இந்திய கடற்படைக் கப்பல் சஹ்யாத்ரி மலேசியாவின் கேமாமனுக்கு பயணம் - தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிக்கும் பயணம்
இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்பாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக 2025, அக்டோபர் 2 அன்று மலேசியாவின் கேமாமன் துறைமுகத்தை சென்றடைந்தது. ராயல் மலேசிய கடற்படை கப்பலுக்கு அன்பான வரவேற்பு அளித்தது.
2012-ல் செயல்பாட்டுக்கு வந்த இக்கப்பல், சிவாலிக் வகுப்பு ஏவுகணை போர்க்கப்பல்களின் வரிசையில் மூன்றாவதாகும். 'சுயசார்பு இந்தியா' முன்முயற்சியின் சிறந்த உதாரணமாக திகழும் இது, பல நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பயிற்சிகளில் பங்கேற்றுள்ளது.
மலேசியாவிற்கு ஐஎன்எஸ் சஹ்யாத்ரி வருகை தருவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 2016-ல் போர்ட் கிளாங்கையும், 2019-ல் கோட்டா கினாபாலுவில் 'சமுத்ரா லக்ஷமன' பயிற்சியிலும் பங்கேற்றது.
மூன்று நாள் வருகையின்போது மூத்த கடற்படை அதிகாரிகளுக்கு அணிவகுப்புடன்கூடிய மரியாதை அளித்தல், தொழில்முறை பரிமாற்றங்கள், பயிற்சி, விளையாட்டு போட்டிகள் மற்றும் நகரத்தில் உள்ள பொழுதுபோக்கு இடங்களை பார்வையிடல் ஆகியவை இடம்பெற்றன. பணியாளர்கள் யோகா பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்தியாவும் மலேசியாவும் ஆயிரமாண்டுகால கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் பெருங்கடல் முன்முயற்சியும், மலேசியாவின் ஆசியான் இந்தோ-பசிபிக் பார்வையும் கடல்சார் ஒருங்கிணைப்பு மூலம் இரு நாடுகளுக்கும் செழிப்பை வழங்குகின்றன. லிமா கண்காட்சி, மிலன் பயிற்சிகள் மற்றும் 2024 இல் 'சமுத்ரா லக்ஷமன' பயிற்சியின் வெற்றி, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.

(7)PJVE.jpeg)
(7)R0DN.jpeg)
கருத்துகள்