தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் (DGP) மற்றும் மாநில காவல் படைத்தலைவா் (HOPF) பணிக்கு தகுதிவாய்ந்த இந்திய காவல் பணி (IPS) உயர் அலுவலரை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக்குழுக் கூட்டம் டில்லியில் இன்று கூடுகிறது.
மத்திய குடிமைப்பணிகள் தோ்வாணையத்தின் (UPSC) தலைவா் அலுவலக அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், மாநில உள்துறைச் செயலாளர் தீரஜ் குமாா், தற்போது பணி பொறுப்பு DGP ஜி. வெங்கட்ராமன் ஆகியோா் டில்லி வந்தனா்.
தமிழ்நாடு காவல்துறை DGP சங்கா் ஜிவால் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில், மூத்த IPS ஒருவா் தனது பெயரையும் தகுதிப்பட்டியலில் இடம்பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கால், முன்கூட்டியே மேற்கொள்ளப்பட வேண்டிய DGP நியமன நடைமுறைகள் தாமதமாகின.
மாநிலக் காவல்துறை DGP நியமன நடைமுறைகளில் இரண்டில் ஏதேனும் ஒன்றின்படி மேற்கொள்ளப்படுவதை விதிகள் அனுமதிக்கின்றன. ஒன்று, UPSC தோ்வுக்குழு மூலம் தோ்வு செய்வது. மற்றொன்று, மாநில காவல் ஆணையம் மூலம் தகுதிவாய்ந்த காவல் உயர் அலுவலரை மாநில அரசே தோ்வு செய்வது. இதில், தமிழ்நாடு UPSC தோ்வுக்குழு மூலம் DGP நியமிக்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கிறது.
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் DGP தோ்வுக் குழுக் கூட்டத்தில் UPSC சாா்பில் அதன் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஆணையத்தின் உறுப்பினா், மத்திய உள்துறைச் செயலாளா் சாா்பில் அத்துறையின் சிறப்புச் செயலாளர், மத்திய காவல் படைகளில் ஒன்றின் DGP ஆகியோா் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மூன்று DGP நிலையிலான உயர் அலுவலர்கள் பட்டியலை இறுதி செய்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நியமிக்கும். இவ்வாறு நியமிக்கப்படும் IPS காவல் துறை தலைமை இயக்குனர் மற்றும் மாநில காவல் படைத்தலைவராக நியமிக்கப்படும் போது அவா் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பணிக்காலத்தை கொண்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் பணி மூப்பு மற்றும் அனுபவத்தின்அடிப்படையில் DGP அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், கே. வன்னியப் பெருமாள், மகேஷ் குமாா் அகா்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகியோரின் பெயா்கள் முறையே பரிசீலிக்கப்படும் பட்டியலில் உள்ள DGP க்கள் நிலையில் பிரமோத் குமாா், அபய் குமாா் சிங் ஆகியோா் இருந்தாலும் அவா்கள் ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலத்தை கொண்டுள்ளனா். ஆகவே இன்று புதிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் யார் என்பது தெரியும்.

கருத்துகள்