முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமாவளவன் பிரச்சனையைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகத் தெரிகிறது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கருத்து

திருமாவளவன்  பிரச்சனையைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகத் தெரிகிறது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கருத்து. 


வி சி கட்சியினர் வழக்கறிஞர் மீது  தாக்குதல் நடத்தியது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்க்கவுன்சில் இணைத்தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பாதுகாப்பு அணித் தலைவருமான வழக்கறிஞர் கே. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசரமனு :-WP Crl No 1146/ 2025 ல், பொது வெளியில் தன்னை அவதூறாகப் பேசிய விசிக வழக்கறிஞர் அறிவுடை நம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை


விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் சதீஷ்குமார், தாக்குதல் நடத்தப்பட்ட முழுச் சம்பவமும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது, தாக்குதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பே நடந்திருந்தும், குற்றவாளிகள்  பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞரைக் கடுமையாகத் தாக்கியிருந்தும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததைத் தவிர காவல்துறை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரைத் திருப்தி செய்ய காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது,



குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஒரு வாரத்திற்குள்  நீதிமன்றத்தில் அறிக்கை (Status Report) தாக்கல் செய்ய வேண்டுமென்றும் காவல்துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை (CCTV Footage) காவல்துறை உடனடியாக கைப்பற்ற வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்




இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அரசியல் கட்சியின் தலைவரான திருமாவளவன் வன்முறையைத் தூண்டுவதற்குப் பதிலாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய  நபர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டாமா? என வழக்கை அனுமதித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.  வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் 

நடத்திய விசிகட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலைத் தயங்குவது ஏன்? என ஏற்கனவே பார் கவுன்சில் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே பாலு கேள்வி எழுப்பி இருந்த நிலையில்




சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயிலுக்கு வெளியில், சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மீது விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதுடன்,  அவரை  விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர்  கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அவரது இரு சக்கர வாகனத்தை சாலையில் தள்ளி சேதப்படுத்தியுள்ளனர். 




உயிருக்குப் பயந்து ராஜீவ் காந்தி அருகிலுள்ள பார் கவுன்சில் அலுவலகத்தில் புகுந்து தஞ்சமடைந்த நிலையில்,  பார் கவுன்சில் அலுவலகத்திற்கு உள்ளேயே அத்துமீறி நுழைந்த  வி சி கட்சியைச் சேர்ந்த  வழக்குரைஞர்கள் சிலர்,  ராஜீவ் காந்தியை சரமாரியாக தாக்கியதுடன் பார் கவுன்சில் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தாக்கப்பட்ட நிகழ்வு  பார் கவுன்சில் அலுவலக சிசிடிவியில் பதிவாகியுள்ளது.   இச்சம்பவத்தை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பார்த்து  தமிழ்நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சிடைந்ததோடு, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில்யில் சமூக வலைதளத்தில் திருமாவளவன் மீதும்  விசிகவினர் மீதும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தற்போது வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் காரணங்களுக்காக பழி போடுவதாக கூறுவார்கள் என்பதால், இச்சம்பவம் தொடர்பாக நான் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தேன்.  

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்ததோடு ’’எங்களைப் பார்த்து முறைத்ததற்காக எங்கள் கட்சியினர் நாலு தட்டு தட்டினார்கள். அதையும் ஒழுங்காகக் கூடச் செய்யவில்லை. அவர் எந்த ஜாதி என்று பார்த்து அடிக்கவில்லை’’ என்று ஆணவமாகக் கருத்து தெரிவித்து உள்ளார் இது வன்மையாகக் கண்டிக்க தக்கது. 



பார்கவுன்சில் அலுவலகத்திலிருந்து சிசிடிவி பதிவை கைப்பற்றிய காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி  அளித்த  புகார் மீது இதுவரையில் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.  மேலும் பார் கவுன்சில் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பார் கவுன்சிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்காததோடு அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. விசிக தலைவர் திருமாவளவன் பார் கவுன்சிலில் பதிவு செய்த ஒரு வழக்கறிஞர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

உயர்நீதிமன்றத்தின் முன் நிகழ்ந்த இந்தக் கொடிய தாக்குதல்  தொடர்பாக  நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக பார் கவுன்சில் நிர்வாகிகள் மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த  விவகாரத்தில் பார் கவுன்சில் அதன் கடமையைச் செய்ய வேண்டும் என்று  என  பார் கவுன்சில் தலைவர் சகோதரர் அமல்ராஜிடம் தெரிவித்தேன். அதன் பிறகும்  அவர் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருவது பெரும் கவலை அளிக்கிறது.  வழக்கறிஞர் நலனைப் பாதுகாக்க வேண்டியது தான் பார் கவுன்சிலின்  முதன்மைக் கடமையாகும். 

உயர்நீதிமன்றத்தின்   முன் நடந்த நிகழ்வு  எதிர்பாராத ஒன்றாக, திடீர் கோபத்தின் விளைவாக இருந்து, பாதிக்கப்பட்டவரிடம் தாக்குதல் நடத்தியவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தால் இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதி கடந்து சென்றிருக்கலாம்.  உண்மையில் இந்த சம்பவத்தில்  தொடர்புடைய  வி சி கட்சியினரை  அவர்களின் தலைவர்  திருமாவளவன்  கண்டித்திருக்க  வேண்டும். ஆனால்,  உயர்நீதிமன்ற வாயில் முன்பாக காவல்துறையினர்  முன்னிலையில்  வழக்கறிஞரைத் தாக்கியவர்களை பாதுகாக்கும் வகையில், திருமாவளவன் தொடர்ந்து ஆணவத்துடன் கருத்துத் தெரிவித்து வருவது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. 






உயர்நீதிமன்ற வாயில் முன் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு புறமிருக்க,  பார் கவுன்சில் வளாகத்திற்குள் நுழைந்தும்  அவர் மீது  வி சி கட்சியைச் சேர்ந்த  வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதன்  மூலம்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புனிதம் கறைபட்டிருக்கிறது. பார் கவுன்சில் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்து தண்டிக்க வைப்பது; வழக்கறிஞர்களான அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றின் மூலமாக மட்டுமே பார்கவுன்சிலின் புனிதத்திற்கு ஏற்பட்ட கறையை கழுவ முடியும். பார் கவுன்சில் நிர்வாகம் அதை செய்யப் போகிறதா அல்லது புனிதத்தைக் கெடுத்தவர்களை பாதுகாக்கப் போகிறதா? என்பது தான் எனது வினா.

இந்திய பார்கவுன்சில் மற்றும் அதன் கீழ் இயங்கும் மாநில பார் கவுன்சில்கள் 1961-ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.  அந்தச் சட்டத்தின்  6-ஆவது பிரிவில்  மாநில பார் கவுன்சில்களின் கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதில் உட்பிரிவு டி -யில்    பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்களின்  உரிமைகள், சிறப்புரிமைகள், நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது   மாநில பார் கவுன்சிலின் கடமை    ((d) to safeguard the rights, privileges and interests of advocates on its roll; என தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.  அந்தக் கடமையைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரி பார் கவுன்சில் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைக் கண்டு, அதன் உறுப்பினர், இணைத் தலைவர், வழக்கறிஞர் பதிவுக் குழு தலைவர்  என்ற முறையில் நான் தலைகுனிகிறேன்.

சர்வாதிகாரம் கொண்ட ஆணவப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதே செயலை வேறொரு கட்சியைச் சார்ந்தவர் அல்லது வேறொரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டிருந்தால் இதே நிலைப்பாட்டைத்  தான் பார் கவுன்சில் மேற்கொண்டு இருக்குமா? என்ற கேள்வியை என் பெருமதிப்பிற்குரிய பார் கவுன்சில் உறுப்பினர்கள் முன்  நான் எழுப்ப விரும்புகிறேன் 

நிலைமையை உணர்ந்து பார் கவுன்சில் தலைவர் பார் கவுன்சில் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்டி விவாதித்து,  கொடூரத் தாக்குதலில்  ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீதும் அதற்கு  காரணமான விசிக தலைவர் திருமாவளவன் மீதும் ஒழுங்கு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்  அன்புடன் வழக்கறிஞர் கே பாலு இணைத்தலைவர் மற்றும் தலைவர் வழக்கறிஞர் பதிவுக் குழு,    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில். என அவர் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் அதன் பின்னர் தமிழ்நாட்டின் பலபகுதிகளில் "ஒன்றுகூடிய வழக்கறிஞர்கள்! போராட்டமும் நடத்தினர் இந்த நிலையில் டெல்லி உள்துறைக்கும் சென்ற இந்த விஷயம்!  விசிக வுக்கு தடை விதிக்க நடவடிக்கை வருமா எற்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது ? மொத்தமாகவே மாறியது வழக்கறிஞர் போராட்டக் களம்!"  இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்_தாக்கப்பட்ட சம்பவம். குறித்து விசாரணை நடத்தக்குழு அமைத்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில். சென்னையில் திருமாவளவனின் கார் வழக்கறிஞர ராஜீவ் காந்தி இருசக்கர வாகனம் மீது மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம். தொ டர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரைக் கொண்ட சிறப்புக்குழுவை  நியமித்து பார்கவுன்சில்  நடவடிக்கை எடுத்தது  அதன் பின்னர் வி சி கட்சியினர் வழக்கறிஞர் மீது  தாக்குதல் நடத்தியது தொடர்பாக பார்க்கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் கே. பாலு தாக்கல் செய்த அவசர WP Crl No 1146/25 வழக்கில், தன்னை அவதூறாகப் பேசிய விசிக வழக்கறிஞர் அறிவுடை நம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதியரசர் சதீஷ்குமார், தாக்குதல் நடத்தப்பட்ட முழுச் சம்பவமும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது, தாக்குதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பே நடந்திருந்தும், குற்றவாளிகள்  பார் கவுன்சில் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞரை கடுமையாகத் தாக்கியிருந்தும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததைத் தவிர காவல்துறை வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரை திருப்தி செய்ய காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள்  நீதிமன்றத்தில் அறிக்கை (Status Report) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை (CCTV Footage) காவல்துறை உடனடியாக கைப்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர், வன்முறையைத் தூண்டுவதற்குப் பதிலாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய  நபர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்க வேண்டாமா? என்றும்  நீதிபதி கேள்வி எழுப்பினார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...