திருமாவளவன் கட்சியினர் வழக்கறிஞரைத் தாக்கியதைக் கண்டித்து உயர்நீதிமன்றங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
விசிகவின் திருமாவளவன்ன் வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதிய சம்பவத்தில் வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர் வழக்கறிஞர்கள்.
இந்தப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகவேல் “உயர் நீதிமன்றத்தில் திருமாவளவனுடன் வந்த குண்டர்கள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை சரமாரியாக தாக்கி விட்டார்கள்.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவர் உயிர் பாதுகாப்புக்காக எங்களது பார் கவுன்சிலுக்குள்ளே தப்பி ஓடும் போது அங்கேயும் விரட்டிச் சென்று அவரைச் சரமாரியாக அடித்து உதைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார்கள்.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், இதுவரை காவல்துறை எந்த விதமான வழக்கும் பதியவில்லை. அது சம்பந்தமான சிசிடிவி புட்டேஜையும் கொடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு கையில்தான் காவல்துறை இருக்கிறதா? அல்லது குறிப்பிட்ட யாருடைய கையில் காவல்துறை இருக்கிறதா? என்பது எங்களுக்கு ஐயமாக இருக்கிறது. ஆகவே நாங்கள் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு நீதி கேட்டு இன்று அனைத்து வழக்கறிஞர்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடரும். ராஜீவ் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இதில் அடிபட்டவருக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. இந்த பார் கவுன்சில் வழக்கறிகளுக்கான மன்றமாக இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. வருகிற பார் கவுன்சில் தேர்தலை வழக்கறிஞர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள போக்கிரிகளை எல்லாம் புறக்கணிக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள். வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்குத் தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு கட்சித் தலைவர்
வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய விசிக-வினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு வழங்கக் கோரியும் பார் கவுன்சில் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்.நடத்தினர்.!சென்னையில் பாரிமுனை அருகில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய திருமாவளவன் சார்ந்த விசிகவினருக்கு எதிராக
வழக்கறிஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர் .”முறைத்தார் அதனால் நான்கு தட்டுத் தட்டினார்கள்”.. ஒரு தலைவர் இப்படிச் சொல்லலாமா?.. தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில்லயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - கொந்தளித்த வழக்கறிஞர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சில தொண்டர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்ட ராஜீவ்_காந்தி வழக்கறிஞருக்கு நீதி கேட்டு இன்று சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னர் கண்டனப் போராட்டம் நடத்தியதில் பெரும் திரளாக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அதில் “விடமாட்டோம்.. விடமாட்டோம்.. வழக்கறிஞரைத் தாக்கிய குற்றவாளியை கைது செய்.. கைது செய்..! ” சென்னையில் திருமாவளவன் முன்னிலையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய வி.சி.க.வினருக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்..
அடாவடி நபர்கள் அணைவரையும் விடமாட்டாங்க போலயே. என மக்களுக்கு மத்தியில் பேசம் நிலை காணப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ராஜீவ் காந்திக்கு நீதி கேட்டு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர் அதற்கு முதல்நாள் கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்படி பேசலாமா? பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?” எனக் கொந்தளிக்கிறார் வழக்கறிஞர் முருகவேல்.
















கருத்துகள்