உணவு பதப்படுத்துதலை வலுப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு ஒரு உத்திசார்ந்த முன்னுரிமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
தேசிய பாதுகாப்பு, ஊரகப்பகுதிகளின் செழுமை, பொருளாதார மீட்சி ஆகியவற்றை உறுதிசெய்வதில் முக்கிய பங்களிக்கும் இந்தியாவின் உள்நாட்டு உணவுப்பதப்படுத்துதல் திறனை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் அலுவலகம் பதிவிட்டுள்ளதற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்திருப்பதாவது:
“உள்நாட்டு உணவுப்பதப்படுத்துதலை வலுப்படுத்துதல் நாட்டின் பாதுகாப்பு முன்னுரிமை என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்துள்ள முன்முயற்சிகள் எவ்வாறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஊரக தற்சார்பை மேம்படுத்துகிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





கருத்துகள்