பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, எம்.எல்.சி கட்சியிலிருந்து நீக்கம் .
பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியிலிருந்து தெலங்கானா சட்டசபை மேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்ககுவதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவின் முன்னாள் அமைச்சரும் பாரதிய ராஷ்டிரீய சமிதி கட்சியின் மூத்த நிர்வாகி ஹரிஷ் ராவ் மீது அவதூறுக் கருத்துகளை கவிதா தெரிவித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு, கடந்த பிஆர்எஸ் ஆட்சியில் காலேஸ்வரம் திட்டத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான புகார் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் திங்கள்கிழமை வழங்கிய நிலையில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் செய்து சொத்துகளைக் குவித்து, தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து தனது தந்தை சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கே. கவிதா திங்கள்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், கே. கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாகவும் சேதத்தை விளைவிக்கும் வகையிலுள்ளதால் அவரை உடனடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
கருத்துகள்