சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக பிரிவு அலுவலகத்திற்கென 11 மாடிகளுடன் புதிய அடுக்குமாடிக் கட்டிடத்தை
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நேற்று திறந்து வைத்தனர். பாரம்பரியக் கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அறைகளுக்கு இணையாக நிர்வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரிவும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்கடியை கருத்தில்கொண்டு நிர்வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்தன்படி, எஸ்பிளனேடு நுழைவுவாயில் பகுதியில் 11 அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட புதிய நிர்வாகப் பிரிவுக் கட்டிடத்தை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அதன் பின் நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பேசிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ‘‘நீதித்துறை தனது நீதிபரிபாலனத்தை விரைவாக வழங்கிட நிர்வாகத் துறையின் செயல்பாடுகள் அவசியமானது மட்டுமின்றி, முக்கியமானதும் கூட. நீதித்துறையின் முதுகெலும்பாக உள்ள நிர்வாகத் துறைக்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்த குறையை இந்தப் புதிய கட்டிடம் தீர்த்து வைத்துள்ளது.இந்தப் புதிய கட்டிடத்தில் வழக்கு ஆவணங்களின் பாதுகாப்பு, நீதித்துறைக்கான வழக்கு ஆவணங்கள், கணக்குகள் அலுவலகங்கள், தபால் துறை உள்ளிட்ட நிர்வாகப் பிரிவு அலுவலகங்கள் இயங்கும். இந்த அடுக்குமாடி கட்டிடம் அமைவதற்கு உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி’’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல சென்னை பழைய சட்டக் கல்லூரிக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை அரசு சட்ட கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. கல்லூரியின் பிரதான வாயிலுக்கு அருகில், இரும்புக் கம்பிகள் மற்றும் கட்டைகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். காவல்துறையினர் கண் முன் நடந்த இந்த மோதல் சம்பவம் தமிழநாடு முழுவதும் அப்போது அதிர்வை ஏற்படுத்தியது. அதேபோல் பல்வேறு பிரச்னைகளுக்காக சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நீதிபதி சண்முகம் தலைமையிலான ஆணையம், தற்போதுள்ள இடத்தில் சட்டக் கல்லூரியை மூடிவிட்டு புதிய இடத்திற்கு கல்லூரியை இட மாற்றம் செய்ய வேண்டுமென் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளித்ததை
ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு 118 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மாவட்டம், பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் ஒரு சட்டக் கல்லூரியும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் மற்றொரு சட்டக் கல்லூரியும் கட்டியது. 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல் புதிய இடத்தில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. அதன் பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட சட்டக் கல்லூரியின் இடம் மூடப்பட்டு உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பிற்குள் வந்தது.
தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இடநெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தாலும் புதிய நீதிமன்றங்களின் தேவை ஏற்பட்டதாலும் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்த புராதனக் கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிமன்ற அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 133 ஆண்டுகள் பழமையான சட்டக் கல்லூரியை பழமை மாறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று உயர் நீதிமன்றத்திற்காக இங்கு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துடக்கவிழாவும் நடந்தது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் புராதன கூடுதல் நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிடத்தின் திறப்பு விழா, உச்சநீதி மன்ற மாண்புமிகு நீதியரசர் சூர்யா காந்த் அவர்கள், மாண்புமிகு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள், 26.10.2025 இன்று கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, மற்றும் தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.













கருத்துகள்