அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.
22 ஆம் தேதி காலை அங்கிருந்து, உலங்கு வானூர்தி மூலம் நிலக்கல் வருகிறார்.
நிலக்கல்லில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் குடியரசுத் தலைவர் பம்பா நதியில் நீராடவும் திட்டமிட்டுள்ளார்
பின்னர் பம்பாவிலிருந்து மலையேறி புதிய கூர்க்கா ஜீப்பில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்..
நமது பாரத நாட்டின் குடியரசுத் தலைவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை.
ஜனாதிபதி சபரிமலை வருவதன் காரணமாக அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.ஐப்பசி துலா மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி 2025 மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை அக்டோபர் மாதம் 18, ஆம் தேதி 2025 அதிகாலை 3:00 மணிக்கு நிர்மால்ய பூஜையைத் தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் நெய்யபிஷேகம் தொடங்கும்.
காலை 3:30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும்.
காலை 3:30 முதல் 7:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். காலை 7:30 மணிக்கு உஷ பூஜை தொடங்கும்.
அக்டோபர் மாதம் 22 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய உள்ளார்.


கருத்துகள்