எண்ணூர் அனல் மின் நிலையக் கட்டுமான விபத்தில் 9 பேர் பலி; சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து 9 பேர் பலியாகினர்.
பிரதமர் நரேந்திர மோதி, முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்
வளைவு அமைக்கும் பணி செய்து கொண்டிருக்கும் போது சாரத்தின் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது.
பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் நிலையத்தில் திட்டக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. அதில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது சாரம் சரிந்ததில், 9 வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், " 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்றது. இந்த நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்தது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்தனர்." எனத் தெரிவித்தனர்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் வட இந்தியத் தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அலுவலரின் கருத்துப்படி பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றியுள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசியுள்ளோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் பேசியுள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்
சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அலுவலர்களும் இருப்பதாகவும் விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூபாய்.10 லட்சம் நிவாரணமாக அரசு வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய். 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய். 50,000 வழங்கப்படும் என பிரதயர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
கருத்துகள்