திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி அருகில் , காவல்துறை மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது
வடமாநிலத்து நபர்கள் தங்கி இருக்கிறார்கள். நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது உத்திரப் பிரதேசம் அமரேஷ்பிரசாத் என்ற நபர் காலிடறி கீழே விழுந்திருக்கிறார்.உடனிருந்தோர் மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டுபோன நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அமரேஷ்பிரசாத் இறந்து போயுள்ளார். செய்தியாளர்கள் தரப்பில் கேள்விப்பட்ட வரையில் நடந்தது இதுதான். கூடுதல் தகவலாக, இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் ஐந்துலட்சம் உதவியும், இறந்தவர் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும்; ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவரை எல்லாம் சரி.இறந்த நபரின் சடலத்தை மீட்டு காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணை மேற்கொண்டனர்
முன்னதாக இறந்த நபரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, வடஇந்திய மாநிலத்தின் நபர்கள் போராட்டத்தில இறங்கி;
சாலை மறியலும் செய்த நிலையில்தான்; பாதுகாப்புப் பணிக்குப் போன பத்துக்கும் மேற்பட்ட காவல் பணிக்கு சென்ற காவலர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள். செங்குன்றம் காவல்துறை துணை ஆணையரும், கல்வீச்சில் சிக்கி தலைக் காயத்தோடு, சிகிச்சையில் உள்ளார் . காவலர்கள் மீது இப்படி கொடூரமாகக் கல்வீசி தாக்குதல் நடத்துவது ஏற்கவே முடியாத ஒன்று. மேலும் இப்படியான தாக்குதல் புதிதும் அல்ல.
சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் சம்பவம், இதே காவல் மாவட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடந்தது. சம்பள உயர்வு கோரி போராடியவர்களை, விசாரிக்கப் போன காவலர்கள், மண்டையும் உடைத்து மற்றும் கை கால்கள் தாக்குதல் நடத்திய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திடீரென காவலர்கள் மீது கற்கள் வீசப்பட்டதை அடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை காவல்துறையினர் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பானது. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 காவலர்கள் காயமடைந்தனர் என ஆவடி காவல்துறை ஆணையர் சங்கர் தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 70 நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தப்படுகிறது எனக் கூறினார்.
காட்டுப்பள்ளி குடியிருப்பில் வசித்து வந்த வட மாநிலத்தவர் எண்ணிக்கை நூறுக்கும் கீழேதான் இருந்தனர். காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போதும், மறியலின் போதுமே திரண்டவர்கள் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னே அம்பத்தூர் தொழிற் பேட்டையில் காவலர்கள் மீது தாக்குதல் நடந்தபோதும் கூடுதலாய் பலமடங்கு வட மாநிலத்தவர்கள் திரண்டுவந்து வேலை பார்த்தனர்.
இன்றைய குற்றம் நேற்றைய தொடர்ச்சி.
மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு உள்ளூர் நுண்ணறிவுப்பிரிவு காவலர்கள், முந்தைய சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு நல்லதொரு தகவல் அளித்திருந்தால் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. காவல் துணை ஆணையர் ஒருவரும், செய்தியாளர்கள் நான்கைந்து நபர்களும் காயம்பட்டுள்ளார்கள்.
இப்படி நடப்பது தொடர்கதையாக இருந்து விடக்கூடாது என்றால் கொஞ்சமாவது முன்தயாரிப்பு இருக்கும் உளவுக் காவலர்கள் மட்டும் தான் தேவை. தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் இல்லாத பிரச்சனை இந்த வந்தேரி பிறமொழி நபர்கள் நடத்துவது ஆபத்தின் அறிகுறிகளாகும்.திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவும் செய்தனர் இதில் அறிய வேண்டிய உண்மை சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு.அதற்கு அருகே ஏற்கெனவே எல்&டி துறைமுகம் இருக்கிறது. இதன் ஒரு பகுதியைப் பெற்றுள்ள அதானி குழுமம், தற்போது 330 ஏக்கரில் இருக்கும் இந்தத் துறைமுகத்தை 6,110 ஏக்கருக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசிடம் முன்மொழிந்துள்ளது.
இதில் 2,000 ஏக்கர் அளவுக்கு கரைக்கடல் பகுதியிலும் சுமார் 4,000 ஏக்கர் நிலப்பகுதியிலும் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும். காட்டுப்பள்ளி குப்பம், களாஞ்சி ஆகிய பகுதிகளின் கரைக்கடல் முழுவதும் ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டது. அங்கு நண்டு, இறால், சிறு ஆமை வகைகள் எனப் பலவும் வாழ்கின்றன.இத்திட்டத்தின்படி, அப்பகுதி மணல் கொட்டி நிலமாக்கப்படும். மேலே காட்டப்பட்டுள்ள வரைபடத்தின்படி, அங்கு அமைந்துள்ள கருகாளி, ஆலமரம், லாக்கு, களாஞ்சி, களாஞ்சி கோடை, கோட ஆகிய கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் மணல் கொட்டப்பட்டு நிலமீட்பு செய்யப்படும். அங்கு துறைமுகப் பணிகளுக்கான பல்வேறு கட்டுமானங்கள் நடைபெறும்.
இவற்றுக்கு நடுவே ஒரு பகுதி கடலை ஆழப்படுத்தி அலைத்தடுப்புச் சுவர்கள் அமைத்து கப்பல்கள் வந்து செல்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். நிலப்பகுதியில் இருக்கும் களாஞ்சி கிராமம், காட்டூர் தொடங்கி தெற்கே, ஊர்ணம்பேடு, வயலூர் வரை துறைமுகத்திற்கான கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்.
இதில் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் தான் அதிகம் பணி செய்வார்கள்
இப்படியாக, அப்பகுதி நில அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய துறைமுகத் திட்டத்திற்கு நிகரான விரிவாக்கத்தை மேற்கொள்வதால் காட்டுப்பள்ளியில் தொடங்கி பழவேற்காடு வரை நீண்டிருக்கும் கடற்கரை அபாயகரமான கடல் அரிப்பை எதிர்கொள்ளும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.அதானி துறைமுக நிறுவனத்தின் (APSEZ) காட்டுப்பள்ளி துறைமுகம் 54ஆயிரம் கோடி செலவில் 5200ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதில் பெரும்பாலான பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய வெள்ள வடிநிலமான சதுப்பு நிலம். அங்கு பணி செய்து வரும் வடமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த நபர்கள்.
கருத்துகள்