செங்கோட்டையனுக்கு சீட்டு பழனிச்சாமிக்கு ரிவிட்டு. இது அமித்ஷாவின் புது ரூட்
இந்த நடவடிக்கையால் அதிமுகவில் செங்கோட்டையன் துவங்கி இருப்பதாக பேசப்படுகிறது. அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதன் எதிரொலியாக ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்களை ராஜினாமா செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து பழனிச்சாமி மூலம் நீக்கப்பட்டவர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி கே பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு வி.கே.சசிகலா நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், 'செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி நலனுக்கு இது உகந்ததல்ல. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையை எண்ணத்தை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்கள் தான் நம் எண்ணமாக பிரதிபலித்திருக்க திமுகவை வலுவிழக்க செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். 'சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறிசா இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ' என்ற எம்.ஜி.ஆர் பாடலை சுட்டிக்காட்டியுள்ள வி.கே.சசிகலா நடராஜன் 'ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் குரலாகிறது. அதிமுகவில் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், தலைமை நிலையச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் என இத்தனை பொறுப்புகளையும் வகித்த செங்கோட்டையன் பத்து நாள் அவகாசம் கொடுத்திருக்கிறார். ஏன் கொடுத்தார். கருத்து வேற்றுமை இருப்பதை எல்லாம் கடந்து சிந்தித்து செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக கெடு கொடுத்துள்ளார். இதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 10 நாட்கள் கெடு முடிந்தவுடன் செங்கோட்டையனைச் சந்திப்பேன்'' என்றார் இதனால் பத்து நாள் கெடுவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பிருக்கிறது
அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதால் கே.ஏ.செங்கோட்டையனை எடப்பாடி கே.பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் தங்களையும் கட்சியிலிருந்து நீக்குமாறு கடிதம் எழுதினர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகியுள்ளனர். மேலும் கோபிசெட்டிபாளையத்திலும் 300 நிர்வாகிகள் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள நிலையில் தற்போது 2000 நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாகியுள்ளது. வி.கே.சசிகலா பொதுச்செயலாளர் அ.இ.அ.தி.மு.க. எழுதிய கடிதம்
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" ஜெ ஜெயலலிதாவரிகளுடன் கொண்டு 06-09-2025 ஆம் தேதியிட்ட கடிதத்தில் ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்தக் கட்சியை யாரும் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு வைத்தனர். ஜெ.ஜெயலலிதாவின் புண்ணியத்தால். நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சியினரும் பொறாமைப்படும் அளவுக்கு கட்சியின் செயல்பாடு அமைந்திருந்தது. நம் இருபெரும் தலைவர்களும் ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் இயக்கத்தை நடத்தி வந்ததை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
கழகத்தின் மூத்த முன்னோடியும், தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், கட்சி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் செங்கோட்டையன் மீதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது ஒரு அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இது கட்சி நலனுக்கு உகந்ததல்ல. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற கே.ஏ.செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். மேலும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோடிக்கணக்கான தொண்டர்களின் மூலம் பதிலளிக்கப் போகிறோம்?. எண்ணங்களுக்கு நாம் என்ன
கழகத்திலிருந்து . எஸ்.டி சோமசுந்தரம் அவர்கள் பிரிந்து சென்ற போது அவரை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அன்றைய தினம் தான் ஒரு முதலமைச்சராக இருந்த போதும் எம்ஜிஆர் அவரது இல்லத்திற்கே நேரில் சந்திக்கச் சென்றவர் வீட்டில் இல்லை என்ற பொய்யான தகவல் சொல்லப்பட்ட போதும், சிறிது நேரம் அவர் வீட்டிலேயே காத்திருந்து, அவரது மனைவியிடம் இரவு உணவு கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார் மேலும், அவரை சமாதானப்படுத்த வேண்டும், மீண்டும் கழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என என்னிடமும் எம்ஜிஆர் கூறினார். அதனை உடனே செயல்படுத்தியதையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு நம் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அதிமுகவிற்கு இனி எதிர்காலமில்லை, அதிமுகவின் கதை முடிந்துவிட்டது. என்றெல்லாம் சொன்னார்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களும் இதே கனவோடு தான் அன்றைக்கு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி கண்ட கனவை மொத்தமாகக் கலைத்தோம். இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது. ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை, அன்றே நான் தெளிவாகக் கற்றுக் கொண்டு விட்டேன். அதாவது, இரு அணிகளாகப் பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு, அனைவரையும் நம் கட்சிக்காரர் என்று மட்டும் தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியைச் சேர்ந்தவர். அவர் அந்த அணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி ஒரு நாளும் பிரித்துப் பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்று கொண்டது எம்ஜிஆரிடம் தான். அவர் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெரியாது. அது என்னவென்றால், யாரையும் பிரித்துப் பார்க்கமாட்டார். அனைவரையும் சமமாகவே பார்ப்பார். யாரையும் துண்டாடமாட்டார். இதைத்தான் நாங்கள் அன்றைக்குக் கடைப்பிடித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம்.
திமுக கட்சியை வலுவிழக்கச் செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு நாமே அவர்களுக்கு இடம் அளித்துவிடக்கூடாது. மேலும், திமுகவினரின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகிடாமல், கட்சி நலனையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நமது ஒவ்வொரு செயல்களும் இருக்க வேண்டும். அவர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான இரத்தத்தின் இரத்தங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது தான் நமது இருபெரும் தலைவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடமாகும் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ" என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கேற்ப யாராக இருந்தாலும், தாங்கள் செய்கின்ற தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அம்மாவை தங்களுடைய தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களது கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒவ்வொரு தொண்டரும் நம் கட்சிக்கு சொந்தக்காரர்கள் தான். அவர்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்து நின்றாலும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பது தான். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு. எனவே, அனைவரையும் ஒன்று படுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவும், தமிழகத்தில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்பி, தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும் விரைவில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!
நாளை நமதே! வெற்றி நிச்சயம்
என்றும் அம்மாவின் வழியில்
வி.கே.சசிகலா கழகப் பொதுச்செயலாளர் அஇஅதிமுக" என சுட்டிக் காட்டியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு கெடு விதித்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினரில் இருந்து விடுவிக்க வில்லை
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து அவ்வப்போது கலகக்குரல்கள் எழுவது வழக்கம். அதில் எட்டு மாதங்களாக முயன்ற நிலையில் தற்போது குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
அவ்வவ்போது சட்டசபையிலும், கட்சியின் நிகழ்ச்கிகளிலும் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்த மூத்த முன்னோடி கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்திருந்த அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்தார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரிந்த அணிகளை ஒன்றிணைக்க அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி 10 நாட்கள் கெடு விதிப்பதாக நேரடியாகவே அறிவிப்பை வெளியிடார்
இந்த நிலையில் எடப்பாடி கே பழனிச்சாமி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரது கட்சிப்பொறுப்புகளும் அவரால் பறிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் விவரம் :
கே.ஏ. சுப்ரமணியன் - நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி - நம்பியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குறிஞ்சிநாதன் - கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்தேவராஜ் -அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் - அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் வேலு - அத்தாணி பேரூராட்சி கழக துணைச் செயலாளர் மோகன்குமார் - ஐடி பிரிவு துணை செயலாளர், ஈரோடு உள்ளிட்ட பலரும் உண்டு
திண்டுக்கல்லில் எடப்பாடி கே. பழனிச்சாமி தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், சீனிவாசன், காமராஜ் ஆகியோர் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து அவர்
கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் வேதனை இல்லை; மகிழ்ச்சியே. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்து கூறினேன்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கலையே? ஏன் செங்கோட்டையன் பின்னால் பல சட்டமன்ற உறுப்பினர்களுடன் 8 முன்னாள் அமைச்சர்கள். இனி நடக்கப்போவது என்ன? டிடிவி- தினகரனுக்கு நயினாரின் பதில்
ஒரு உளறலாகவே காணலாம்
NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு டிடிவி தினகரன் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது; டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சொல்லி வைத்துக் கொண்டு மாறிமாறி பேசுகிறார்களா? என்பது தெரியவில்லை. எனக் கூறினார் அதனால் முன்னாள் தலைவர் அண்ணாமலை கை ஓங்கும் நிலை ஆகவே அவசரமாக இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் தெரிந்ததுமுதல் முதலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சிலுவம் பாளையம் கே.பழனிச்சாமியை அடிப்படை உறுப்பினராக அதிமுகவில் சேர்த்ததே கே.ஏ.செங்கோட்டையன் தான் என்பது இங்குள்ள பலருக்குத் தெரியாது
தன்னை கட்சியில் அறிமுகப்படுத்தியவரையும் நீக்கியாச்சு, முதல்வர் பதவி வழங்கிய விகே சசிகலாவையும் நீக்கியாச்சு, பதவி கிடைக்க காரணமாகத் திகழ்ந்த T.T.V. தினகரனையும் நீக்கியாச்சு, அந்தக் கட்சியில் முன்னாள் முதல்வராக பதவி வகித்த O.P.S-யும் நீக்கியாச்சு.
இத்தகைய சுயநலவாதியாக எடப்பாடி சிலுவைப் பாளையம் பழனிச்சாமி தான் இன்று மக்களை காப்போம் எனப் பேசிவருகிறார்.அதிமுக வில் கே.ஏ செங்கோட்டையனின் ஆதரவாளர்களான
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், பல்வடம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் A. சித்துராஜ் ,
மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே ஏ சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி , கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ் , அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமேஷ் , துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் ஆகியோர் நீக்கம் செய்து நடவடிக்கை இந்த நிலையில் ஈரோடு புரநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, A.K. செல்வராஜ், MLA, (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என, எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.கே.ஏ. செங்கோட்டையனின் பதவிப்பறிப்பு எடப்பாடி கே.பழனிசாமியும், கே.பி.முனுசாமியும் எடுத்த முடிவு, மற்றவர்கள் எல்லாம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பலாம் என்று தான் கூறினார்களாம்.
எதேச்சதிகாரமான இந்த முடிவால் எடப்பாடி கே. பழனிச்சாமியோடு இருக்கும் மற்ற தலைவர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி மீதும் முனுசாமி மீதும் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்களாம்.
இதன் விளைவுகள் காலப்போக்கில் தான் வெளிவரும்.
அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு வாக்காளர்களும் தற்பொழுது முன்னாள் அமைச்சர் க.ராஜாராம் தம்பி டாக்டர் காந்த ராஜ், பத்திரிகையாளர் மணி, மற்றும் லெட்சுமணன் மற்றும் கர்நாடக புகழேந்தி கூறுவது போல பத்து தோல்வி கண்ட எடப்பாடி கே.பழனிச்சாமியா? அல்லது அதிமுகவின் ஆட்சியா? இதில் எது தேவை என்று முடிவு செய்கிற காலமிது அப்பொழுது அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எல்லோரின் முடிவாக இருக்கும். எனவே எடப்பாடி கே. பழனிச்சாமி கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால் , முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜனுக்கு ஏற்பட்ட நிலை தான் இந்த ஆண்டு இறுதிக்குள் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் ஏற்படும்.
என்பது அவர் வசிக்கும் பகுதி சார்ந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைக்கும் வாதமாகும்

























கருத்துகள்