தேசபக்தியும், சமூக சேவை எண்ணங்களாலும் காலங்களைக் கடந்தும் ஆர்.எஸ்.எஸ். வளரும் என துணை குடியரசுத் தலலவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து
மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். ள் தலையாயக் கடமை.
தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்தி உணர்வும் தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்துள்ளதாக கருத்து
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :-
"இன்று உலகத்தின் மிகப் பெரிய தேச பக்தர் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடுகின்றது. மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். ன் தலையாயக் கடமை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் அத்துனை துணை அமைப்புகளும் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது
தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்தி உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்துள்ளன. அதனால்தான் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் சமுதாயம் இந்த இயக்கத்தை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பாரதம் உலகின் உன்னத தேசமாக, உலகத்திற்கு வழிகாட்டுகின்ற தேசமாக உலகின் குருவாக உயரும் நாள் தொலைவிலில்லை. இந்த வேள்வியில் ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு மகத்தானது. அது காலத்தைக் கடந்தும் வெற்றிகரமாகத் தொடரும்,".
எனக் கூறியுள்ளார். மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாயக்கடமை.
தொலைநோக்கு சமூகப் பார்வையும் தேச பக்தி உணர்வும் தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன.



கருத்துகள்