அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும், இன்று அதன் உள்ளே ஏற்பட்டிருக்கும் பிளவுகள் காரணமாக
தன்னை MGR ஆகவே பார்க்கும் சிலுவம்பாளையம் பழனிச்சாமி
கட்சியை அழிவின் விளிம்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சி தேங்காய் போல உடைபட்டு அதில் ஒரு மூடி அதிமுக மறு மூடியில் பாதி அமமுக டி. டி.வி.தினகரன் மற்றொரு பாதி ஒ. பன்னீர் செல்லம் மற்றும் வி. கே. சசிகலா நடராஜன் உள்ளிட்ட பலர இதன் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி.அவரது பொதுச்செயலாளர் பதவி என்ற அதிகாரத்தில், மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினராகவே நீக்கியது, அக் கட்சி வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகிவிட்டது. இந்தச் செயல், கட்சியின் ஒற்றுமையை அழித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய அணிக்கு வெற்றியைப் பரிசாக வழங்கும் முயற்சி என்பது தெளிவாகவே தெரிகிறது
முதலில், இந்தச் சம்பவத்தின் பின்னணியைப் பார்க்கலாம். அதிமுக, முன்னால் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரால் 1972 இல் தொடங்கப்பட்டது. அது முன்னால் முதலவர் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் வலுப்படுத்தப்பட்டது. ஆனால், 2017 இல் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சி பிளவுகளால் சூழ்ந்தது. ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா போன்றோர் வெளியேற்றப்பட்டனர். TTV, தினகரன் தனித்தனி கட்சி துவங்கும் நிலைக்கு ஒரு பட்டயக் கணக்கரின் சூழ்ச்சி காரணமாகத் தளளப்பட்டனர் இதனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டுமே கட்டுத் தொகையை இழந்தது. எடப்பாடி 10 தோல்வி பழனிசாமி என்றே அழைக்கப்பட்டார். கட்சிக்குள் ஒற்றுமை குறித்துப் பேசிய பலரும் நீக்கப்பட்டார்கள், கட்டம் கட்டப்பட்டனர்.
இந்த நிலையில், கே. ஏ. செங்கோட்டையன், கட்சியின் மூத்த உறுப்பினராக, வெளியேறிய தலைவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரினார். இது கட்சியை வலுப்படுத்தும் ஒரு நல்ல யோசனை. இதற்கு பதிலடியாக, எடப்பாடி கே. பழனிச்சாமி, கே. ஏ செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர்,மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புக்களிலிருந்து நீக்கினார். அவரது ஆதரவாளர்களான ஏழு தொண்டர்களையும் நீக்கினார். இது, செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி, 2025 அன்று திண்டுக்கல் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. இது, கட்சியின் ஒற்றுமையை விரும்பாத ஒரு குரோதச் செயல் என்று ஒற்றுமையை விரும்பும் தொண்டர்களால் விமர்சிக்கப்பட்டது.
எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியை 'இராணுவம் போல' நடத்த விரும்புகிறார் என்று சொல்கிறார். ஆனால் தனியே கட்சி சின்னம் இல்லாமல் வேறு தொகுதி நின்றால் கடடுத் தொகை பெறுவாரா என்பது சந்தேகம் தான் என்ற நிலையில், செல்வி ஜெ.ஜெயலலிதா கூட, விமர்சனங்களைச் சமாளித்து, கட்சியை ஒருங்கிணைத்தார். எடப்பாடி கே. பழனிசாமியோ, எதிர்ப்பை அடக்க வன்மம் தீர்க்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். கே.ஏ.செங்கோட்டையன், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கோயமுத்தூர் ஈரோடு சார்ந்த கொங்கு பகுதி மண்டல விவசாயிகளின் குரல். அவரை நீக்குவது, கட்சியின் கிராமப்புற அடிப்படையையே அழிப்பதாகும். கே. ஏ.செங்கோட்டையனின் கோரிக்கை, வி.கே.சசிகலா நடராஜன், ஓ.பன்னீர் செல்லம்., டி. டி. வி.தினகரன் போன்றோரை கட்சிக்குத் திரும்ப அழைப்பது தான். இது, கட்சியை வலுப்படுத்தும் முயற்சி. ஏனென்றால், 2021, 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில் கட்சியின் பிளவுகளால் அதிமுக படு தோல்வியடைந்தது நிதர்சனம். இதைப் ஏற்க மனமில்லாமலும், மறுத்தும் , திமுகவின் பி டீம்' என்று விமர்சித்து, தனது எதிரிகளைப் பெருக்குகிறார். இது, அவரது அரசியல் அறிவின் குறைபாடு அன்றி வேறில்லை.
எடப்பாடி கே. பழனிசாமியின் செயலின் தாக்கங்கள் ஆழமானவை. முதலாவதாக, கட்சியின் ஒற்றுமை அழியும். கே.ஏ. செங்கோட்டையன், அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தினகரனுடன் இணைந்து மரியாதை செலுத்தச் சென்றார். இது ஒரு குற்றமாகக் கருதப்பட்டு , கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தாலும், வெளியேற்றும் அதிகாரம் எனக்கிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார். ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகளில் செங்கோட்டையனுக்கு பெரிய ஆதரவு உண்டு.
அவரை இழந்தால், அந்தப் பகுதிகளில் கட்சி வலுவிழக்கும். எடப்பாடி கே. பழனிசாமி தனது தனிப்பட்ட அதிகாரத்தைப் பாதுகாக்க, கட்சியை அழிக்கிறார். இது, எம்.ஜி.ஆரின் கனவுகளுக்கு மாறுபட்டது. எம்.ஜி.ஆர். கூட, விலகிய உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தார். ஜெ. ஜெயலலிதா, கட்சியை ஒருங்கிணைத்து ஆட்சி பெற்றார். எடப்பாடி பழனிசாமியோ, தனது தோல்விகளை மறைக்க, பொதுச் செயலாளர் என்ற அதிகார மிதப்பில் உண்மையான தலைவர்களைத் தூக்கி அடிக்கிறார்.
இந்த நீக்கம் கடுமையாக விமர்சனத்திற்கு உரியது. இது, உட்கட்சியின் ஜனநாயகத்தின் கொலை. ஒரு மூத்த தலைவரின் கருத்துக்கு, விளக்கம் கேட்காமல் நீக்குவது, அபத்தம். எடப்பாடி கே. பழனிசாமி தனது பதவியைப் பாதுகாக்க, கட்சியின் எதிர்காலத்தை அழிக்கிறார். கே. ஏ. செங்கோட்டையன் போன்றோர், கட்சியின் உண்மையான முகங்கள். அவர்களை நீக்குவது, கட்சியை வணிக நிறுவனமாக மாற்றுவது அன்றி வேறில்லை. தி.மு.க. இதைப் பயன்படுத்தி, அதிமுகவில் ஒற்றுமை இல்லை' என்று பிரச்சாரம் செய்யும்.
எடப்பாடி கே. பழனிசாமியின் இந்தச் செயல், அதிமுக உட்கட்சி ஜனநாயகத்திற்கு சவுக்கடி. கே. ஏ.செங்கோட்டையன் போன்ற உண்மையான போராளிகளை நீக்குவது, கட்சியை அழிவுக்கு அனுப்பும். அதிமுக கட்சித் தலைவர்கள், உடனடியாக ஒற்றுமை முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி தன்னை சாதாரணத் தொண்டராக இருந்து உயர்ந்தவர் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார். இது உண்மையானால், தொண்டர்களின் மன நிலை, கட்சியின் ஒற்றுமையின் பலத்தினை அறிந்திருப்பார். எடப்பாடி கே.பழனிசாமி தனது தவறை உணர்ந்து,கே. ஏ செங்கோட்டையன் நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், கட்சியின் வரலாறு, இந்த நீக்கத்தை ஒரு பாடமாகப் பதிவு செய்யும். தமிழ்நாட்டு அரசியல், ஒற்றுமையால் மட்டுமே வளரும்.
பிளவுகள், அழிவைத் தான் தரும். இது அக்கட்சியின் பலரது கருத்து. இதில் என்ன வேட என்றால் பாஜக உடைத்த கண்ணாடி அதிமுக அதை பாஜக ஒட்ட வைக்கும் முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை ஆனால் இப்போது நடக்கும் அரசியல் காரணமாக எடப்பாடி கே பழனிசாமி பொதுச்செயலாளர் என்ற பதவியையும் இரட்டை இலை சின்னத்தையம் இழக்க நேரிடும் என்பது உயர் நீதிமன்றம் நிலுவையில் உள்ள சூரிய மூர்த்தி வழக்கின் ரிசர்வ் செய்த தீர்ப்பு விரைவில் வரும் போது உணர்வார். அதேபோல தமிழக வெற்றிக் கழகம் நிலை தற்போது இன்னும் உத்வேகமாக அரசியல் களம் காணப்போகிறது வசமாக ஒருவர் சிக்கிவிட்டார்’ என ஆளாளுக்கு பேசுகிறார்கள்... அரசியல்!
தனது கட்சி ஆளே இல்லாத நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமலஹாசனும் பேசுவது தான் வேடிக்கை
ஒருவரின் பலஹீனத்தைப் பயன்படுத்தி, அவமதிப்பு செய்து பயமாக்கி அடிபணியவைப்பது அரசியல் நாகரிகமா..?
இல்லை கோமாளித்தனமா? அரசியலில் நாகரிகமெல்லாம் கிடையாது. வெற்றி, தோல்வி. என இரண்டு மட்டும் தான். தற்போது
தமிழ்நாட்டில் குடியேறச் சிறந்த ஊர், கரூரா... கள்ளக்குறிச்சியா.?என விவாதம் நடத்தும் கட்சிகள்
இரண்டு ஊர்களுமே சிறந்த ஊர்கள் தான். அரசியல்வாதிகளும் காவல்துறையில் சிலரும் செய்யும் தவறுகளால், எந்த ஊரின் பெயரிலும் எதிர்மறை எண்ணம் படியவிடக் கூடாது! என்பதே நமது கருத்து. திமுகவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் சிலர் நெருக்கம் என வீரியத்தை உணர்திய புஸ்ஸி ஆனந்த் கருத்து ஆடிப்போன விஜய்..!
‘‘புஸ்ஸி ஆனந்தை மீறி தவெகவில் எதுவும் செய்ய முடியவில்லை’ என விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோவை அப்போது கண்டுகொள்ளாத விஜய், தற்போது அதன் வீரியத்தை உணர்ந்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு மாத காலமாக பனையூர் அலுவலகம், நீலாங்கரை வீடு என்று மட்டுமே இருந்து வந்த விஜய் சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தவெக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி இருப்பதாக தெரிகிறது. 20 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமறைவாக இருந்த போது நடந்த இதே நிர்வாகிகளுடனான சந்திப்பில் சில அதிர்ச்சியான தகவல்கள் விஜய்க்கு எட்டியிருக்கிறது.
பல விஷயங்களை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தனது கவனத்துக்கே கொண்டு வரவில்லை என்பதை விஜய் உணர்ந்து கொண்டுள்ளார். கரூர் சம்பவத்திற்கு தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களின் அனுபவமில்லாத செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று விஜய் நம்புகிறார். மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையின் போது கரூர் சம்பவம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. அப்போது சம்பவத்திற்கான காரணத்தையும், தவறுகளையும் ஆராயாமல், ஒவ்வொரு நபரும் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டத் தொடங்கி இருக்கின்றனர்.
மாவட்டம், ஒன்றிய அளவில் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளை அறியக் காத்திருந்த விஜய்க்கு, இவர்களின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக விஜய்யின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு தகவல் தயார் செய்திருக்கிறார்.
அதில் 70 மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் திமுகவினருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதே போல் சில மாவட்டச் செயலாளர்கள் பணிகளை மேற்கொண்டாலும், அவர்களால் திமுகவுக்கு இணையான செல்வாக்கோ, பண பலமோ இல்லாததையும் குறிப்பிட்டுள்ளனர்.கழகத்தின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் பாதுகாப்பு திட்டமிடலுக்காக காவல் துறையில் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்க தலைவர் விஜய் திட்டம்.
அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற IB இயக்குனர், DGP, ADGP உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.
இந்த அதிகாரிகள் குழு பாதுகாப்பு திட்டமிடல், கட்சியின் தொண்டர் அணிக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவார்கள். அது போல அதிமுக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டானி மக்கள் கட்சி இணைகிறதா இல்லை விஜய் கட்சி கூடடணியில் இணைகிறதா ன்பது உறுதியாகாத நிலையில் “ஏ” கேட்டகிரி தொகுதிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் மருத்துவர் ராமதாசையும் அழைத்துக்கொண்டு வரச் சொன்னதாகவும் 10 சதவீதம் மட்டுமே தலைவர்கள் வைத்துள்ள மருத்துவர் ராமதாஸ் தரப்பிலிருந்து தகவல் கிளப்பிவிட்டுள்ளது.
இனி ஒரு போதும் மருத்துவர் ராமதாஸ், ஜிகே மணி, இரா.அருள் போன்றோரையெல்லாம் வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது. தற்போது கிடைத்துள்ள சுதந்திரத்தை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இழக்க விரும்ப மாட்டார். நான்கு சீட்டுக்கள் குறைவாக வாங்கினாலும் பரவாயில்லை, இணைவுக்கு வாய்ப்பே இல்லை.அது ஆறமாதம் ஆகலாம் இது தந்தை மகன் இருவரும் தங்கள் பக்கம் உள்ள சில துரோகிகளை விரடட நடத்தும் நாடகம் என்பதே நமது கருத்து,இணைவு தேவையும் இல்லை. இவர்கள் எல்லோருமே பாமகவின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் எனபதே தொண்டர்கள் கருத்து
இன்னும் ஒரு தகவல், கூட்டணி அமைச்சரவைக்கே பெருமளவு வாய்ப்பு. இப்போது வெளிப்படையாக இல்லை என்றாலும் கூட்டணி மந்திரிசபை குறித்தும் பேச்சு உண்டு. இவர்களை எல்லாம் இணைத்துக்கொண்டால் ஜிகே மணியை எல்லாம் மந்திரியாக்க வேண்டியதிருக்கும், எனவே இவர்கள் தேவையே இல்லை.
தவெக கூட்டணியில் வருமா, இல்லையா என்பதை பொறுத்து அறிவிப்பு விரைவில் வரும்
தற்போது இணைவு சாத்தியமில்லை, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் மருத்துவர் ராமதாஸ் அரசியல் ஓய்வு பெறுவார். சிலர் தாங்கள் எதிரிகளின் ஸ்லீப்பர் செல்லாக வேலை செய்யும் அல்லது நேரடியாகவே திமுகவிற்கு செல்வார்கள், மீதி நபர்கள் எல்லாம் மருத்துவர் அன்புமணி ஆதரவாகத் திரும்புவார்கள்.
பல தரப்பிலுள்ள கட்சியினர் மத்தியில் பேசப்படும் சரியான தகவலிது.எடப்பாடி கே. பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கவா விஜய் கட்சி துவங்க வைக்கப்பட்டார், அவருக்கு இருக்கும் கடலோர மாவட்ட மீனவர்கள் ஆதரவு மற்றும் கோவை அருந்ததியர் மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு ஏனபது எம்.ஜி. ஆருககு இருந்த ஆதரவு போலவே அதை இழக்க விரும்ப மாடடார் விஜய் மேலும் எடப்பாடி க. பழனிசாமியை எதிர்ககும் அமமுக மற்றும் செங்கோட்டையன் ஓ. பன்னீர் செல்லம் மற்றும் வி. கே.சசிகலா நடராஜன் உள்ளிட்ட பலரும் இணைந்து ஒரு அணி மற்றும் தங்களை ஏமாற்ளிய எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தில் உள்ள தேமுதிக மற்றும் புதிய தமிழகம் இணைந்து தற்போது புதிய பலம் பெறுகிறது.இனிமேல் தானே பாஜகவின் நிலைமப்பாடு தெரியும் ஆந்திரப் பிரதேச பவன்கல்யான் போல சசிகலா நடராஜன் சந்திரபாபு நாயடு நிலையில் வரப்போவது
விஜயா அல்லது அண்ணாமலையா என்பது தான் பாஜக முடிவுக்கு காத்திருக்கும் கட்சிகள் அதன் பின் மாறும் காடசிகள்.தெகல்ஹா நிறுவனம் மாத்யூ புகார் படி கொடநாடு கொலை வழக்கு எடப்பாடி பழனிசாமி சம்பந்நி மற்றும் செய்யாதுரை மீதான ஊழல் வழக்கு இனி முடிவு வரும் அப்புறம் தான் எடப்பாடி கே.பழனிசாமி பக்கத்தில் உள்ள பலரும் செங்கல் போல உறுவப்பட்டு அவரது பக்கம் உள்ள அதிமுக மாறும் நிலை வரும், தமிழ்நாடு அரசியலில் பாஜகவுடன் அதிமுக திமுக இரண்டுமே கூட்டணி மூலம் போட்டியிட்டவை தான் அது போல இன்னும் நிலை மற்ற கட்சிகள் எடுக்க வாய்ப்பு உண்டு























































கருத்துகள்