உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயற்சி!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை அறையில் வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசித் தாக்குதல் நடத்த முயன்றார். தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்பு அலுவலர்கள் பிடித்து அழைத்துச் சென்ற போது "ஜனாதனத்தை அவமதித்தால் இந்தியா பொறுத்துக் கொள்ளாது" எனக் கூச்சலிட்டதாக பேசப்படுகிறது.
"இது போன்ற சம்பவங்கள் தன்னைப் பாதிக்காது," என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் (SCAORA) உட்பட பல்வேறு தரப்பில் கண்டனக் குரல் எழுந்துள்ளது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை உறுவாக்கியுள்ளது. வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவரது காலணிகளைக் கழட்டி தலைமை நீதிபதி கவாயை நோக்கி வீச முயற்சிக்கிறார். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு தற்பொழுது அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தின் காவலர்களால் வெளியேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்க்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான வழக்குகள் விசாரிக்கப்பட்டன அந்த வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை நோக்கி அருகில் சென்றிருக்கிறார். சென்றிருக்கக்கூடிய நேரத்தில் தனது காலில் இருக்கக்கூடிய காலணியைக் கழட்டி அவர் மீது வீசுவதற்காக முயற்சித்திருக்கிறார்.
நல்வாய்ப்பாக அருகிலிருக்கக்கூடிய பாதுகாவளர்கள் உடனடியாக அவரை தடுத்ததன் காரணமாக இந்தத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த வழக்கறிஞரை உடனடியாக வெளியே அப்புறப்படுத்தியுள்ளார்கள். அவரை வெளியேற்றும் போது, ‘ஜனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' எனவும் கூச்சலிட்டுள்ளார். அவர் கூச்சலைப் பொருட்படுத்தாமல், நீதிமன்றப் பாதுகாவலர்கள் வழக்கறிஞரை வெளியேற்றினர்.உச்ச நீதிமன்றமே இதனால் பரபரப்பான சூழ்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “இது போன்ற விவகாரங்களில் கவனத்தை சிதறடிக்க வேண்டாம். தொடர்ந்து வழக்காடுங்கள். மேலும் இந்த விவகாரங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டாம். இது போன்ற விஷயங்கள் எந்தச் சூழலிலும் தன்னைப் பாதிக்காது எனக் கூறினார்.
காலணி வீச முயற்சித்த வழக்கறிஞர் அண்மையில உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் ஜனாதன தர்மம் குறித்தான ஒரு கருத்தை பேசியிருந்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வில் அவர் மீது ஒரு தாக்குதல் நடத்த முயற்சி செய்திருக்கிறார். வெளியேற்றக்கூடிய நேரத்தில் ஜனாதனத்துக்கு ஆதரவான கோஷத்தையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான கோஷத்தையும் அவர் முன்வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வழக்கறிஞர் சங்கம் Supreme Court lawyer suspended for trying to throw shoe at Chief Justice Gavai எனத் தகவல். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற வழக்கறிஞரை உடனடியாக இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவு .
இந்த இடைக்கால உத்தரவு, 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் இந்திய வழக்கறிஞர் கவுன்சில் விதிகள் (Bar Council of India Rules) – தொழில்முறை நடத்தை மற்றும் ஒழுக்க விதிகள் (Standards of Professional Conduct and Etiquette) – பகுதி VI, அத்தியாயம் II, பிரிவு 1, விதிகள் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகிறது.
இவ்விதிகள், ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், நீதிமன்றத்திடம் மரியாதையுடன் அணுக வேண்டும், மற்றும் சட்டவிரோதமான அல்லது ஒழுக்கமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.
முதற்கட்ட சான்றுகளின் அடிப்படையில், 2025 அக்டோபர் 6 ஆம் தேதி காலை சுமார் 11.35 மணிக்கு, இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிமன்றம் எண் 1-ல், நீங்கள் — டெல்லி வழக்கறிஞர் கவுன்சிலில் பதிவு எண் D/1647/2009 உடன் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் — உங்கள் ஸ்போர்ட்ஸ் செருப்பை கழற்றி, நடந்து கொண்டிருந்த வழக்கின் போது, இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) அவர்களை நோக்கி எறிய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது. உடனே பாதுகாப்பு பணியாளர்கள் உங்களை தடுத்து நிறுத்தினர்.
இத்தகைய நடத்தை, மேற்கண்ட விதிகளுக்கும் நீதிமன்ற மரியாதைக்கும் எதிரானதாகும்.
எனவே, நீங்கள் — வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் — உடனடியாக வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள்.
இடைநீக்க காலத்தில், நீங்கள் இந்தியாவில் எந்த நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகார அமைப்பிலும் தோன்றவோ, செயல்படவோ, வாதாடவோ அல்லது வழக்கில் பங்கேற்கவோ முடியாது.
உங்கள்மீது சட்டப்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடங்கப்படும்.
இந்த இடைநீக்க உத்தரவு தொடரப்பட வேண்டாம் என்று ஏன் கூறக்கூடாது என்பதை விளக்குமாறு, இவ்வுத்தரவு உங்களுக்கு வழங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் காரணம் காண்க நோட்டீஸ் (Show Cause Notice) வழங்கப்படும்.
டெல்லி வழக்கறிஞர் கவுன்சில், இந்த உத்தரவினை உடனடியாக செயல்படுத்தி, அந்த வழக்கறிஞரின் நிலையை தனது பதிவுகளில் புதுப்பித்து, தன் அதிகாரப்பரப்பிற்குள் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மற்றும் தீர்ப்பாயங்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவு, இந்திய உச்சநீதிமன்ற பதிவகம், அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவகங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் அனுப்பி, தாக்கல் மற்றும் தோற்ற அனுமதி பிரிவுகளுக்கும், மற்றும் சுப்ரீம் கோர்ட் பார்ச் சங்கம் (Supreme Court Bar Association) உட்பட தொடர்புடைய வழக்கறிஞர் சங்கங்களுக்கும் அறிவிக்கப்படும்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்த அடையாள அட்டை, நெருங்கிய அணுகல் அனுமதி (proximity pass) அல்லது எந்த நீதிமன்றம் அல்லது வழக்கறிஞர் சங்கம் வழங்கிய அனுமதியும், இந்த இடைநீக்க காலத்தில் செயலற்றதாகும்.
இந்த உத்தரவு, டெல்லி வழக்கறிஞர் கவுன்சிலின் வழியாகவும் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அது, உங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்ட பின், அதற்கான இணைவு அறிக்கையை (compliance report) டெல்லி வழக்கறிஞர் கவுன்சில், இந்திய வழக்கறிஞர் கவுன்சிலுக்கு இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவு வழங்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள், நீங்கள் இந்திய வழக்கறிஞர் கவுன்சில் அலுவலகத்திலும் டெல்லி வழக்கறிஞர் கவுன்சில் அலுவலகத்திலும் நேரில் ஒத்துழைப்பு ஆணைச் சத்தியப்பிரமாணம் (affidavit of compliance) தாக்கல் செய்து, அதன் நகலை நோட்டரி சான்றுடன் bciinfo21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அதில், இடைநீக்கம் காலத்தில் நீங்கள் எந்த வழக்கிலும் தோன்றவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவு, 1961 வழக்கறிஞர்கள் சட்டம் அல்லது பொதுச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பிற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்காது எங்கே போகிறது நாடு ?
இந்தியத் தலைமை நீதிபதியை, நீதி மன்றத்திலேயே, ஒரு வழக்கறிஞர் செருப்பாலடிக்க முயற்சி!
ஒட்டு மொத்த இந்தியர்களை அவமானப்பட வைத்த விஷயம்!!கட்சித் தலைவர்கள் தொடங்கி முதலமைச்சர்கள், பிரதமர் வரை கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
நாட்டையே உலுக்கிய சம்பவத்தில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் உரிமத்தை உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் உடனே தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.15 நாட்களுக்குள் அவர் விளக்கம் தர வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆனால் சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் வராததால் விசாரணைக்கு பிறகு அந்த வழக்கறிஞர் விடுவிக்கப்பட்டு விட்டதாக டில்லி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.








கருத்துகள்