தமிழ்நாடு எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் . பீலா வெங்கடேசன் (வயது 55). ஐஏஎஸ் உயர் அலுவலரான இவர் கொரோனா காலத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளராகப் பணி செய்தார்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி ஆகும். பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டிஜிபியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார்,
தாயார் ராணி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.வெ.பீலா MBBS.IAS
பட்டங்களைப் பெற்ற அந்த அறிவான பெண் மூளையை எப்படிப் புற்று தொற்றியது ,?
" தொற்று"நோயென்றால் சரி செய்திருக்கலாம்
"புற்று"நோய் என்பதால்..
சரிய வைத்ததே..
கற்ற கல்வியின் பலன்.. பு ற்றின் வலியை உணர்த்தி இருக்கலாம்.. வாழ்விலும் பணியிலும் பெற்ற வலிகள் அவருக்கு அதிகம் அந்த வலியை மறைத்திருக்கலாம். அதனால் அவர் இன்று மறைந்திருக்கலாம். நல்ல அரசு அலுவலர் என்ற பெயருடன் புவியிலிருந்து பயணமாகிறார் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள். அறிவார்ந்த ஒரு பெண் உயர் சுகாதாரம் மருத்துவம் கற்ற அலுவலரைக் காப்பாற்ற முடியாமல் மருத்துவமும் சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது






கருத்துகள்