முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயல் நாடடுக் கார் விற்பனை வரி மோசடிக் கும்பலில் கேரளா நடிகர்

அயல் நாடடுக் கார் விற்பனை மோசடியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. 




        கார் விவகாரம் நடந்த உண்மை நிலை என்ன? வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, காரின் விலையில், 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிக்கப் படுகிறது. இந்த நிலையில் அண்டை நாடான பூட்டானில் ராணுவ கேபடன் மற்றும் மேஜர் மற்றும் கார்னல் பயன்படுத்திய, 'லேண்ட் க்ரூஸர், லேண்ட் ரோவர்' உள்ளிட்ட சொகுசுக் கார்களை, கேராளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஒரு கும்பல் ஏலத்திற்கு எடுத்துள்ளது. அதை சட்டவிரோதமாக சுங்க வரி செலுத்தாமல் எல்லை தாண்டிக் கடத்தி வந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்து நாடு முழுதும் விற்பனை செய்துள்ளது குறித்து தகவலறிந்த வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கலால் மற்றும் சுங்கத் துறை அலுவர்கள், 'ஆப்பரேஷன் நும்கோர்' என்ற பெயரில் நாடு முழுதும் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில், கேரளாவின் பிரபல திரைப்பட நடிகர்கள் பிருத்விராஜ், மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் ஆகியோரின் இடங்களிலும் சோதனை நடந்தன.



துல்கர் சல்மானிடம் இது போன்ற இரண்டு சட்டவிரோதமான சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கொச்சின் கலால் மற்றும் சுங்க இலாக்கா இயக்குநரகத்தின் கமிஷனர் திஜு நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : -பூட்டானில் இருந்து நம் நாட்டு எல்லை வழியாக அதிக விலை உடைய பயன்படுத்தப்பட்ட கார்கள் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன. சுற்றுலா அனுமதி மற்றும் காரை பிரித்து கன்டெய்னர்களில் அடைத்து, எல்லை தாண்டி இங்கு கொண்டு வந்துள்ளனர். இதில் கொச்சியைச் சேர்ந்த ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது. நம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின், இந்த வாகனங்கள் ராணுவம் மற்றும் அமெரிக்கத் துாதரகத்திற்கு சொந்தமானவை போல் காட்ட போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். அதன் பின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன. வாகனங்களின் தகவல்களை வழங்கும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின், 'பரிவாஹன்' தளத்திலும், வாகனத்தின் உரிமையாளர் விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தியோ அல்லது 'ஹேக்கிங்' எனப்படும் கணினியை சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் எடுத்தோ இதை செய்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விபரங்களை நம்பி நடிகர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இந்த சட்டவிரோத சொகுசுக் கார்களை வாங்கி உள்ளனர். தெரியாமல் வாங்கி இருந்தாலும் இந்த கார்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.  நேற்று முன்தினம் நடந்த சோதனையில் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு கார்கள் நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமானவை. நடிகர் பிருத்விராஜின் கார்கள் எதுவும் சோதனையில் சிக்கவில்லை. கேரளாவில் மட்டும் இது போன்று கடத்தி வரப்பட்ட 200 கார்கள் பயன்பாட்டில் உள்ளன". எனக் கூறினார். இந்த சோதனையில், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கார்களில் போதைப் பொருள் மற்றும் தங்கம் கடத்தல் நடவடிக்கையிலும் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. சொகுசு கார் விவகாரத்தில் புழங்கும் பணம், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிக்க வழங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் கலால் மற்றும் சுங்க அலுவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.






நடிகர் துல்கர் சல்மான் என்பவர் நடிகர் மம்முட்டி என்ற முகமது குட்டி மகனாவார் இதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.     அதன் முதற்கட்ட விசாரணையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், நிசான் பேட்ரோல் (patrol) வகை சொகுசு கார்களை மலையாள நடிகர்களான துல்கரும், பிருத்வியும் வேறு நபர்களடம் வாங்கியதாக தகவல்கள் கசிந்தன. உடனே கேரளாவிற்கு விரைந்த சுங்கத்துறையினர் திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருத்விராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் தேவாரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த வெளிநாட்டுக் கார்களும் சிக்கவில்லை. மற்றொரு குழுவினர் கேரளாவின் பனம்பிள்ளி நகரில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில்

சோதனை நடத்தினர். அதில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் வகை கார் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் சிக்கின. மேலும், சுங்க அலுவர்களின் விசாரணையில் கேரளா முழுவதும் 150 முதல் 200 வாகனங்கள் வரை இதுபோன்ற வாகனங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.





இதையடுத்து கேரளா முழுவதும் அலுவலர்கள் நடத்திய சோதனையில் முதல் நாளில் மட்டும் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவின் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில், மலையாள நடிகர்களுக்கு கார் விற்பனை சப்ளை செய்த கும்பலுக்கும் அலுவலர்கள் செக் வைத்துள்ளனர். வரி ஏய்ப்பு மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி எவ்வளவு கோடி ரூபாய் கைமாற்றியது? வேறு யாரெல்லாம் பூடான் கார்களை வாங்கி உள்ளனர்? தமிழ்நாட்டிலும் யாராவது சிக்குவார்களா? என அடுத்தடுத்து பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சுங்க அலுவலர்களின் விசாரணையின் முடிவிலேயே, அது தொடர்பான மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இந்த மோசடியில் கோவையைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் துல்கர் சல்மான் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...