சிறுநீரக மோசடியை விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் 4 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
செய்துள்ளது. திமுகவின் கிட்னி திருட்டு ( முறைகேடு) குற்றவாளிகளை காப்பாற்றும் மேல்முறையீடு: ஒரு அரசியல் மோசடியின் உச்சம்..இதை விவாதிக்காத தொலைக்காட்சி ஊடகங்கள் !
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், குற்றம், ஊழல், மற்றும் ஆட்சியாளர்களின் நிர்வாகச் சீர்கேடு பாதுகாப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, சமூகத்தின் அடிப்படை மதிப்புகளைச் சீரழிக்கும் சக்தியாக மாற்றப்படுவது புதிதல்ல. ஆனால், 2025-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம், தமிழ்நாடு அரசின் ஒரு செயல், அத்தகைய மோசடியின் உச்சத்தை எட்டியுள்ளது. நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் நடந்த கிட்னி திருட்டாகிய முறைகேடு மோசடி வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது வெறும் சட்டரீதியான நடவடிக்கை மட்டுமல்ல; இது திமுகவின் கட்சி சார்ந்த குற்றவாளிகளை குறிப்பாக, கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன் போன்றவர்களைக் காப்பாற்றும் ஒரு தீமானமான முயற்சி. இந்த மேல்முறையீட்டின் பின்னணியில், பாமர ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்த கோரமான குற்றங்கள், அரசியல் பாதுகாப்பு, மற்றும் நீதியின் மீதான துரோகம் ஆகியவைகள் மறைந்துள்ளன. திமுக ஆட்சியின் அழுத்தத்தால், பல தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த விஷயத்தை 'சட்ட விவகாரம்' என்று மட்டும் சுருக்கி, ஆழமான விமர்சனத்தைத் தவிர்க்கின்றன.
முதலில், இந்த வழக்கின் பின்னணியைப் புரிந்துகொண்டு மக்கள் அறிய வைப்பது ஒவ்வொரு பத்திரிகையாளர்களின் கடமை. 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் போன்ற இடங்களில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில், ஒரு கோரமான கிட்னி திருட்டு ரேக்கெட் வெளியே வந்தது. ஏழை பெண்கள், ஆசை வார்த்தைகளால் ஏமாத்த நிலையில், தங்கள் சிறுநீரகங்களை இலவசமாக 'தானம்' செய்வதாகக் கூறி, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள்: தனியார் மருத்துவமனைகள், மத்தியஸ்தர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள். குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்குச் சொந்தமானது இந்தக் குற்றங்களின் மையமாக இருந்தது. திருச்சிராப்பள்ளி சித்தார் மருத்துவமனை உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருந்தன. இந்த மருத்துவமனைகள், பஞ்சை பராரிகளான கூலி ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து, போலி ஆவணங்களை உருவாக்கி, அவர்களின் உடல்நலத்தை அழித்தன. விசாரணையில், பள்ளிப்பாளையத்தில் மட்டும் 6 பெண்கள் கிட்னித் திருட்டுக்கு ஆளானதாகத் தெரியவந்தது. இது வெறும் தனிப்பட்ட குற்றமல்ல; இது ஒழுங்கமற்ற உடல் உறுப்பு விற்பனைத் தொழிலின் ஒரு பகுதி, இது தமிழ்நாட்டின் ஏழை மக்களை மிருகத்தனமாக சுரண்டுகிறது. இந்தியாவில் உடல் உறுப்பு தானம் தமிழ்நாட்டில் அதிகம் நடைபெறும் என்றாலும், இது சட்டவிரோதமான திருட்டாக மாற்றப்படுவது, அரசின் கண்காணிப்பின்மையின் சான்று.
இந்தக் குற்றத்தின் தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25, ஆம் தேதியன்று, மதுரை தென்மண்டலக் காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், 4 ஐ.பி.எஸ். உயர் அலுவலர்கள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன், அடங்கிய அமர்வு அரசின் முதல் தகவல் அறிக்கையை 'திருப்தி அளிக்காதது' என்று கண்டித்து, "மக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை" என ஆதங்கம் தெரிவித்தனர். இந்த உத்தரவு, நீதியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது . ஏனென்றால், உள்ளூர் காவல்துறை விசாரணை போதுமானதல்ல; அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் ஈடுபட்டிருக்கும் போது, சுயாதீனமான சிறப்புக் குழு மட்டுமே உண்மையை வெளிப்படுத்தும். ஆனால், தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான திமுக அரசு இந்த உத்தரவை ஏற்கவில்லை. செப்டம்பர் 20, 2025 ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இது வெறும் 'சட்ட ரீதியான' செயல் என்று சொல்ல முடியாது; இது குற்றவாளிகளைக் காப்பாற்றும் திட்டமிடப்பட்ட முயற்சி.
இந்த மேல்முறையீட்டின் காரணம் முதன்மையாக, திமுக சார்ந்த குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல் தேவை. கதிரவன் மணச்சநல்லூர் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் இந்த மோசடியின் மையத்தில் இருக்கிறார். அவரது மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டு, காவல்துறையின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் திமுகவின பிரமுகர். ஊழல் குற்றவாளிகளை பாதுகாக்கும் 'நிலை மாற வேண்டும் என்பதே பல தலைவர்கள் கூறும் கருத்து அரசு, சிறப்புகா குழு அமைப்பதை 'அரசின் அதிகாரத்திற்கு' எதிரானது என்று அரசே வாதிடுவது வினோதமானது. ஆனால், உண்மை என்ன? உள்ளூர் காவல்துறை, திமுகவின் செல்வாக்கால் 'மென்மையாக' விசாரித்தால், சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் போன்றவர்கள் தப்பிவிடலாம். ஆனால், சுயாதீன குழு அமைந்தால், அரசியல் இணைப்புகள் வெளியே வரும் அது திமுகவின் பிம்பத்தை அழிக்கும் என்ற அச்சம் ஆளும் ஆட்சியினர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டின் விளைவுகள் பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்தும். முதலில், ஏழை மக்களின் நம்பிக்கை உடைந்துவிடும். விசைத்தறி தொழிலாளர்கள், ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை ஏமாற்றி உடல்நலத்தை அழிக்கும் உறுப்பு திருட்டுக் குற்றங்கள், அரசின் பாதுகாப்பால் தொடரும். அவலம் 2025 ஜூலையில், ஒரு இதழ் செய்தியில், மாநில அமைச்சர் எம்.ஏ. சுப்ரமணியன் "குற்றவாளிகள் தப்பவே முடியாது" என்று கூறினார். ஆனால், இன்று அரசு அவர்களையே காப்பாற்றுகிறது!
இரண்டாவதாக, மருத்துவத் துறையின் நம்பகத்தன்மை சிதைந்துவிடும். தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருந்தாலும், இத்தகைய மோசடிகள் அதை சந்தேகத்திற்குரியதாக்கும். மூன்றாவதாக, அரசியல் ரீதியாக, திமுகவின் 'மக்கள் நல' உருவம் உடைந்துவிடும். அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், இதை 'கிட்னி திருட்டு திமுக' என்று விமர்சிக்கின்றன. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று, திருச்சிராப்பள்ளியில் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாஜக தலைவர் வேலூர் சையது இப்ராஹிம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கிட்னி தானம் குறித்து விசாரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டது, அரசின் அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது என்பதே பல தலைவர்கள் கருத்து.
இந்த விவகாரம் ஊடகங்களில் விவாதிக்கப்படுமா? சந்தேகமே. சில செய்தித் தொலைக்காட்சிகள் சிறு செய்தியாகத் தரலாம். ஆனால், ஆழமான விவாதம் செய்ய முன்வர மாட்டார்கள். இதை ஆட்சியின் அழுத்தமாகவும் ஊடகங்களை 'நடுநிலை' என்ற பெயரில் மௌனப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஊடகங்கள் ஜனநாயக முறையில் விவாதிக்காவிட்டால், மக்கள் குரல் அழிந்துவிடும்.
இந்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே பலரது கருத்து. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,





கருத்துகள்