்து செய்துள்ளது.

4 வழக்குகளில் 2 வழக்குகளில் மட்டுமே வழக்குத் தொடர அனுமதி கிடைத்தது, மேலும் 2 வழக்குகள் அரசாங்கத்தின் முன் நிலுவையில் உள்ளன. அதுலே ஊழல் தான்.

82 உயர் அலுவலர்கள் வழக்கில் இடைநிறுத்தப்பட்டது

இருப்பினும், இந்த வழக்குகளில் கிட்டத்தட்ட பாதி வழக்குகள் சட்ட சவால்களில் சிக்கியுள்ளன என்று கர்நாடக சட்டமன்றத்தில் MLC கள் CT ரவி மற்றும் DS அருண் எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்தக் காலகட்டத்தில் லோக்ஆயுக்த காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட 218 DA வழக்குகளில், 101 வழக்குகள் (46.3 சதவீதம்) சட்ட சவால்களில் சிக்கியுள்ளன. அதே நேரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் 67 வழக்குகளில் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் 34 வழக்குகளில் FIRகளை ரத்து செய்துள்ளது. 101 வழக்குகளில் பெரும்பாலானவை 'தொழில்நுட்பக் காரணங்களுக்காக' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன என்று லோக்ஆயுக்தா காவல்துறையின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

"ஒரு குறிப்பிட்ட அலுவலருக்கு எதிரான DA வழக்கை விசாரிக்க, 1988 ஆம் ஆண்டு PC சட்டம் பிரிவு 17 இன் கீழ் ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்து கொண்ட உயர் அலுவலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பல வழக்குகளில், ஒரு எஸ்பி, தொடர்ச்சியாக அல்லாமல், ஒரே உத்தரவில் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டதில் நீதிமன்றம் தவறு கண்டறிந்துள்ளது. சில வழக்குகளில், ஒரு குறிப்பிட்ட வழக்கு ஏன் ஒரு குறிப்பிட்ட அலுவலருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை எஸ்பி உத்தரவில் விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்," என்று ஒரு மூத்த அலுவலர் கூறினார். 

இந்த உத்தரவுகள் அனைத்தையும் எதிர்த்து லோக்ஆயுக்த காவல்துறை இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது."சில வழக்குகளில்  ஏற்கனவே சாதகமான உத்தரவுகள் கிடைத்துள்ளன, ஆனால் பல வழக்குகள் இன்னும் உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரவில்லை. இந்த சட்ட சவால்களை தீர்ப்பதில் ஊழல் தடுப்புக் காவல் துறை நம்பிக்கை கொண்டுள்ளோம், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்," என்கிறார் ஒரு உயர் அலுவலர். 

விசாரணையில் தாமதம் 

2023 முதல் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில், லோக்ஆயுக்தா காவல்துறை நான்கு வழக்குகளில் மட்டுமே விசாரணையை முடித்து, வழக்குத் தொடர அனுமதி கோரியுள்ளது, அவற்றில் இரண்டு வழக்குகளில் அரசாங்கம் அதையே வழங்கியுள்ளது, மீதமுள்ள இரண்டில் கோரிக்கை நிலுவையில் உள்ளது என்று தரவு காட்டுகிறது.

விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தை விளக்கிய லோக்ஆயுக்த காவல்துறையின் மூத்த அலுவலர் ஒருவர், 2022 ஆம் ஆண்டில் ஏசிபியிடமிருந்து 1,300க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பெற்றதாகக் கூறினார். அந்த வழக்குகள் மற்றும் புதிய வழக்குகள் மீதான விசாரணை ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதால், தாமதம் ஏற்பட்டது. பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட துறையின் அலுவலர்கள் மீது அதிக சோதனைகள் நடத்தப்படுவது, எங்கள் கள அலுவலர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை மையமாகக் கொண்ட ஒரு செயல்பாடாகும். தற்போது முக்கியமாக நடுத்தர வர்க்கம் சார்ந்த அலுவலர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதால், அவர்களின் கவனத்தை பன்முகப்படுத்தவும், மூத்த அதிகாரிகள் மீது பணியாற்றவும் நாங்கள் அவர்களைத் தூண்டி வருகிறோம். உதாரணமாக, 218 வழக்குகளில், ஒரே ஒரு அகில இந்திய சேவைகள் அலுவலர் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளார், ”என்கிறார். 

கர்நாடகாவின் நிர்வாகத் தலைநகரான பெங்களூரு நகரில் அதிக எண்ணிக்கையிலான DA வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இதைத் தொடர்ந்து பெலகாவி, தும்குரு, மைசூரு மற்றும் கலபுரகி மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா ஊழல் வழக்கில் இதுவரை சிரத்தை எடுக்கவில்லை மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வாங்கும் லஞ்சத்தை ஒழிக்க வேறு துறை தேவைப்படும் நிலையில் ஊழல் செய்து தப்பிக்க அரசே உதவும் நிலை என்பது அரசனே திருடனாக மாறுவது போலத்தான், அது நாட்டின் தரித்திரம். 

பணமோசடி வழக்கில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய  நிலையில், அவரது மகன் செந்தில் குமார், மகள் மருமகன் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் சோதனை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் ஐ.பெரியசாமியின் மகன் அறையில் சோதனை செய்த போது அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஐ.பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அலுழலர்கள் பூட்டிச் சென்றனர். தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாவப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் வருவோர் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகத்தில் அமலாக்கத்துறை அலுழலர்கள் எந்தவொரு அனுமதியுமின்றி உள்ளே நுழைந்தனர்.  அதற்கு அவர்களை சட்டம் அனுமதிக்கிறது பின்னர் ஐ. பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாரின் அறையை திறந்துவிடக் கோரி பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறையினர் கேட்டதை அடுத்து சாவியைக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், சட்டப்பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசன் திருவல்லிக்கேணி காவல்துறையில் சட்டப்பேரவை உறுப்பினரின் வளாகத்திற்குள் உள்ளே அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்கள் நான்கு பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரை அடுத்து அமலாக்கத்துறை அலுவலர்கள் நான்கு பேரும் மீதும் திருவல்லிக்கேணி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர் .

மேலும், அமலாக்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையின் போது சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு துப்பாக்கி ஏந்திய 5 சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் அறையை சோதனை செய்யும் முன்பாகவே ஆதாரத்துக்காக விடியோ காட்சிகளும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...