தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனி நாட்டின், டசெல்டோர்ஃப்
நகரில், Nordex குழும நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதன் காற்றாலை உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர் இந்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,
கொலோன்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், "பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியுள்ளார். சரி , தமிழகத்தின் இந்த அரிய தமிழ்சுவடுகள் எப்படித்தான் ஜெர்மனிக்கு சென்றன. இதை தமிழகத்திலிருந்து திருடிக்
கடத்தி சென்றவர்கள் யாரென கண்டறிய வேண்டும் என்பதே தமிழறிஞர்கள் கருத்து மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் லண்டன் பயணம் சில செய்தி ஊடகங்களில் மிகையாக்ப்படுகிறது. உலக தத்துவங்களை படித்த மேதை தன் முன்னோடிகளை போய் பார்த்து வருவது போல ஊடகங்கள் இந்தப் பயணத்தைப் பெரிதாக்குகின்றன. அதாவது உலக அரசியல் தலைவர்களோடு இவரை இணை காண்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிகவும் போலியானது. முதல்வர் மு.க.ஸடாலின் முதல் லண்டன் பயணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமானது. தற்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20 ஆண்டுகளாக லண்டன் போய்க்கொண்டு தான் இருக்கிறார் போய்விட்டும் வருகிறார். அப்படி 20 ஆண்டுகளாக போய் வந்த சமயத்தில் இல்லாத பெரிது படுத்தல் இந்தப் பயணத்தில் ஏன் நிகழ்கிறது?.குறிப்பாகக் கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆசான் காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய் பார்த்து வருகிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்!அம்பேத்கர் வசித்த வீட்டைப் பார்வையிடுகிறார்! என்பதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து இதையெல்லாம் பெரிய ஆச்சரியமான செயல் போலக் காட்டிக் கொண்டிருப்பது தான் வேடிக்கை முதன்முதலாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தான் மு.க.ஸ்டாலினை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக லண்டன் பாராளுமன்றத்தில் அழைத்துப் போய் முதன முதலாக @tamilsforum ரவி கூட்டிய கூட்டத்தில் பேச வைத்தவர்! அவர் தனிப்பட்ட முறையில் போய்வந்த போதெல்லாம் நடக்காத ஒன்று இப்பொழுது ஏன் பெரிது படுத்தப்படுகிறது. லண்டன் போகும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக இந்த இடங்களைப் பார்த்து விட்டு வருவது எல்லோருக்கும் வழக்கமானது தான். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இவ்விடங்களை லண்டன் செல்லும் பொழுது இயல்பாகப் பார்த்துவிட்டு பலரும் வந்திருக்கிறார்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இப்படியான வாடகை அரங்கில் இலங்கைத் தமிழர்கள் சார்ந்த 20 ஆண்டுகள் முன்பே அவர்கள் பங்கேற்றுள்ளனர்
லண்டனிலிருந்து M25 சாலையில் 62வது மைலில் புராதனமாக அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அல்ல. அதே பல்கலைக்கழக பன்னாட்டு கலாச்சார மையத்தின் ஒரு தனி அரங்கத்தில் அனுமதியுடன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்டின் மீது வைக்கப்பட்டு திறக்கப்பட்டதாக அங்கு உள்ளவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதுபோக ஏற்கனவே ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அமைச்சரான சி. சுப்பிரமணியம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் போன்ற காங்கிரஸ்காரர்கள் 1960 ஆம் ஆண்டுகளில் லண்டன் செல்லும் பொழுது இத்தகைய இடங்களைப் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறார்கள்.வேண்டுமானால் அவர்கள் சென்ற காலத்தில் இல்லாத அம்பேத்கர் இல்லம் மட்டுமே இப்போதைக்கு புதுப்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்லலாம்.
இயற்கையாகவே ஜெர்மனி இங்கிலாந்து கம்பெனி தமிழ்நாட்டில் இருந்தாலும் ஜெர்மனி இங்கிலாந்து போய் தான் ஒப்பந்தம் போடுவோம் என தைரியாக மழுப்பலற்று சொல்லி வரும் நாடகத் தரமதிகம்
விஷயம் இப்படியாக இருக்க ஏதோ ஸ்டாலின் போய் கார்ல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தது தான் உலக அதிசயம் என்பது போல பிரமிக்க வைக்கிறார்கள்.
அதற்காக இந்த காட்சி ஊடகங்கள் சோப்பு விளம்பரங்களைப் போல இந்தக் காட்சியை திரும்பத் திரும்ப காட்டுவதன் மூலம் அதாவது உலக முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வரப் போயிருக்கும் அவர் வெற்றிகரமாக திரும்புவதாகவும் விளம்பரம் செய்து கொண்டிருப்பது உண்மையில் மக்களை ஏமாற்ற அரசியலில் வியாபாரம் செய்து தங்களின் சுயநலத்திற்காக அதிகாரங்களைப் பயன்படுத்திப் பெரும் செல்வங்களைக்குவித்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளாகவே விபரம் அறிந்த பலரும் பார்க்கும் நிலை காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய்ப் பார்த்து வருவது பெரும் முரண் நகை தான்.
திமுகவின் ஐடி விங் மக்களிடமிருந்து ஓட்டுகளைப் பெறுவதற்காக தகுதியற்ற சில மாயைகளைக் கட்டுகிறது அதில் ஒன்றுதான் இது. 20 ஆண்டுகளாக லண்டன் போய் வந்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது நிகழாத ஒன்றை ஏன் இப்போது நிகழ்வதாகக் காட்டிக் கொள்கிறார். இது அரசியல் ரீதியாக யோசிக்க வேண்டியதே.




கருத்துகள்