காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர உறுப்பினர் செயலாளராக தருண் குமார் பிதோடே பொறுப்பேற்பு
2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி (I.A.S) அதிகாரியும், மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரியுமான தருண் குமார் பிதோடே, தேசியத் தலைநகர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் புதிய முழுநேர உறுப்பினர் செயலாளராக இன்று பொறுப்பேற்றார். இந்த நியமனம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய தருண் குமார் பிதோடே, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் மற்னறும் செயலாளர் பதவியை ஏற்றுள்ளார். அவர் 08.09.2029 வரை ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்