தேசக் கட்டமைப்பில் ஆர்எஸ்எஸ்-ன் வளமான பங்களிப்புகளை எடுத்துரைத்து, பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் நிகழ்த்திய எழுச்சி உரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்காக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் நிகழ்த்திய எழுச்சி உரையைக் குறிப்பிட்டு, தேசக் கட்டமைப்பில் சங்கத்தின் முக்கிய பங்களிப்பையும், இந்தியாவின் நாகரிக விழுமியங்களை வளர்ப்பதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஆர்எஸ்எஸ் பதிவுகளுக்கு பதிலளித்து திரு மோடி எழுதியிருப்பதாவது:
“பரம் பூஜ்ய சர்சங்ச்சாலக் டாக்டர் மோகன் பகவத் அவர்களின் எழுச்சி உரை, தேசக் கட்டமைப்பில் ஆர்எஸ்எஸ்-ன் வளமான பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. புகழின் புதிய உயரங்களை அடையவும், அதன் மூலம் மொத்த புவிக்கோளுக்கு பயனளிக்கவும் நமது நாட்டின் உள்ளார்ந்த திறனை வலியுறுத்துகிறது.
கருத்துகள்