நியோமேக்ஸ் மோசடியில் காத்திருக்கும் செஃபி மற்றும் அமலாக்கத்துறை அக்டோபர் மாதம்.8 ஆம் தேதி வரை புகாரளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம் அக்டோபர் 8ஆம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்றும் அறிவிப்பு
பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் - நீதிபதிநியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவன பல ஆயிரம் கோடிக்கு முதலீடு வசூலித்து திருப்பி தராமல் மோசடி செய்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் தேனி மாவட்டம் கம்பம், தாமரைக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வாய்ப்பூட்டான்பட்டி, சிவகங்கை மாவட்ட ம் ஒக்கூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தக் கோரி, தேவிகுமார் உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர் அந்த மனு விசாரணையில்
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்புகள் வழங்கியது உயர்நீதிமன்றம்
அக்டோபர் 8ஆம் தேதிக்குள் புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது
பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது eowmadurai2@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் என- நீதிபதி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். பொருளாதார குற்றப்பிரிவு துணை க் கண்காணிப்பாளர் தரப்பில், ‘‘நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக 20.6.2023 ஆம் தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை 14,540 புகார்கள் வரை பெறப்பட்டுள்ளன. இந்த புகார்தாரர்களிடம் ரூபாய்.188.29 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்களைப் பொறுத்தவரை மனுதாரர்கள் முதலீடு செய்வதற்கு முன்பே தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ய முடியாது’’ எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘பொருளாதார முதலீட்டுக் குற்றங்களுக்கான சட்டத்தில், மோசடி நிதி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் வருவாய் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் பணி முடிவடையும் எனவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவலதுறை தரப்பு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறும் வகையில் மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும். சொத்துக்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தால் அதை விரைவில் முடிக்க வேண்டும். இப்பணிக்கான மதிப்பீட்டு குழு மற்றும் துணைக்குழுவுக்கு விசாரணை அமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் தொடர்பான விஷயத்தில், அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) சென்னை மண்டல அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், 121.80 கோடி மதிப்புள்ள, 121.80 கோடி ரூபாய் மதிப்புடையது ,பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், பணமோசடி சட்டம் (PMLA), 2002, ஆம் ஆண்டு, படி பண சூதாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் நியோமேக்ஸ் சேர்த்து தற்காலிகமாக ED யால் இணைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள். குறித்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது சாத்தியமா என்பதே எழுவினா? இந்த நிலையில் நியோமேக்ஸ் சொத்துக்களின் சொத்துக்களை ரூபாய் 121.80 கோடியில் ED பணமோசடி வழக்கில் இணைக்கிறது அதை மீறி வருவாய் துறை மற்றும் மாநில பொருளாதார குற்ப்பிரிவு இதில் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது சாமானியன் அறியாத நிலை இந்த வழக்கில் செபி மற்றும் அமலாக்கத்துறை எதிர் தரப்பு என்பதை மறைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவுகள் பெறப்படுவது முதலீட்டாளர்களுக்கு எந்த பலனும் தரப்போவதில்லை. PACL வழக்கில் நீதிபதி லோதா கமிட்டிபோல ஒரு முடிவு இதில் எட்டப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை இதுவரை இல்லை என்பதே உண்மைநியோ மேக்ஸில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்க அக்டோபர்.8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு: ஆனால் இதுவரை வந்த புகாரகள் 40 சதவீதமே இருந்த போதும் உயர் நீதிமன்றம் உத்தரவை வழங்கிய போதும் ED முடக்கிய சொத்து நிலை என்ன என்பதே முதலீட்டாளர்களும் பொருளாதாரக் குற்றப்பிரிவும் அறியவில்லை மேலும் லஞ்சம் மூலம் வந்த கருப்புப் பணங்களை முதலீடு செய்த அரசு ஊழியர்கள் 60 சதவீதம் பேர் புகாரே கொடுக்கவில்லை ன்பதே உண்மை.
கருத்துகள்