முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல் ஆய்வாளரை லஞ்ச வழக்கில் சிறைக்கு அனுப்பிய பலே திருடன்

குள்றவாளியை விடுவிக்க ரூபாய்.3 லட்சம் வஞ்சம் வாங்கிக் கைதான நாகர்கோவில் காவல் ஆய்வாளர்

 கைதுக்கு முன் சீருடை

 கைதுக்குப் பின் வேறுடை

அன்பு பிரகாஷ் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவில் வட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, திருடன்  கொள்ளையடித்த 38 பவுன் தங்க நகைகளில் இவர் மீது 20 பவுன் தங்ங நகைகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது  அதன் பின்னர்  விசாரணை செய்து பணியிடை நீக்கம் செய்யாமல் காப்பாற்ற நினைத்து நேசமணி காவல் நிலைய  ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்ட அன்பு பிரகாஷ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள அந்த திருட்டு வழக்கிலிருந்து அவனை விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆய்வாளர் அன்பு பிரகாஷ்.



முதல் தவணையாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முன் பணம் பெளற்றதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், வழக்கில் இருந்து அவனை விடுவிக்காமல் லஞ்சப்பணம் மீதித் தொகையான 1,15,000 ரூபாய் தந்தால் மட்டுமே வழக்கின் குற்றப்பத்திரிகையில் பெயரை நீக்குவதாகவும், இல்லையென்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்ப்பதாகவும் மிரட்டலாகக்  கூறிய ஆய்வாளருக்கு.

அதற்குமேல் பணம் கொடுக்க விரும்பாத திருடன் ராஜன் என்ற சந்தை ராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல்  கண்காணிப்பாளர் எஸ்காலிடம் புகார் கொடுத்து




அவர்கள் ஆலோசனைப் படி பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை ராஜன் என்ற சந்தை ராஜனிடம் கொடுத்து லஞசமாகக் கொடுக்கும் படி அறிவுரை கூறி அனுப்பினர். தன்னிடம் மீதி பணம் உள்ளதென ஆய்வாளர் அன்பு பிரகாஷுக்கு ராஜன் என்ற சந்தை ராஜன் தகவல் வழங்கியுள்ளார். வெள்ளமடத்திலுள்ள தனது வீட்டிற்கு பணத்தைக் கொண்டுவரும்படி ஆய்வாளர் கூறியுள்ளார். அதனடிப்படையில் ராஜன் என்ற சந்தை ராஜன் வெள்ளமடத்தில் உள்ள ஆய்வாளர் அன்பு பிரகாஷ் வீட்டுக்குச் நேற்று முன்தினம் இரவு அரசு சாட்சி ஒருவருடன் சென்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்துள்ளார்




அப்போது லஞ்சப் பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்  துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், மற்றும் குழுவில் அருண் அசரியா உள்ளிட்டோர் அடங்கியோர் பணம் பெற்ற கையுடன் பிடித்து கைதானார்.

அவரைக் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர் அவரை சிறைக்கு கொண்டு செல்லும் போது அன்பு பிரகாஷ் மயங்கி விழுந்துள்ளார். பிடிபடும் போது மயங்காதவர் உண்மையாகவே  சிளை செல்லும் போது மயங்கினாரா அல்லது மருத்துவ சிறைக்காக நடித்தாரா என்பதும் இனிமேல் தான் தெரியும்.



அதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக விஜிலன்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் விபரம்  வருமாறு 

அன்பு பிரகாஷ் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சார்பு ஆய்வாளராக மற்றும் பதவி உயர்வு மூலம் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.

இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது இந்த வழக்கில் இவரை சிக்கவைத்த திருடன் ராஜன் என்ன சந்தை ராஜன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளைத் திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு.



மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துத் சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது வீட்டில் சோதனை நடத்திய போது பறிமுதல் செய்து வருமான வரி கணக்கில் காட்ட்டப்படாத நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது


அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ரூபாய். 1.15 லட்சம் திருடனிடமே லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டார் ஆய்வாளர் அன்பு பிரகாஷ்.காரைக்குடியில் பயிற்சி உதவிக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி  தற்போது கன்னியாகுமாரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறார். டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் இன்று.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி ஆய்வாளர் கைதானதன் எதிரொலியாக

மூன்று ஆய்வாளர்கள், 8 சார்பு ஆய்வாளர்களை பிற மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்தும், சரியாக தகவல் தராத

12 காவல் நிலைய தனிப்பிரிவுக் காவலர்களை தனிப்பிரிவிலிருந்து நீக்கம். செய்தும் இந்த வழக்கு சம்பந்தப்பட்டதில் காவலர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்தம் 

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டக் காவல் துறையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் காலம்கடந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளது அவரது கடமை குறிப்பாக தக்கலை, குளச்சல், இரணியல், ஆகிய காவல் நிலையக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் 8 காவல் சார்புஆய்வாளர்கள் பிற மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .  மேலும் நேசமணி நகர் காவல் நிலைய காவலர் சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நடவடிக்கை போதாது கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மத்தியிலும் மேலும் லஞ்சம் வாங்கும் காவலர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடருமென்பதோடு அவர்கள் மீது பணியிடை நீக்கம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் இது காவலர்கள் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு முழுவதும் தடை விதிப்பதாகவே  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து மேலும் நேர்மையாகப் பணியாற்றும் காவலர்கள் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் அது போல் எல்லா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் முடிவெடுத்தால் ஊழல் நபர்களை எங்கு மாற்றுவது. ஊழல் குறையுமா என்பதே பலரது எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...