காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் கட்டிய 10 மாடி கொண்ட தர்ம சத்திரத்தை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர் உத்தர பிரதேசத்தின் வாரனாசி எனும் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகம் சாரபில் ரூபாய்.60 கோடி மதிப்பில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த பின் விழாவில் பேசியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். அது மீண்டும் வெல்லும். இனி இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அதற்கு ஆதாரமாகத் தான் இந்த பிரம்மாண்டமான கட்டிடம் இந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. யாரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அது காலத்தைக் கடந்து பல வருடங்கள் ஆனாலும் நீதியும் சத்தியமும் மீண்டும் நிலைாநாட்டப்படும் என்பதைத் தான் இது காட்டுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு 2020 ல் நாடாளுமன்ற உறுப்பினராக காசிக்கு வந்தேன். பிரதமர் நரேந்திர மோடி, காசியின் வேட்பாளராக முதல்முறை போட்டியிட்ட நேரத்தில் தேர்தல் வேலைக்காக இங்கு வந்தேன். கிராமத்தில் ஒரு வாக்காளரிடம் பேசும் போது அவர், 'இங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை' என்றார். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ...
RNI:TNTAM/2013/50347