முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

38 பேர் பலியான கரூர் சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

கரூர் சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்.


மிகவும் துயரச் சம்பவம்.  தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி  62 பேர் சிகிச்சை பெறும் நிலையில். ஓய்வு பெற்ற  நீதிபதி  அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது மாநில அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து பத்து லட்சம் ரூபாயும் மருத்துவ சிகிச்சை பெறும் நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவியும்  வழங்க முதல்வர்  அறிவிப்பு.   இந்த நிலையில்  தமிழ்நாடு அரசியலில் அறிஞர் அண்ணாதுரைக்கு கூடிய கூட்டத்தை விட தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடியதை மறுக்க இயலாது.

இன்று மதியம் கூட வெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் தான்  முதலில் சிலர் மயக்கமடைந்த செய்தியைப் பார்த்தோம். ஆனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட எவ்வித காரணங்களும் நடைபெறாத நிலையில் இத்தனை உயிர்கள் பறிபோனதன் உண்மைக் காரணம் அறியப்பட வேண்டும்.



அரசியலில் யார் காலிலும் விழுந்து சில தற்குறி தலைவர் போல பதவிக்காக அதிகாரத்திற்காக எதையும் செய்யத் துணிவார்களென்பது அனைவரும் அறிந்ததே. 

கடந்த 24 மணி நேரத்திற்குள் காசு குடுத்து எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கூட்டிய கூட்டத்தை விட தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டம் இரு பெரும் ஊழல் கட்சிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை தான்




தற்செயலான விபத்தோ திட்டமிட்டு நடத்தப்பட்டதோ இந்த பெருந்துயரத்திற்கு அரசு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒரு கூட்டம் நடக்க அனுமதி அளித்த அரசு அதற்குரிய பாதுகாப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவச் சேவைகளை வழங்க முடியாத  தமிழ்நாடு பொதுப்பணிப்துறையும் காவல்துறையும் இக்கொடுமைக்கு காரணமாகியிருக்கிறது. இந்த நிலையில் பாரதக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவில்துள்ளார்கள் 

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - என பிரதமர் நரேந்திர மோடி

கரூர் மாவட்ட நிர்வாகமும்  காவல்






துறையும்  தான் இதற்கு முதல் பொறுப்பு.. 

அனுமதி வழங்கியவர்களே பொறுப்பு. இசையமைப்பாளர் ஏ ஆர் இரகுமான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய இரண்டு ஆணையர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டார்கள். இப்போது அரசு திட்டமிடல் இல்லை  உளவுத்துறை பணி சரியாக இருந்ததா என்பதும் மற்றும் மருத்துவ மனையில் டாக்டர் இல்லை காவல் பணிக்கு உரிய காவலர்கள் இல்லை காவல்துறை சரியான பாதுகாப்பு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கலாமே  என்பதுமே இப்போது பேசு பொருள்


ஆளுநர் மற்றும் முதல்வர் வரும் போது ரோடு மூழுவதும் காவல் காக்க நிற்கும் காவலர்கள் மருந்துக்குக் கூட இல்லை. நடிகரைப் பார்க்கக் கூட்டம் கூடியது என்பது தோற்பவர்கள் கூறும் காரண மூட்டை.கூட்டம் பாதுகாப்புக்கு காவல் துறை பணி எவ்வளவு

இரண்டாவது விஜய் கட்சி நிர்வாகிகள்..




மூன்றாவது இந்திய ரசிகர்கள் மனநிலை.

கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் 38 பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.

நடிகர் விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்". என பாஜக முன்னால் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்த தகவல்.                                       மேலும் "குளறுபடிகள்தான் உயிரிழப்புக்குக் காரணம்" ரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது

பரப்புரைக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்குக் காரணம்

கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்;

நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூபாய்.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்

என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட தகவல்                  மேலும் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர். எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன்.


மேலும், எனது அறிவுறுத்தலின் படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு  உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு மேற்க்கொள்ளவும்,

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன். என அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாள் இன்று திக்கித்து நிற்போர் ஒருபுறம் இப்படியான சூழலிலும் மவுனித்து மய்யமாய் நிற்போரும் இருக்கிறார்கள். யாரையும் திட்டக்கூட வேண்டாம். ஒரு இரங்கல்,  காயமுற்றோர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு அறிக்கை மட்டுமே வந்துள்ளது.

சரி போகட்டும்.

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தவிர, ஆல் இன்டியா பார்ட்டி முதல் அங்கீகாரம் இழந்திருக்கும் பார்ட்டிவரை வருத்தமும் இரங்கலும் தெரிவித்திருக்கிறார்கள். 

யாருடைய கட்சியின் பிரச்சார நெரிசலில் சிக்கி  உயிரிழந்தார்களோ, அந்தக் கட்சியின் தலைவர் மட்டும் ஒன்றும் பேசாமல் போனது தான் அரசியல் கேள்வி இருந்த போதும்



விஜயகாந்தை கேப்டன் என்று சொன்னால் மட்டும் போதாது, கேப்டன் போல ஒற்றை விரலசைவில்; ஒற்றைக் குரலொளியில்; ஒட்டுமொத்த தொண்டனையும் கட்டிப்போடும் ஆளுமையும் சேர்ந்தே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்தத்தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.



சரி, இதுகூட நாள்கள் பிடிக்கும்...

 இதே கரூரில், இப்படியான பிரமாண்ட மாநாட்டை, ஆளுங்கட்சியான திமுக, கொஞ்ச நாள்களுக்கு முன்னர் நடத்தியது; காயம் இல்லை; மயக்கம் இல்லை; அதிகபட்சமாய் யாரும் சாகவில்லை; எப்படி இது சாத்தியப்பட்டது என்று யாராவது ஒரு கரைவேட்டியை கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம். அதுவும் பிடிக்கவில்லையா, அதிமுக தரப்பில் கேட்டிருந்தால்கூட சொல்லி இருப்பார்கள்...

வழிநெடுக குண்டும் குழியுமாய் சாலைகள் இருந்தது உண்மை அதில் பொறுமை இல்லாத தொண்டர்கள்


ஒரு மகனை இழந்து விட்டேன் ஒரு மகனைக் காணவில்லை என்று கதறும் தாயின் அருகே 38 உயிர்களை இழந்த உறவுகளின் கதறல்கள் சோகம்

பின்னர் விரிவான செய்திகளுடன்   சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்புகளாகிறது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...