கோயம்புத்தூரில் தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலமான அவிநாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட மேம்பாலத்தை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு ஜி.டி.நாயுடு பாலம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில், ஜி.டி நாயுடுவின் மகன் கோபால், முதலமைச்சர் ஆகியோர் இணைந்து மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இது குறித்து பேசிய ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால், தமிழ்நாட்டின் அடையாளமாக உள்ள இந்த பாலத்திற்கு என்னுடைய தந்தை பெயர் வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.கோயம்புத்தூர் அவினாசி சாலை போக்குவரத்திற்கு நல்ல நிவாரணம்:
நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள்: நகரத்திற்குள் நுழைவதற்கு. 3 நுழைவு வழிகள்: 3 வெளியேறும் வழிகள் நகர மையத்திலிருந்து அமைந்துள்ளது
உப்பிலிப்பாளையம் ரெசிடென்சி ஹோட்டல் (நீதிமன்ற உத்தரவு காரணமாக மறு கட்டுமானத்தின் கீழ்)
எஸ்எம்எஸ் ஹோட்டல் மற்றும் பிஎஸ்ஜி டெக் இடையே
3 வெளியேறும் வழிககள்: அரவிந்த் கண் மருத்துவமனை தங்கம் வெற்றி ஆகியன நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை ரூபாய். 1791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு "ஜி.டி. நாயுடு மேம்பாலம்" என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
அதோடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை சார்ந்த தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ. 126.12 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில், முதற்கட்டமாக ரூ. 81.40 கோடி மதிப்பீட்டில் ஐந்து தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்கநகை பூங்கா திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, முதல்வர் பொற்கொல்லர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.









கருத்துகள்