நேபாளம் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.
நேபாளத்தில் சோசலிச அரசாங்கம் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகப் பயன்பாடுகளைத் தடை விதித்ததற்கு எதிராக நடைபெற்ற Gen Z போராட்டத்தில் 9 இளைஞர்கள் இறந்தனர்.
. நாட்டில் தலைமைத்துவத்தில் முழுமையான மாற்றத்தை இளைஞர்கள் கோருகின்றனர். பெரும்பாலான இறப்புகள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டினால் நிகழ்கின்றன·
2 மணியளவில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்: அதிகாரிகள் (ஆதாரம்: மூன்றாம் தரப்பு) காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் கூறுகையில், " நேபாளத்திலுள்ள அனைத்து இந்தியர்களும் ஏதேனும் அவசரகாலச் சூழ்நிலையை எதிர்கொண்டாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ தொடர்பு கொள்ள காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் பின்வரும் தொலைபேசி எண்களைக் குறிப்பிடுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் : +977 – 980 860 2881 , +977 – 981 நேபாளத்தின் ஜென் Z புரட்சி நடக்கும் நிகழ்வு இளைஞர்களின் கோபமும் மாற்றத்தின் குரலும் .
ஆசியாவில் நேபாளம் ஹிமாலயத்தின் அழகிய மடியிலமைந்த அமைதியான நாடு, இன்று ஒரு புரட்சியின் மையத்தில் உள்ளது. ‘ஜென் Z புரட்சி’ என அழைக்கப்படும் இந்த இயக்கம், செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, 2025 அன்று துவங்கி, உலகின் கவனத்தை ஈர்த்தது. இளைஞர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தங்கள் கோபத்தைத் தெருக்களில் வெளிப்படுத்தியுள்ளனர். சமூக ஊடகத் தளங்களின் தடை, ஊழல், மற்றும் பொருளாதார நெருக்கடி, அரசியல் தலைவர்களின் மெத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர். தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக முன்னேறினர், காவல் தடைகளை உடைத்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய இந்தப் போராட்டத்தில் 19 இளைஞர்கள் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் விளைவாக, பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது வெறும் போராட்டமல்ல; இது ஜென் Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையின் எழுச்சி. டிஜிட்டல் உலகில் வளர்ந்த இவர்கள், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக தைரியமாக எழுந்து நிற்கின்றனர்.
இந்தப் புரட்சியின் தூண்டுதல் செப்டம்பர் மாதம் 4, ஆம் தேதி 2025 அன்று நேபாள அரசு அமல்படுத்திய சமூக ஊடகத் தடையாகும். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், X உள்ளிட்ட 26 தளங்கள் தடை செய்யப்பட்டன. அரசு கூறிய காரணம், இந்தத் தளங்கள் நேபாளத்தில் பதிவு செய்யப்படவில்லை, வெறும் வணிக லாபம் மட்டுமே ஈட்டுகின்றன, மேலும் போலியான கணக்குகள் மூலம் பொய்ச் செய்திகள், வெறுப்புரைகள், சைபர் குற்றங்கள் பரவுவதாக இருந்தது. ஆனால், நேபாளத்தின் 30 மில்லியன் மக்களில் 90 சதவீதம் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தத் தளங்கள் இளைஞர்களுக்கு செய்திகளை அறிய, நண்பர்களுடன் தொடர்பு கொள்ள, வேலைவாய்ப்பு தேடுவதற்கு அவசியமானவை. இந்தத் தடை அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் மேலும் புரட்டிப்போட்டது. தடை வந்தவுடன், VPN பயன்பாடு 6000 சதவீதம் உயர்ந்தது, ஆனால் இது இளைஞர்களின் கோபத்தைத் தணிக்கவில்லை. “எங்கள் குரலை அடக்க முடியாது” என்று கூறி, அவர்கள் தெருக்களில் இறங்கினர்.
இருப்பினும், இந்தப் புரட்சி வெறும் சமூக ஊடகத் தடைக்கு எதிரானது மட்டுமல்ல. இது நேபாளத்தின் ஆழமான பிரச்சினைகளுக்கு எதிரான கூட்டுக் குரல். ஊழல், நெபோடிசம் (அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு சலுகைகள்), பொருளாதார நெருக்கடி ஆகியவை இளைஞர்களை விரக்தியடையச் செய்தன. நேபாளத்தில் ஒரு நபருக்கு ஆண்டு வருமானம் சராசரியாக 1,300 டாலர்கள் மட்டுமே. இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர், பலர் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர்.
ஆனால், அதே நேரத்தில், அரசியல் தலைவர்களின் குழந்தைகள் சமூக ஊடகங்களில் தங்கள் சொகுசு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றனர். புதிய கார்கள், விலையுயர்ந்த பொருட்கள் விடுமுறைகள் ஆகியவை ‘நெபோ கிட்ஸ்’ என்ற பெயரில் டிக்டாக்கில் வைரலாகின. இந்த வீடியோக்கள் அரசியல் குடும்பங்களின் ஊழலை வெளிப்படுத்தின. 2017- ஆம் ஆண்டில் நேபாள் ஏர்லைன்ஸ் Airbus விமானங்களை வாங்கிய ஊழல் விவகாரம், பாராளுமன்றத்தில் தீர்க்கப்படாமலேயே இருந்தது, இளைஞர்களின் கோபத்தை மேலும் தூண்டியது. “இது எங்கள் நாடு, நாங்கள் இழக்க மாட்டோம்” என்று முழங்கிய இளைஞர்கள், “ஊழலுக்கு எதிரான இளைஞர்கள்” என்ற பதாகைகளை ஏந்தினர்.
இந்த இயக்கம் தலைமையற்றது, ஆனால் வலிமையானது. ‘ஹமி நேபாள்’ என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் “யூத்ஸ் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” போன்ற குழுக்கள் துவக்கத்தில் ஒருங்கிணைத்தன, ஆனால் இது முழுக்க முழுக்க ஜென் Z இன் தன்னெழுச்சி இயக்கம். காத்மாண்டுவின் மைதிகர் மண்டலா, புதிய பனேஷ்வர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடினர். காவல் குழு கண்ணீர்ப் புகை, ரப்பர் குண்டுகள், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியது. இளைஞர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காத்மாண்டு மாவட்ட நிர்வாகம், பாராளுமன்றத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் தேவைப்பட்டதாக வாதாடியது. ஆனால், இளைஞர்கள் பின்வாங்கவில்லை. பொகாரா, பிரட்டநகர், ஜனக்பூர், ஹெட்டௌடா, நேபல்குஞ்ச் போன்ற நகரங்களுக்கும் இந்தப் போராட்டம் பரவியது. கர்ஃப்யூ அமல்படுத்தப்பட்டாலும், இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இராணுவ வாகனங்களின் முன் படுத்து, “இது நேபாளத்தின் வரலாற்று நாள்” என்று கூறினர்.
அரசு விரைவாகச் செயல்பட்டது. செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, சமூக ஊடகத் தடை திரும்பப் பெறப்பட்டது. தகவல் அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், “இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்கிறோம்” என்று அறிவித்தார். ஆனால், இது இளைஞர்களைத் திருப்திப்படுத்தவில்லை. அவர்களின் கோபம் தடையைத் தாண்டியது; அவர்கள் மாற்றம் கோரினர். செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இன்று, பிரதமர் ஓலி ராஜினாமா செய்தார். அவரது அலுவலகம், தனிப்பட்ட இல்லம் தாக்கப்பட்டன. நேபாள் காங்கிரஸ் அலுவலகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. “19 இளைஞர்களின் மரணம் கொலை” என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இந்தக் குழப்பத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டன, இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐ.நா., அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவை சுதந்திர விசாரணை கோரின. “அதிகபட்ச சக்தியைத் தவிர்க்கவும்” என்று அறிவுறுத்தின.
இந்தப் புரட்சி நேபாளத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. 2008-ஆம் ஆண்டில் மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு, நேபாளம் ஊழல், அரசு மாற்றங்கள் (17 ஆண்டுகளில் 13 அரசுகள்) ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. 2015- ஆம் ஆண்டில் அறிமுகமான அரசியலமைப்பு, உள்ளடக்கமான நாடு, வேலைவாய்ப்பு, சமத்துவம் ஆகியவற்றை உறுதியளித்தது. ஆனால், உண்மை வேறு. பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது, இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஜென் Z, டிஜிட்டல் உலகில் வளர்ந்தவர்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கோபத்தை ஒருங்கிணைத்தனர். “இது புதிய தலைமுறையின் போராட்டம்” என்று ஒரு இளைஞர் கூறினார். அவர்கள் அரசை அழிக்கவில்லை; மாறாக, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, சமத்துவம் ஆகியவற்றைக் கோருகின்றனர்.
இந்த இயக்கம் தலைமையற்றது என்பது அதன் வலிமையும் பலவீனமும். தலைமையின்மை இளைஞர்களை ஒருங்கிணைத்து, அரசுக்கு எதிராக ஒரு கூட்டு சக்தியாக மாற்றியது. ஆனால், இது இயக்கத்தை நீண்ட காலம் தொடர வைப்பதற்கு சவாலாக இருக்கும். ஓலியின் ராஜினாமாவுக்குப் பிறகு, புதிய அரசு எப்படி இருக்கும்? இளைஞர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறியே. பன்னாட்டு அரசுகள் மற்றும் சமூகங்களின் தலையீடும் உதவியும் தேவைப்படலாம். வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை கொண்ட மாற்று அரசும் நம்பிக்கை அளிக்கவல்ல தலைவர்/ தலைவர்கள் தேவை. இளைஞர்களை அமைதிப்படுத்த ஆக்கபூர்வ உடனடி நடவடிக்கைகள் அவசியம்.
இந்தப் புரட்சி ஊழலில் திளைக்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை: இளைஞர்களை அமைதிப்படுத்த முடியாது. டிஜிட்டல் உலகில் வளர்ந்த இவர்கள், தங்கள் குரலை அடக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்தப் புரட்சி உலகளவில் ஜென் Z இன் எழுச்சிக்கு ஒரு உதாரணமாக அமையும். கலவரத்தில் முன்னாள் பிரதமர் மனைவி பலியான நிலையில் நேபாள நிதியமைச்சர் பிஷ்ணு பவுடெல். அடித்து உதைத்து தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். இந்தியா, பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளில் இதன் எதிரொலி உணரப்படலாம். ஊழல், அநீதி, பொருளாதார நெருக்கடி ஆகியவை எங்கும் பரவி உள்ளன. இளைஞர்கள் இவற்றைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இளைஞர்களின் எதிர்பார்ப்பை, எழுச்சியை அடக்குமுறையால் ஒடுக்கிவிட முடியாது.






















கருத்துகள்