தமிழநாடு முதல்வரின் சம்பந்தி அம்பாசமுத்திரம் சோமசுந்திரம் வேதமூர்த்தி முதலியார் 80 வயதில் காலமானார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தியும் அவரது மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி முதலியார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ எனது மருமகன் சபரீசன் அவர்களின் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார். சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகில் அரியநாயகபுரம் சொந்த ஊராகும். வங்கி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரையை திருமணம் செய்துகொண்டதன் மூலம் சபரீசன், தமிழ்நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த குடும்பங்களில் ஒன்றின் அங்கமானார். வெளிப்படையாக எந்த அரசியல் பதவியையும் வகிக்காதவர், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துவதுடன், பல்வேறு வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளார்.



கருத்துகள்