முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறந்த கல்வியும் ஒழுக்கமும் மோலோங்கிய டாக்டர் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி

சிறப்புச் செய்தியாளர்:- ரெங்கநாதன் திருப்பதி,                 தமிழ்நாட்டில் அணைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாமல் மிதிவண்டிகள் வழங்கப்படும் திட்டத்தின் படி நீண்ட தூரத்திலிருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உதவுவது, கல்வி கற்பதை ஊக்குவிப்பு நோக்கத்தில்



2001-2002: ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவால், பெண் கல்வியை ஊக்குவிக்க 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி

2005-2006: ஆம் கல்வியாண்டு இந்தத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2025-26 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5.37 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியர் இலவச சைக்கிள் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 193.06 கோடி ரூபாயும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, துறை சார்பில், நடப்பாண்டு 80 கோடி ரூபாயம் ஒதுக்கப்பட்ட நிதியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்கள் வாங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டது.  சைக்கிளில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 26' என்ற லோகோ உள்ள சைக்கிள்கள் வழங்கப்பட்டது


மாணவர்கள் மாணவியர்  பிற்படுத்தப்பட்டோர் 83,581 1,08,207 1,91,788 ம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 81,952 1,00,311 1,82,263 ம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 68,687 87,780 1,56,467   ம் இதர பிரிவினர் 2,652 3,575 6,267 ம் என மொத்தம் 2,32,872 2,99,873 5,36,745 மாணவ மாணவியர்களாகும்



கடந்த 14.11.2025 ஆம் தேதியன்று மாநில அரசு சாரபில் துணை முதலமைச்சர் துவக்கி வைத்த நிலையில் 22.11.2025 ஆம் தேதி டாக்டர் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 327 நபர்கள் 11 ஆம் வகுப்பு படிக்கும் நிவையில்  297 மாணவர்களுக்கு  அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் பள்ளிக்குழுத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் க.ரவி  வழங்கினார், நிகழ்ச்சியில் பதிவாளர்  மற்றும் பள்ளிக் குழுச் செயலாளர்,  முனைவர் அ.செந்தில்ராஜன். உறுப்பினர் பள்ளியின் குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியருமான டாக்டர் த. ரமேஷ் மற்றும்,  பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர், இந்த நிலையில் தேவகோட்டை மற்றும் சாக்கோடடை ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார்

1400 மாணவ மாணவிகளுக்கும் இங்கிருந்து தான் சைக்கிள் பூட்டப்பட்டுச் சென்றது  வழங்காமல் விடுபட்ட மணவர்களுக்கு தலைமை ஆசிரியர் டாக்டர் த. ரமேஷ் பள்ளியில் சைக்கிள் வழங்கினார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா மாதிரி பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக டாக்டர் த.ரமேஷ் சிறப்புடன் செயல்படுகிறார்  அவர் படிக்கும் மாணவர்களுக்கு சகல வகையில் உதவி செய்நு அரசின் நலத்திட்டம், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும். விரும்புகிறார். காரைக்குடியில் 1951 ஆம் ஆண்டு  வள்ளல் டாக்டர் அழகப்ப செட்டியார் துவங்கிய அழகப்பா உயர்நிலை பள்ளியை 1978 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி துவங்கி பவளவிழாவாக 75 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.                  வள்ளல் டாக்டர்  அழகப்பச் செட்டியார் பிஎட் கல்லூரி ஆரம்பிக்கப்படும்போது நிறுவப்பட்ட பள்ளி தான் அழகப்பா மாதிரி பள்ளி.

அழகப்பச் செட்டியாரால் பி எட் கல்லூரி நிறுவப்பட்ட போது அதன் பெயர் ட்ரெயினிங் காலேஜ் ஆகும். பிற்காலத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இது இணைக்கப்பட்ட போது ஃபேக்கல்டி ஆஃப் எஜுகேஷன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அழகப்பச் செட்டியார் அவர்கள் பி எட்  கல்லூரியை நிறுவும் போது, பயிற்சிப் பள்ளி ஒன்று தேவை என்பதை அறிந்து துவங்கப்பட்ட பள்ளிகூடம் இதுவாகும்.

 இப்படிக்கு மிகப்பெரிய முன்னாள் மாணவர் அமைப்பு இருக்கிறது.

 முன்னாள் மாணவர்கள் அமைப்பின் மூலம் பள்ளிக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

 முன்னாள் மாணவர் அமைப்பு மூலம் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கட்டித் தரப்பட்டு மிகச் சிறப்பாக இது நாள் வரையும் இயங்குகிறது என்பது மிக பெருமைக்குரிய ஒரு தகவல்.     அழகப்பா பல்கலைக்கழகம் கல்லூரியாகத் துவங்கியதும், அதன் நிர்வாகத்தின் கீழ் அழகப்பா மாதிரிப் பள்ளியை இணைத்து விட்டனர். வள்ளல் டாக்டர் அழகப்பர் கல்லூரிக் கல்வி நிலையங்களை துவக்கியதால், காலப்போக்கில் தமிழ்நாடு அளவில் சிறந்த கல்வி நகர் என்ற பெருமையுடன் கூடிய பெயரைப் பெற்ற காரைக்குடி அதை இப்போது வரை தக்க வைத்து வருகிறது. அதற்கு பின் அரசிடம் இப்பள்ளியை ஒப்படைத்தனர். இருப்பினும் நிர்வாகம் மட்டும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் நடந்து வருகிறது. இப்பள்ளிக்குழுத் தலைவராக துணைவேந்தர், செயலாளராக பதிவாளர், உறுப்பினர்களாக முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பி.எட்., கல்லுாரி முதல்வர், சிண்டிகேட் உறுப்பினர், மூத்த ஆசிரியர் ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர்  நிர்வகித்து வருகின்றனர். அதே நேரம் இப்பள்ளி வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்கள், கட்டிடம் ஆகியவை அரசு பெயரிலேயே உள்ளது.

1350 மாணவர்கள்பள்ளியில் தற்போது பல பகுதிகளில் இருந்து வந்து படித்து வரும் நிலையில் விடுதியில் தங்கி 1,350 மாணவர்கள் வரை படிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் 21, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 19, சிறப்பு ஆசிரியர்கள் என 43 பேர் வரை பணிபுரிகின்றனர். ஆண்டு தோறும் பிளஸ் 2 முடித்து 300 மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். பெயரில் மட்டுமே அழகப்பா மாதிரி பள்ளி என உள்ளது. ஆனால், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில் கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு இல்லை. என்பதே குறை 1985 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் பி.எட்., கல்லுாரி துவக்கிய பின், பி.எட்., படிக்கும் மாணவர்களின் பயிற்சிக் களமாக அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளி இருந்து வருகிறது. அரசு பள்ளிக்கான சலுகைகள் தேவை அதை அரசு செய்து தர வேண்டும், 

இப்பள்ளி  ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் சம்பளத்தைப் பெற்றபோதும், கல்வித்துறை அலுவல் ஆவணங்களில் தொடர்ந்து 'தனியார் பள்ளி' என்றே குறிப்பிட்டு வருவதால், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் சலுகை எதுவும் கிடைக்கவில்லை. எனவே அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் நலத்திட்டம், இடஒதுக்கீடு கிடைக்க தமிழ்நாடு முதல்வர் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பலரும் விரும்பும் நிலை, இப்பள்ளி ஒழுக்கம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் படி தொடரும் நல்ல நிர்வாக அமைப்பு தான் காரணம் 


."கோடி கொடுத்த கொடைஞன்

குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்

தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்

அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு" என கல்லூரிப் பேராசிரியர் தமிழறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் வாழ்த்தும் நிலையில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையும் தாண்டி, உலக நாடுகளிலும் பெயரும், புகழும் பெற்றவர் கல்விக் கொடை வள்ளல் கோட்டையூர் டாகடர் அழகப்ப செட்டியார்.புகழ் கூறும் கல்வி நிறுவனம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...