சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றியம் கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி செய்யும்
ஆரோக்கியசாமி (வயது 51). இவர் அப்பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரைக் கைது செய்யும்படி வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர், உலகம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அவரை திருப்புத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, ஆரோக்கியசாமியை போக்சோ சட்டத்தில் கைது சிறையிலடைத்தார்.போக்ஸோ வழக்கில் ஆரோக்யசாமி கைது செய்யப்பட்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்


கருத்துகள்