விசாரணையின் போது சிறுவன் மரணம் காவலர்களுக்கு சிறை
மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு மதுரை மாநகர் கோச்சடை பகுதி ஜெயா என்பவர் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17) என்ற சிறுவனை 2019 ஆம் ஆண்டு ஏதோ ஒரு குற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தினர் விசாரணைக்கு கூட்டிச் சென்றனர்.
விசாரணையின் போது முத்துகார்த்திக்கை கடுமையாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்ததனால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். தனது மகன் இறப்புக்குக் காரணமான மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜெயா வழக்குத் தொடர்ந்தார்.
விசாரித்த நீதிபதிகள் முத்து கார்த்திக் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
அதன் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் மதுரை எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் உத்தரவு பிறப்பித்தார்.
சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
உடற்கூராய்வின் போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஊழல் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். 2019 ஆம் ஆண்டில் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த வழக்கில், விசாரணை அலுவலராக இருந்த தற்போதைய ஐ.ஜி. ராஜேஸ்வரி மீது முறையாகச் செயல்படவில்லை எனக்கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு மாவட்ட நீதிபதி உத்தரவு
ஐ.ஜி. ராஜேஸ்வரி தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணயத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக உள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் பூ. வடிவேல் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது 216 பக்கத்தில் வழங்கிய தீர்ப்பு தாங்கள் அரசு சேவகர் என்பது மறந்து அதிகாரம் என நினைத்து தவறு செய்யும் காவல்துறை பணியாளர்களுக்கு பாடம் உணர்த்தும்.
















கருத்துகள்