முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் 15 ஆவது புதிய குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு


செய்யப்பட்டார். அவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.


தோல்வியைத் தழுவி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 767 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் எனவும் பிசி மோதி கூறினார்.   




15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைக் குடியரசு தலைவராக 

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி:

துணை ஜனாதிபதி தேர்தல் - 781 வாக்காளர்கள்...


767 பேர் வாக்களித்தனர்... 15 செல்லாத வாக்குகள்..

NDA வேட்பாளருக்கு 452 பேர் வாக்களித்தனர். I.N.D.I. வேட்பாளருக்கு 300 பேர் வாக்களித்தனர்..

இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார்.

வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவின் 24வது மாநில ஆளுநராக உள்ளார். ஜூலை மாதம் 31ஆம் தேதி, 2024 அன்று  பதவியை ஏற்றுக்கொண்டார்.


முன்னதாக அவர் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2024 ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை மாதம் 2024 க்கு இடையில் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.  அக்டோபர் மாதம் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகராகத் துவங்கி, 1974 ஆம் ஆண்டில்  பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்.


1996 ஆம் ஆண்டில், சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1998 மற்றும் 1999 ஆண்டுகள் என தொடர்ச்சியாக இரண்டு முறை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.


பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

2004 ஆம் ஆண்டு, சி.பி.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.


2004 ஆம் ஆண்டு முதல் 2007  ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இந்த பொறுப்பில் இருந்த போது 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார்.

அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகள் என 3 முறை அதே கோயம்புத்தூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார்.

விளையாட்டு வீரரான சி.பி.ராதாகிருஷ்ணன் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார்.  இந்திய அரசியலமைப்பில் 2வது உயரிய பதவியாகும். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய குடியரசு துணைத் தலைவர் பதவியேற்கும் வரை அவரே பதவியில் தொடரலாம்.

எனினும், குடியரசு துணை தலைவர் என்பவர் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் விளங்குகிறார். மாநிலங்களவையை நடத்துவதும் அவரின் முக்கியமான பொறுப்பாகும்.

மேலும், குடியரசு தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் குடியரசு துணைத் தலைவரே தற்காலிகமாக குடியரசு தலைவராகப் பதவி வகிக்க முடியும்.

உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் குடியரசு தலைவர் தனது வேலையை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் குடியரசு துணைத் தலைவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கான அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கும்.

குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

·

15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் C.P.ராதாகிருஷ்ணன் வெற்றி

துணை ஜனாதிபதி தேர்தல் - 781 வாக்காளர்கள்...

767 பேர் வாக்களித்தனர்... 15 செல்லாத வாக்குகள்..

NDA வேட்பாளருக்கு 452 பேர் வாக்களித்தனர். I.N.D.I. வேட்பாளருக்கு 300 பேர் வாக்களித்தனர்..

இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...