நிலங்கள் குறித்த பாதுகாப்பு ஆவணங்கள் தொலைந்தது குறித்து நடவடிக்கை எடுக்கவும் ரூபாய் 25000 அபராதம் விதித்து தகவல் ஆணையம் உத்தரவு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் பள்ளக்காட்டுப்புதூர் பழனியப்பன், கிராம வரைபடம் உள்ளிட்ட சில ஆவணங்களின் நகல்களைகா கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கக் கோரியிருந்தார்.
ஆனால், இந்த ஆவணங்களை பொது தகவல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வழங்கவில்லை அதற்கு அடுத்து முதல் மேல்முறையீடு 45 நாளில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு தாக்கல் செயத நிலையில் அப்போதும் வழங்கவிலை என்பதால் இரண்டாம் மேல் முறையீடு மாநிலத் தகவல் ஆணையத்திற்கு 90 நாட்கள் முடிந்த நிலையில் தாக்கல் செய்தார். அப்போது நடந்த தொலைபேசி விசாரணை முடிவில் வழங்கும்படி தெரிவித்த வாய்வழி உத்தரவிலும் தரவில்லை இதனால் பொது தகவல் அலுவலரான நாமக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு எதிராக சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அவர் நிறைவேற்ற மனுவை தாக்கல் செய்து முறையிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'மனுதாரர் கோரிய கிராம வரைபடம் அலுவலகப் பதிவறையில் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை' என நாமக்கல் மாவட்ட பொது தகவல் அலுவலர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த மாநிலத் தகவல் ஆணையம், 'மனுதாரர் கோரிய ஆவணங்களை அலுவலகக் கோப்புகளை தேடிப்பார்த்து வழங்க வேண்டுமென 23.3.2022 ஆம் தேதியன்று உத்தரவிட்டது .இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை மாநிலத் தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் விசாரித்தார். அப்போது, நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, 'மனுதாரர் கோரிய ஆவணங்கள் சேலம் மாவட்ட நில அளவை அலுவலகத்தில் இருக்கலாம் எனக் கருதி அந்த ஆவணங்களின் நகல் கோரி கடிதம் அனுப்பினோம். அவர்கள் தங்கள் அலுவலகப் பராமரிப்பில் அந்த ஆவணங்கள் இல்லை எனத் தெரிவித்து விட்டனர்' என்று பதில் சொல்லி தப்பிக்க நினைத்து பிரமானப் பத்திரம் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "தகவல் ஆணையம் 23.3.2022 அன்று பிறப்பித்த உத்தரவை மதிக்காததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது அதிகார அமைப்புக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் வருவாய்த்துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். ஆனால் அந்த ஆவணங்கள் பராமரிப்பில் இல்லை என அளிக்கப்பட்டுள்ள பதில் முற்றிலும் ஏற்புடையதல்ல,
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் கோரிக்கை அடிப்படை யில்
நிரந்தரப் பதிவேடுகளான கிராம வரைபடம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பராமரிப்பதும், பாதுகாப்பதும் வருவாய்த்துறையின் முக்கியக் கடமையாகும். மனுதாரர் கோரிய ஆவணங்கள் எப்படி மாயமானது? என்பது குறித்து நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் வருவாய்த் துறை ஆவணங்கள் காணாமல் போனதற்கு பொறுப்பான நபர் யார்? என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து அது குறித்து அறிக்கையை டிசம்பர் மாதம் 18- ஆம் தேதி நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.நிலம் தொடர்பான அளவை ஆவணங்கள் மற்றும் வருவாய் துறை வரிவிதிப்பு சார்ந்த ஆவணங்கள் வருவாய் ஆணையர்,
நில அளவை மற்றும் நில வரித்திட்ட ஆணையரகம், சர்வே ஹவுஸ், காமராஜர் சாலை,சேப்பாக்கம்,சென்னை - 600005. மற்றும் அந்நந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக்காப்பகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.
இது குறித்து சுற்றறிக்கைகள் மற்றும் அரசாணை களின் விபரம் கீழ் உள்ளது
1) CSO-CIRCULAR DATE: 12-03-2024,
2) CSO - CIRCULAR 1/11886/2023 (.) : 23.07.2023.
3) CSO - CIRCULAR -3/40472/2015 (.) : 23.12.2015,
4) PIO, O/o Collector, Dpi, Letter No. ..9839/2025/13, : 23.05.2025,
5) PIO, O/o Collector, Dpi, Letter No. ..1527/2025/13, %: 03.02.2025,
6) PIO, O/o Collector, Dpi, Letter No. ..1871/2025/13, : 30.01.2025,
7) PIO, O/o Collector, Dpi, Letter No. ..19441/2024/13, : 19.08.2024,
8) PIO, O/o Collector, Dpi, Letter No. ..4878/2024/13, : 21.03.2024,
9) PIO, O/o Collector, Dpi, Letter No. ..49192024/13, : 20.03.2024,
..32285/2023/13, : 18.01.2024, 10) PIO, O/o Collector, Dpi, Letter No.
11) G.O. Ms No. 370, R and DM Deptt 21-07-2020,
12) G.O.(MS) No.450. R&DM Deptt. Dated 21.11.2019. இவை கூறும் விபரங்கள் படி சட்டம் கடமையைச் செய்யத் தவறும் அரசு பணி அலுவலர்கள் அதற்கு லஞ்சம் கேட்கும் சூழல் தமிழ்நாட்டில் தான் அதிகம், அதேபோல் ஊழல் குற்றம் செய்து ஆவண மறைப்பு செய்தவர்களை காப்பாற்ற முயலும் சில ஊழியர்கள் உள்ள வரை பழனிசாமி போன்ற நபர்கள் நடவடிக்கை தேவை.









கருத்துகள்