அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் பணியாற்றிய காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில்
முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது பணிக்காலம் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி முடிவடையும் நேரத்தில் ஒரு நாளுக்கு முன் தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வேல்ராஜ் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்த நிலையில், அவர் மீது எடுக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்து அவரது ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்ததில் பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து வரும் உயர்கல்வித் துறை செயலாளர் பொ.சங்கர் தலைமையிலான கன்வீனர் குழுவினர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்ட போது, முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் மீதான பணியிடைநீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க வலியுறுத்தி சிண்டிகேட் உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர்.அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஜெ..பிரகாஷை பணியிலிருந்து மாற்றம் செய்ய பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியதாகத் தகவல்!
முறைகேடு புகார் விவகாரம் பதிவாளர் ஜெ.பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிவதால், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தும் நிலையில் (DVAC), முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட ஒருவர்,தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடாதென சிண்டிகேட் குழுக் கூட்டத்தில் முடிவு. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் போலியாக பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில், பல கல்லூரிகள் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிவதாகக் கணக்குக் காட்டின. இந்த முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரான வேல்ராஜுவுக்கும் இதில் தொடர்பிருப்பதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது
மட்டுமல்லாமல் 11 அலுவலர்களுக்கும் அதில் தொடர்பிருப்பதாகவும் அதில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஜெ.பிரகாசும் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்ததில் போலியான பேராசிரியர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் அலுவலர்களை அவர்கள்செய்து வந்த யணிப் பொறுப்பிலிருந்து விடுவிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் மேலும் பதிவாளர் ஜெ.பிரகாஷை பணியிலிருந்து மாற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் குழு அனுமதி வழங்கிய அதிகாரப்பூர்வமான தகவலை உயர்கல்வித்துறை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.






கருத்துகள்