முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு ஒரு உணவு விற்பனைக்கடையில் வாரம் தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கி மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கியதாக சில பில்களின் நகல்களும் பதிவு ஒன்றும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் பிரபுவின் படத்தைப் பார்த்ததும் அவரை அறிந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி. காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே அவரை நன்கு அறிந்தவர்கள் பலர் களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகை ஊடகவியலாளர்கள். 

பல்வேறு காவல் நிலையங்கள் துறைகளிலும் பணியாற்றினாலும் எந்தவித எதிர்மறையான பெயரும் பெறாதவர்.   

அந்த பில் நகல்கள் பத்தாயிரம் ரூபாய் என்றெல்லாம் கணக்குக் காட்டவில்லை, ஒன்றிரண்டு பில்கள் Complementary என்று தான் உள்ளன. அதுவும் சிறு தொகைக்குத்தான்.  ஆக, ரூபாய் 10,000, 20,000, 40,000 எல்லாம் இல்லை அங்கே.

Mob does'nt think என்பார்கள். அதாவது கூட்டம் சிந்திப்பதில்லை. கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து அதோ திருடன் ஓடுகிறான் என்று எவரைக் கை காட்டினாலும் கூட்டம் அவரை அடித்துக் கொன்றுவிட்டு பிறகுதான் யோசிக்கும். 

அதுபோலதான் சமூக வலைத்தளங்களும். ஒருவரின் படத்தைப் போட்டு, ஒன்றிரண்டு பில்களை வைத்து மாதம் ரூபாய் 40,000, மாதம் ஒரு லட்சம் என்றெல்லாம் எழுதி விட்டால் இது சாத்தியமா, இது உண்மையாக இருக்குமா என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை இந்த சமூக வலைதளக் கூட்டம். உடனே பார்த்தீர்களா ? ஐய்யோ ஐய்யயோ என்று கூப்பாடு போடுவார்கள்.  

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை 25 ரூபாய் என்றால் கௌரவமாக வாங்கி வரும் நபர்கள் அதே கறிவேப்பிலையை தலையில் சுமந்து கொண்டு 10 ரூபாய்க்கு விற்கும் கீரைக்காரம்மாவிடம் இரண்டு ரூபாய் குறைக்கச் சொல்லி சண்டை போடுவார்கள்.

கேஸ் சிலிண்டர் நிறுவனம் 200 ரூபாய் விலை ஏற்றினாலும் வாயை மூடிக்கொள்கிறவர்கள் அந்த சிலிண்டரைத் தோளில் சுமந்து கொண்டு ஐந்து மாடி ஏறி வருபவரிடம் எதுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கேட்கிறாய்  எனச் சண்டையிடுவார்கள். 

இதுதான் இன்றைய சமூக வலைதள நபர்கள் மனநிலை. அங்கீகரிக்காத அனுமதி இல்லாத செய்தியாளராக இவர்கள் மாறி விடுகிறார்கள் சரி அது ஒருபுறம் இருக்கட்டும். 

சின்னதாக அரசியல் ஜாதிக்கட்சியும், கல்வி நிறுவனமும் நடத்தும் நபர்களின் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய நடிகர் பெயர் கொண்ட செய்தியாளர் ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு இட விவகாரத்தின் வழக்கு தொடர்பாக அவர் சொல்வதைப் போல காவல் ஆய்வாளர் பிரபு  செய்த் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்,

"இல்லை, நியாயமில்லை அப்படி செய்து தர முடியாது, " என ஆய்வாளர் பிரபு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து இந்தப் பிரச்னையை அந்த தொலைக்காட்சி குழுமத் தலைமையிடம் எடுத்துச் சொல்கிறார் காவல் ஆய்வாளர் பிரபு மேலும், அதற்கான தொலைபேசி, காணொலிச் சான்றுகளையும் அந்த தலைமைக்கு அனுப்பி வைக்கிறார் ஆய்வாளர் பிரபு.

இதையடுத்து அந்தச் செய்தியாளரை நிர்வாகம் இடை நீக்கம் செய்கிறது அந்த செய்தி நிறுவனம். 

இப்படிப்பட்ட நிலையில் அந்த உணவகத்திற்குச் சென்று ஆய்வளர் பிரபு பெயரில் உள்ள ஒன்றிண்டு Complementary பில்களை எடுத்து திரைப்படப் பாடலில் வருவது போல மானே தேனே பொன்மானே என்றெல்லாம் எழுதிஅப்போதே ஒரு சிறு பிளாக்மெயில் பத்திரிகை ஒன்றில் ஆய்வாளர் பிரபு குறித்து ஒரு அட்டைப்படச் அவதூறுச் செய்தி வெளிவருகிறது. 

இது நடந்து சுமார் 25 நாட்களுக்கும் மேலாகிறது. 

அதே கதையைத்தான் தற்போது சமூக ஊடகங்களிலும் வலம் வர வைத்திருக்கிறார்கள். 

இறுதியில் இது பொய் என்று பிலால் நிறுவனம் கடிதம் மூலம் மறுத்துள்ளது. 

ஆய்வாளர் பிரபு ஒரு கொலையாளியைத் தப்பிக்க வைக்க 10 கோடி ரூபாய் பெற்றுவிட்டார், என ஏதாவது சான்று, ஆதாரங்களோடு நிரூபித்தால் கூட அதில் ஒரு logic இருக்கும். காரணம் ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலையப் பகுதி OMR சாலையில் 25 ஆணடுகளாக IT கம்பெனி நிறைந்த மக்கள் வாழும் பகுதி 

பிலால் ஓட்டலில் பிரியாணி வாங்கியது, நாயர் கடையில் டீ வாங்கியது, வடநாட்டு பானி பூரி கடையில் சுண்டல் வாங்கியது, பாய் கடையில் பாயா வாங்கியது எல்லாம் ஒரு புகார் ?  தகுதி இல்லாத வதந்தி

இது அப்பட்டமான அவதூறு மட்டுமல்ல வெளிப்படையான மிரட்டலும் கூட. 

மேலும், தமிழ்நாட்டின் பத்திரிகை ஊடகத் தரம் எந்த அளவுக்கு இது போன்ற நபர்கள் மூலம் மட்டரகமாக மாறிவிட்டது என்பதற்கான சமூக வலைத்தளங்களில் கூட செய்தி நிறுவனமாக மாறகிறது மற்றுமொரு சான்று. 

காவல் துறை உள்ளிட்ட பல துறயினரில் ஒரு சிலர் தவறு செய்தால் அதைக் கண்டித்து எழுதும் பத்திரிகை ஊடகவியலாளர்கள் பத்திரிகை ஊடகம் தவிர சமூக வலைதளங்களில் எழுதும் நிலை குற்றம் என உணரவில்லை இவர்கள் மீது ஒக்கியம் துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் பிரபு துறை அனுமதி பெற்று இவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்  என்பதே பலருது கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...