பிரபல நகைக்கடை வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்தை மீட்ட அமலாக்கத்துறை
வங்கி மோசடியில் சிக்கிய, நாதெல்லா சம்பத் நகைக்கடைக்கு சொந்தமான இடங்களில் ரூபாய்.163 கோடி மதிப்புள்ள 27 அசையா சொத்துகளை அமலாக்கத்துறையினர் மீட்டு பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்
சென்னையைச் சேர்ந்த நாதெள்ள சம்பத் நகைக்கடை நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் போலியாக ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கி மோசடி செய்ததாக 2018 ஆம் ஆண்டு எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். துவக்கத்தில் ரூபாய்.250 கோடி எனக் கூறப்பட்டாலும், விசாரணை முடிவில் அந்த நிறுவனம் செய்த மோசடி ரூபாய்.380 கோடி என சிபிஐ பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாதெல்லா சம்பத் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற நிலையில், நிறுவனம் கலைக்கப்பட்டது. வங்கிக் கடன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முன்பணங்களைச் செலுத்தத் தவறியதுடன், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் திவாலாகின. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) இந்த நிறுவனத்தைக் கலைக்க உத்தரவிட்டது, மேலும் அமலாக்கத் துறை (ED) இந்த வழக்கில் சொத்துக்களை மீட்டெடுத்துள்ளது.
நாதெல்லா சம்பத் நகைக்கடை சுமார் ரூபாய் 461.4 கோடி கடனிலிருந்தது. இது வங்கிக் கடன்கள், விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்குச் செலுத்த வேண்டிய மற்ற தொகைகளாகும்.
வாடிக்கையாளர்கள் வழங்கிய முன்பணங்களையும் திருப்பிச் செலுத்தத் தவறியதால், பலரும் பாதிக்கப்பட்டனர்.
2017- ஆம் ஆண்டில் வணிகத்தை மூடிய பிறகு, மே மாதம் 2018- ஆம் ஆண்டில் திவால் நிலைக்கு விண்ணப்பித்தது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT), நாதெல்லா சம்பத் நகைக் கடனைக் கலைக்க உத்தரவிட்டது
அமலாக்கத் துறையால் (ED) ரூபாய் 328 கோடி மதிப்புள்ள சொத்துகள் இணைக்கப்பட்டன, மேலும் அண்மையில் ரூபாய் 163 கோடி மதிப்புள்ள சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
நாதெல்லா சம்பத் நகைக்கடை இனி செயல்படாது, ஏனெனில் நிறுவனம் கலைக்கப்பட்டுவிட்டது.
வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்களின் பணம் மீட்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன.




கருத்துகள்