மகளிர் உரிமைத் தொகை 24 மாதங்களாகப் பெற்ற உத்திரப் பிரதேச பெண் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அலுவலர்கள் ஆய்வில் அதிர்ச்சி
கிணத்துக்கடவு வசிக்கும் பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு இரண்டாண்டுகளாக செல்வது அறியாமல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்ட மனு மூலம் தெரிந்து, அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் கொண்டம்பட்டி மகேஸ்வரி, வயது 50. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு எந்தத் தகவலும் இல்லாததால், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஜூலை மாதம் 25 ஆம் தேதியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மீண்டும் மனு அளித்தார்.
மனுவை ஆய்வு செய்த அலுவலர்கள், 'உங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கை சரிபாருங்கள்' என பதில் கூறினர்.
அதன்பின், கிணத்துக்கடவு 'பேங்க் ஆப் பரோடா' வங்கிக் கிளையில் விசாரித்தார். அவரது கணக்கு ஆய்வு செய்ந வங்கி ஊழியர்கள், உங்கள் ஆதார் எண்ணுடன், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தனர்.அதனால்
அதிர்ச்சியான மகேஸ்வரி, இந்த விபரங்களைக் குறிப்பிட்டு, பொள்ளாச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில், செப்டம்பர் மாதம்., 11ஆம் தேதியில் மனு அளித்ததில், இரண்டு ஆண்டுகளாக, வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு சென்றுள்ள மகளிர் உரிமைத் தொகையை மீட்டு, தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றித் தர வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். இதை விசாரணை செய்த
கிணத்துக்கடவு தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பானுமதி கூறுகையில், ''மகளிர் உரிமைத் தொகை சென்னையிலிருந்து, பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட பயனாளியின் வங்கி கணக்குக்கு, பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ஹிந்தி பேசும் வட இந்திய நபர்கள் வங்கி பணிக்கு தமிழ்நாடு வந்த நிலையில் யாரோ ஒரு வங்கிப் பணியாளர் தான் இந்த தவறுக்கு காரணமாக இருக்க வேண்டும்.
கருத்துகள்