திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் வட்டம் வாரிசு சான்றிதழ் வழங்க ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி இருவரும் கைது
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன பிடித்துக் கைது செய்தனர்..; திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மேல்முடியனூர் பிரவீன்குமார் (வயது 35). இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வழங்க காலம் கடத்தி வந்த அதே ஊர் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதியை ( வயது 40) சந்தித்தார்.அப்போது பிரவீனிடம் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி, ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன் அது குறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.
அதைத் தொடர்ந்து பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களைஅரசு சாட்சி முனனிலையில் பிரவீன்குமாரிடம் வழங்கினர். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனையின் படி, இந்த ரூபாய் நோட்டுக்களை மேல்முடியனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் பிரவீன்குமார் வழங்கிய போது இந்த நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்த
ஊழல் தடுப்புக் கண்காணிபபு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குணாநிதி மற்றும் உடனிருந்த உதவியாளர் தலையாரி ஏழுமலையை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.






கருத்துகள்