முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்காவின் "ஹெச்-1பி விசா கட்டண உயர்வு யாரை பாதிக்கும்

அமெரிக்காவில் "ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்த்தியிருப்பது



அமெரிக்க ஆய்வுகளைப் பாதித்து இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும். உலகளாவிய திறமைசாலிகளுக்கான கதவுகளை அடைப்பதன் மூலம் அமெரிக்கா அடுத்தக்கட்ட ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதிய ஆய்வுகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை இந்திய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் குருக்கிராமை நோக்கி நகர்த்துகிறது."

"இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கும் வளர்ந்த இந்தியாவிற்கும் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அமெரிக்காவின் இழப்பு இந்தியாவின் லாபமாக மாறும்." எனப் பலரும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நீண்ட காலமாக ஹெச்-1பி விசாக்களை மட்டுமே நம்பியிருந்தன.

பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள்,  இந்திய வல்லுநர்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. யூஎஸ்சி ஐஎஸ் தரவுகளின் படி இந்த நிறுவனங்கள் தான் அதிகபட்சமான ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளன.


இவ்வளவு அதிக கட்டணம் விதிப்பது அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை கடினமாக மாற்றும் எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஐடி நிறுவன மேலாளர் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஹெச்-1பி விஷாதாரர் சம்பளம் அதைவிட 40 சதவீதம் குறைவாகவே இருக்கும், அதுவே இந்தியாவில் 80 சதவீதம் குறைவாகவே உள்ளது. அதிகமான கட்டணத்தால் நிறுவனங்கள் இந்தியாவிலேயே வேலையை முடிக்க நிர்பந்திப்பார்கள். அதன் மூலமாக ஹெச்-1பி விண்ணப்பங்கள் குறைந்து, உள்ளூர் வேலைவாய்ப்புகளும் குறைந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான திட்டச் செலவுகள் அதிகரிக்கும், புதிய ஆய்வுகளும் குறையும்." என்கிறார். இந்த முடிவு கிட்டத்தட்ட ஒரு தடை விதிக்கப்பட்டதைப் போன்றது தான். நம் இந்திய மக்கள் விளையாட்டுக்காக அங்கு செல்வதில்லை, அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு இழப்புகள் உண்டு, ஆனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்புகள் இருக்கும். சிறிது காலம் கழித்து தான், அமெரிக்கா இதனை உணரும்." என்கிறார்  மற்றொரு நிறுவன நபர்.


அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கெனவே 50 முதல் 80  சதவீதம் வரை உள்ளூர் மக்களைத் தான் வேலைக்கு சேர்ப்பதாகவும் இந்த முடிவால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகாது  எந்தப் பலன்களும் இருக்காது என்கிறார் அஜய். "இந்த நகர்வு விளம்பரத்திற்கானது. இனி இந்தியர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது அமெரிக்க குடிமக்களை வேலைக்கு வைப்பதை விட அதிக செலவானதாக மாறும்" என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலாளர் கரோலின் லெவிட் எக்ஸ் பதிவில் இந்த உத்தரவைப் பற்றி விளக்கியதில்.

இது வருடாந்திரக் கட்டணமில்லை. விண்ணப்பிக்கும் போது செலுத்தும் ஒருமுறைக் கட்டணம் மட்டுமே.

ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்துக் கொண்டு தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வருகிற போது 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டியதில்லை. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல நாட்டைவிட்டு வெளியே சென்று திரும்பலாம். இது அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவால் பாதிக்கப்படாது

இந்த விதி புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய விசாக்களின் புதுப்பித்தல்களையும் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களையும் இந்த உத்தரவு பாதிக்காது எனத் தெரிவித்துள்ள நிலையில் இது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்  இந்தியா மீதான வன்மமாகவே பார்க்கும் பலரும் கூறவது உண்மையா என்பது இனிவரும் காலங்களில் தான் அறியமுடியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...