மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.
அவருக்கு வயது, 46. சிவகங்கை மாவட்டம்
அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த படம் , வாயை மூடி பேசவும். அதேபோல் மாரி படமும் பெரிய அங்கீகாரத்தை சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது. இவரது டைமிங் நகைச்சுவை இவருக்கு ஹாலிவுட் படமான தி லயன் கிங் படத்தின் இரண்டு பாகங்களிலும் தமிழில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.
மிமிக்கிரி மீது இருந்த ஆர்வம் அவரை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்துவிட, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டும் இல்லாமல், ஒரு நட்சத்திரப் போட்டியாளராகவும் மாறினார். அதன் பின்னர் அவர் அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு செக்மென்ட்டில் இவர் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். அதன் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சியில் மனைவியுடன் கலந்து கொண்டார். சின்னத்திரையிலிருந்த அவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் வந்தது.ரோபோ சங்கர் 1978ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பிறந்தவர் படிப்பின் மீது எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதே அளவுக்கு மிமிக்கிரி மீதும் தனி ஆர்வம் ஏற்பட்டது. இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரி காலத்தில் இருந்தே கிராமங்கள், நகரங்களில் திருவிழாவின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதில் ரோபோவைப் போல தனது உடலில் மெட்டாலிக் நிற பெயிண்ட்டை பூசிக் கொண்டு, ரோபோவைப் போலவே, தனது உடலை அசைத்துக் காட்டியதால் அவருக்கு ரோபோ சங்கர் என்று பெயர் வந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அவர் மதுவுக்கு அடிமையாகி இருந்தார்.
குறிப்பாக மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கு முன்னர் வரை. அளவுக்கு அதிகமான மது பழக்கத்தின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலையால் பாதிப்புக்கு உள்ளானார். இப்படி இருக்கையில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலின் அறிவுரையின் படி, எடுத்துக்கொண்ட மருத்துவத்தால், மீண்டு வந்தார். அதனால் அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்தார். ஒரு வீடியோவில் கூட யாரும் மது அருந்தாதீர்கள் என்றும் அதனால் தான் மிகவும் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப் பட்ட பிதற்போது மருந்தை உடல் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் ரோபோ சங்கர் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் BA History படித்த காலத்தில் ரோபோ என்கிற அந்த பெயருக்கு பின்னால் வறுமையின் கொடூரம் மட்டுமே இவருக்கு உண்டு. உடுத்தும் உடை கூட நான்கு, ஐந்து தான் வைத்திருப்பார். கல்லூரியில் படிக்கும் போதே நடன நாட்டிய கலைக்குழுவிற்கு செல்வார். ரோபோ கெட்டப்பிற்கு சில்வர் கோட்டிங்கை தன் உடம்பில் பூசுவார், அதை உடம்பில் பூச குறைந்தபட்சம் 2மணி நேரத்திற்கு மேலாகும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பச் செலவு, படிப்பு செலவை பார்த்து கொள்வார். நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர், அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லும் போது மதுரை கிரைம் பிரான்ச், தெற்குவாசல் பகுதியை அலர விடுவார், ரோபோ சங்கர் இல்லாமல் கடைசி பஸ் கிளம்பாது, ஒரு பெரிய கேங் லீடர் போல இருந்தவர் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அசத்த போவது யாரு? நிகழ்ச்சியின் மூலமாக வெளி மக்களுக்கு தெரிந்தார். தனித் திறமை, விடாமுயற்சியால் திரைப்படத்துறையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்தவரை காலம் மஞ்சள் காமாலை வடிவில் சீக்கிரமே அழைத்து சென்றது.காட்ஸ்ஜில்லா (GodsJilla) என்ற படத்தின் பூஜையில் ரோபோ சங்கர் கலந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் துரைப்பாக்கம் அருகே நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு நடித்து வந்தார்.அப்போது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ரோபோ சங்கரை படக் குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அதற்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கருத்துகள்