2025-26-ஆம் கல்வியாண்டுக்கான 10,மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை CBSE வெளியிட்டது,
CBSE பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி , 2026 முதல் துவங்குகின்றன. 2026 ஆம் ஆண்டு முதல், தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே பொதுத் தேர்வுகளை எழுத முடியும். 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று CBSE தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
தேர்வு துவங்கும் தேதி: பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, 2026
தேர்வு நடைபெறும் காலம்: பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 10 ஆம் தேதி, 2026 வரை
முக்கிய மாற்றங்கள்: 2026 ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.2026 ஆம் ஆண்டு முதல், CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், புதிய தேர்வு முறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன, இது தேர்வு அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்கிய பொதுத் தேர்வுகளிலிருந்து பொருந்தும் 2026 முதல், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
புதிய தேர்வு முறை: தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் தேர்வு முடிவு: முதல் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் தேர்வு முடிவுகள் அதற்குப் பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகைப் பதிவு: மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத, 75 சதவீதம் பள்ளி வருகைப் பதிவு கட்டாயமாகும்.







கருத்துகள்