முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீருடையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது

சீருடையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பக்கம் பூச்சிவாக்கம் கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் ஒரு இரவில் அடுமனைக் கடையில் புகுந்து சில மர்ம நபர்கள் முருகன் என்ற நபரைக் தாக்கினர்  இது சம்பந்தமாக புகார் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றம் செய்தனர். அதே சமயம் இந்த வழக்கில் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலரின் பெயரைச் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்யாமல் காலம் கடத்தி நிலுவையில் வைத்ததாகவும். அது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவராகக் கருதும் புகார்தாரர் முருகன் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகாரை.       அளித்திருந்தார். 


இந்த வழக்கு நீதிபதி செம்மல் அமர்வில் இன்று 8.செப்டமபர் 2025 ல் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறைக்  கண்காணிப்பாளர் சண்முகத்தை ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அதே சமயம் காவல் கண்காணிப்பாளர் அலுவல் காரணமாக சென்னை சென்றதன் காரணமாக  பதிலாகக் காஞ்சிபுரம் நகரத்தின் சட்டம் ஒழுங்கு துணை  காவல் பணி கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். இந்த வழக்கில் காவலரைச் சேர்க்காத காரணத்திற்காக துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். 


காரணம் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீதிமன்றத்திலேயே சீருடையுடன் கைது செய்யப்பட்ட நிலையில் காவலர்கள் உதவியுடன் நீதிமன்ற வாளாகத்திலிருந்த காரில். கைதான சங்கர் கணேஷ் தப்பியோடியதாக முதலில் கூறப்பட்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பானது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் காவல்துறை  வாகனத்தில் காஞ்சிபுரம் கிளைச் சிறைக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியது. 


காவல்துறையினர் அளித்த விளக்கத்தில்  “கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தப்பியோடவில்லை. கழிவறைக்குத் தான் சென்றிருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது. நம்முடைய வாசகர்கள் அறிய ஒரு சட்ட விளக்கம். 
காவல் நிலையத்தில் புகாரளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையெனில் புதிய குற்றவியல் சட்டம் BNS மற்றும் BNSS அடிப்படையில் நடவடிக்கைகள்.


BNSS பிரிவு 173 (1)

பொதுமக்கள் யாரும் ஒரு தக்கதொரு புகாரை  காவல் நிலையத்தில் அளித்தபின்னர், அது ஒரு "அறிக்கையான குற்றம்" (cognizable offence) எனப்பட்டால், காவல் பணி செய்யும் அலுவவர் FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வேண்டும்.

FIR பதிவு செய்ய மறுத்தால்


1. முதலில், அந்தப் பகுதியின் Station House Officer (SHO) அல்லது காவல் பணி ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்க வேண்டும்.                                                      2. அதுவும் பயனளிக்காவிட்டால், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்  அல்லது மாநகராக இருந்தால்  ஆணையரான உயர் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். BNSS பிரிவு 173(3)ன்படி, அவரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையாளர்.

மேலும் நடவடிக்கை எடுக்க: BNSS பிரிவு 175(3)

காவல் துறையினர் வழக்கை பதிவு செய்ய மறுத்தால், அதன் பின்னர்:


BNSS பிரிவு 175(3) (முந்தைய CrPC பிரிவு 156(3)க்கு பதிலாக) கீழ்,  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரடியாக மனு தாக்கல் செய்யலாம்.

இந்த மனுவை குற்றம் நடந்த அல்லது குற்றச்சாட்டு சார்ந்த காவல் நிலைய எல்லையில் உள்ள முதன்மை நீதிமன்றம் (Magistrate having jurisdiction)-க்கு பிராது அளிக்கலாம்.

நீதிபதி, உங்கள் மனுவை பரிசீலித்து, அதில் சுயம்தானாக  அதாவது சூ- மோட்டோவாக விசாரணைக்கு ஏற்புடையதெனத் தெரிந்தால், உடன் காவல் துறையே வழக்கைப்பதிவு செய்யும் படி உத்தரவிடலாம். 


அந்த உத்தரவை காவல்துறை பணியாளர்கள் மீற முடியாது; காவல் துறை FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

அதற்கு மாற்று வழிகள்: BNSS பிரிவுகள் 2(1)(f), 2(1)(h), 210, 211, 213:

புகார் அளித்த நபர் FIR மூலம் வழக்கு தொடுப்பதை விட நேரடியாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு மனுவாகவும் அளிக்கலாம்:

பழைய CrPC‌ புதிய BNSS குறித்து விளக்கம்

Sec 2(4) Sec 2(1)(f) "Complaint" எனப்படும் குற்றச்சாட்டு மனுவை விளக்கும்.

Sec 2(7) Sec 2(1)(h) "Magistrate" எனப்படுபவர் யார் என்பதை விவரிக்கிறது.

Sec 190(1)(a) Sec 210(1)(a) நீதிபதி, ஒரு தனிநபரால் அளிக்கப்படும் புகாரின் அடிப்படையில் வழக்கை எடுத்துக் கொள்ளலாம்.

Sec 200 Sec 211 நீதிபதி, புகாராளரை எதிர்கொண்டு உறுதிப்படுத்தல் விசாரணை மேற்கொள்வது.

Sec 202 Sec 213 நீதிபதி மேலதிக விசாரணை செய்ய முடியும்.

முக்கியமாகபுகார்தாரர் ஒரு மாண்புமிக்க நீதிமன்றத்தில், BNSS பிரிவு 175(3) அல்லது 210, 211, 213 அடிப்படையில் மனு தாக்கல் செய்தால், நீதிபதி: உரிய காவல் துறைக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

அல்லது மனுதாரர் புகாரை விசாரிக்க நேரடியாக ஒப்புக்கொண்டு நடவடிக்கையும் எடுக்கலாம். 

இந்த வழியில் போகும்போது, பாதிக்கப்பட்ட மனுதாரர் மனுவில் கீழ்காணும் விபரங்கள் இருக்க வேண்டும்:

குற்றச்சாட்டு நிகழ்ந்த தேதி, நேரம், இடம் குற்றம் மேற்கொண்ட நபரின் விவரங்கள் (ஏதேனும் தெரிந்திருந்தால்) மனுதாரர் புகாரின் அடிப்படை ஆதாரங்கள் (சாட்சிகள், ஆவணங்கள்)

FIR பதிவு செய்ய மறுத்த காவல் நிலையம் குறித்த விவரங்கள்

உயர் அலுவலர்களிடம் நீங்கள் அளித்த மனுக்கள் (நகல் இணைக்கவும்) இப்போது நடவடிக்கைகள் பாயும். இதில் பொது நீதி யாதெனில் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தப்பித்தால், சிறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள காவலர்கள் சஸ்பெண்ட் ஆவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா?வாலாஜாபாத் காவல் நிலைய எல்லையில் 25.07.2025 ஆம் தேதி ஒரு அடுமனையில்  ஏற்பட்ட கைகலப்பு சம்பந்தமாக பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கொடுத்த புகார் மீது 27 நாட்களாக புகார் பதிவு செய்யப்படாமல் வைத்திருக்கப்பட்டிருக்கிறது அதன் பிறகு நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 20.08.2025 ஆம் தேதி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது அதன் பிறகு நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய விசாரணை அலுவலரான துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் புகார் பொய்யா உண்மையா என விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் குற்றவாளிகளாக கூறப்படும் நபர்கள் கைது செய்யப்படாமல் இருந்திருக்கிறது இதற்குக் காரணம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் எனும் காரணம் சொல்லப்படுகிறது அது உறுதி செய்யப்படவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கின் நிலை பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருந்ததால் நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை முடிவில் குற்றம் உறுதி ஆனால் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்க தற்போது சட்டம் தெரிவிக்கிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் நீதிபதியின் காரில் சிறைக்கு அழைத்துச் சென்ற பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரி சிறைக்கு அருகில் வரும் பொழுது தப்பி ஓடி விட்டதாக சொல்லப்பட்டது இந்த சூழ்நிலையில் அவர் மறுபடியும் சிறைக்குத் திரும்பி சிறை வாசலில் காத்திருப்பதாக தற்பொழுது சொல்லப்படுகிறது. 

துணைக் கண்காணிப்பாளர் தப்பி ஓடியது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் என்பதால் மேல் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கூட அவர் திரும்பி வந்திருக்கலாம் ஆனால் காவல்துறை தரப்பில் அவர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக் கொண்டிருந்தார் என்று சொல்கிறார்கள்

என்னமோ அதற்குள் எங்கிருந்து உத்தரவாக வந்ததோ. தெரியவில்லை. மக்கள் மட்டுமே வேகமாக இல்லாவிட்டால் இங்கு பலருக்கும் உண்மை தெரியாமல் காதுகுத்து நடக்கும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற துணைக் கண்காணிப்பாளர் அறிவார்.  இனி மேல் விசாரணைக்கு வழக்கு வரும் போது மனு அளித்தவர் தந்த பிராதின் உண்மை நிலை தெரியும்.  நாமறிந்த வரை நீதிபதி செம்மல் நேர்மையாளர் சட்ட வழி நடக்கும் நீதிமான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...