திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடியில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூபாய்.2 ஆயிரம் லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
கிராம நிர்வாக அஅலுவலர் அமோகன பூபதி பட்டா பெயர் மாறுதலுக்கு ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதால் கொடுக்க விரும்பாத இந்திரா காந்தி அதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று கிராம நிர்வாக அலுவலர் மோகன பூபதியிடம் அவர் பணி செய்யும் அலுவலகத்தில் வைத்து இந்திரா காந்தி அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மோகன பூபதியை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பிரான்பட்டிமில் பாலசுப்பிரமணியன் (வயது 32) கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். இவரது தந்தை தலையாரியாக வேலை பார்த்தவர் பணிக்காலத்திலேயே உயிரிழந்ததையடுத்து பாலசுப்பிரமணியனுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்தது. 2013 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த நிலையில் நேற்று களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் வந்துள்ளார்.
அப்போது பாலசுப்பிரமணியன், பட்டா மாற்றம் செய்ய வேண்டுமென்றால் லஞ்சமாக ரூபாய்.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். இவ்வளவு பணம் முதலில் என்னால் தர முடியாது எனக் கூறியிருக்கிறார். பிறகு "சரி, கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டித்துரை அதுபற்றி சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு த் துறையில் புகார் அளித்தார். அதன்பின்னர், அவர்கள் ஆலோசனைப்படி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.25 ஆயிரத்தை அரசு சாட்சி முன்னிலையில் பாண்டித்துரை கொண்டு வந்த பணத்தை கொடுத்து அனுப்பினர். அதன்பேரில், நேற்று அந்த பணத்தை சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் வைத்து பாலசுப்பிரமணியனிடம் கொடுத்து வாங்கியபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். தாலுகா அலுவலகத்தில் வைத்தே லஞ்சம் வாங்கிய கராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். இது போன்ற நிலை நீடிக்க காரணம் தாங்கள் ஊதியம் பெறும் அரசு பணியாளர்கள் என்பதை மறந்து அதிகாரம் உள்ளது என்ற தவறான மனநிலை தான் இவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். அவர்கள் தங்களை மக்கள் பணியாளர்கள் என்ற எண்ணம் வரும் நிலை மாறவேண்டும்






கருத்துகள்